குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

ந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியர்கள் சாதாரண கார்களை விட கிராஸ் ஓவர் அல்லது எஸ்யூவி ரக கார்களை தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் கார் தயாரிப

By Balasubramanian

இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியர்கள் சாதாரண கார்களை விட கிராஸ் ஓவர் அல்லது எஸ்யூவி ரக கார்களை தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய மாடல் கார்களில் எஸ்யூவி ரக கார்களை அதிகமாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

மாருதி சுஸூகி, ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார்ஸ், நிஸான் ஆகிய பிராண்டுகளில் புதிய சிறிய ரக எஸ்யூவி கார்கள் அறிமுகமாகவுள்ளது. இந்த கார்கள் எல்லாம் 6 லட்ச ரூபாயக்கும் குறைவான விலையில் விற்பனைக்குவரவுள்ளன.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

இந்தியாவிற்கு புதிதாகவரவுள்ள பிஎஸ்ஏ குழுமமும் சிறிய ரக எஸ்யூவி கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளன. மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஓய் கே கார் 2019ம் ஆண்டு இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வருகிறது.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் 445, கார் 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த காரை விரைவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

ஹூண்டாய் நிறுவனமும் 2021-2022ம் ஆண்டுகளில் மைக்ரோ எஸ்யூவி ரக கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. டட்சன் நிறுவனமும் எஸ்மால் கோ என்ற க்ராஸ் எஸ்யூவி ரக கார்களை இன்னும் இரண்டு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

இது குறித்து டாடா மோட்டார் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை தலைவர் மாயன்க் பாரீக் கூறுகையில் :" கடந்த சில ஆண்டுகளாக ஹெட்ச் பேக் ரக கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது வாகனத்தை மாற்ற முடிவு செய்துள்ளனர்.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

பெரும்பாலும் கார் வாங்குவதில் 58 சதவீதமானோர் 6 ஆண்டுகளில் காரை மாற்றி விடுகின்றனர். அவர்களுக்கு மைக்ரோ அல்லது சிறிய எஸ்யூவி கார்கள் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்."என கூறினார். அவர் டாடா நிறுவனத்திலிருந்து புதிதாக அறிமுகமாகவுள்ள மைக்ரோ அல்லது சிறிய எஸ்யூவி ரக கார்கள் குறித்து கேட்ட போது அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

இந்த எஸ்யூவி மற்றும் க்ராஸ் ஓவர் கார்கள் பெரும்பாலும் சிறிய ரக பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இதில் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. மஹிந்திரா கேயூவி 100, மாருதி சுஸூகி இக்னீஷ் ஆகிய கார்கள் இதே ரக கார்களாகவும் குறந்த விலையும் கிடைக்கிறது.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

மஹிந்திரா நிறுவனம் கேயூவி எலெக்ட்ரிக் எஸ் 110 என்ற எலெக்ட்ரிக் காரை அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. புதிதாக அறிமுகமாகவுள்ள இந்த எஸ்யூவி கார்கள் பெரும்பாலும் நிஜமான எஸ்யூவி கார்களாக இல்லை.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

மாறாக அதிக உயரம், உயரமான சீட்டில் போஷிஷன், உடன் எஸ்யூவி கார் போன்ற வடிவத்தில் இருக்கும். ஆனால் குறைந்த திறன் படைத்த ஹெட்ச்பேக், சிறிய கார்கள் போன்ற திறனில் செயல்படும். இந்த ரக கார்கள் 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி கார்களான ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட், மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா போன்ற ரகத்தை சேர்ந்தவையாக இருக்கும்.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

இது குறித்து ஆட்டோமொபைல்துறை வல்லுநர் கவ்ரவ் கூறுகையில்:" இந்தியாவில் சமீபமாக என்ட்ரி லெவல் எஸ்யூவி கார்களுக்கு அமோகமான வரவேற்பு இருக்கிறது. காம்பெக்ட் எஸ்யூவி வகையில் இந்த கார்கள் 35 சதவீத மார்கெட்டை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

அதாவது இன்னும் 3-5 ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கு 3.5 லட்சம் கார்கள் என்ற இலக்கை எட்டும் என எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா கேயூவி 100 கார் அறிமுகமான பின்பு மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. வரும் காலத்தில் இது போன்ற கார்கள் அதிகமாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. " என கூறினார்.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

இந்தியாவிற்கு புதிதாக வரவுள்ள பிஎஸ்ஏ நிறுவனமும் மூன்று ஸ்மார்ட் வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். ஒரு வாகனத்தை இக்னீஷ் மற்றும் கேயூவி 100 ஆகிய வாகனங்களுக்கு போட்டியாகவும் களம் இறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறைந்த விலையில் எஸ்யூவி கார்கள்; கார் நிறுவனங்கள் பலே திட்டம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Carmakers Woo Hatchback Owners with Affordable SUVs. Read in Tamil
Story first published: Monday, August 20, 2018, 14:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X