வரலாறு காணாத வகையில் குறைக்கப்படுகிறது பெட்ரோல் விலை... மோடியின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்

நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விலை எவ்வளவு குறைகிறது? அதற்கான காரணங்கள் என்ன? என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விலை எவ்வளவு குறைகிறது? அதற்கான காரணங்கள் என்ன? என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையிலான சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

இதனால் நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மிக மிக அதிகப்படியான விலையில் விற்பனையாகி கொண்டிருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வரும் வரிகள்தான்.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் தற்போது விதிக்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல் ஆகியவை மிக அதிகமான விலையில் விற்பனையாகி கொண்டிருப்பதற்கு இந்த வரிகள் அனைத்தும் மிக உயர்வாக இருப்பதும் ஓர் முக்கிய காரணம்.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

எனவே பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில், ஒரே ஒரு வரி மட்டுமே என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக குறையும்.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

ஆனால் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை இழந்து விடக்கூடாது என்பதற்காக பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டவே இல்லை. எனவே தொடர்ந்து அதிகப்படியான விலையில்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

இதனால் மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீது நாடு முழுவதும் உள்ள மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அப்படி இருந்தும் கூட போதுமான அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவே இல்லை.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

இந்த சூழலில் நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் பரபரப்பு தொடங்கி விடும். அப்போதும் பெட்ரோல், டீசல் விலை இதே நிலையில் நீடித்தால், தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படுவது உறுதி.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

எனவே நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் மற்றும் டீசலை மத்திய அரசு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

இதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு சிந்தித்து வருகிறது என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 20-30 ரூபாய் வரை குறையும். இது நாட்டின் நடுத்தர வர்க்க மற்றும் சாமானிய மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்'' என்றார்.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

பெட்ரோல், டீசல் விலையை பெருமளவில் குறைக்காவிட்டால், விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியதிருக்கும் என்பதை மத்திய அரசு உணர்ந்து கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

எனவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை வெகு விரைவில் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த சில நாட்களாகவே, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை ஓரளவிற்கு குறைக்கப்பட்டே வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

தமிழக தலைநகர் சென்னையில் கடந்த அக்டோபர் 25ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 84.28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்றைய நிலவரப்படி (நவம்பர் 3) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 82.06 ரூபாய் மட்டுமே.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

அதாவது கடந்த 8 நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2.22 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னையில் கடந்த அக்டோபர் 25ம் தேதி ஒரு லிட்டர் டீசல் 79.15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 77.70 ரூபாய் மட்டுமே.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

அதாவது கடந்த 8 நாட்களில் ஒரு லிட்டர் டீசலின் விலை 1.45 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு இம்மாத கடைசி மற்றும் அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

இதை மனதில் வைத்து கொண்டுதான் மத்திய அரசு கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல், குறைத்து கொண்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயங்களில் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வதும் ஒன்றும் புதிதல்ல.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைகிறது! மத்திய அரசின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்...

இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதை மனதில் வைத்து கொண்டு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவே இல்லை. ஆனால் தேர்தல் முடிந்ததுதான் பாக்கி. உடனடியாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி விட்டது. அதன்பின்புதான் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சங்களை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக கருதப்படும் ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Central Government Contemplating To Bring Petrol, Diesel Under GST. Read in Tamil
Story first published: Saturday, November 3, 2018, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X