நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

இந்தியாவில் இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து கொள்ளலாம். சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க எந்தவிதமான லைசென்ஸ்களையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று

இந்தியாவில் இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து கொள்ளலாம். சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க எந்தவிதமான லைசென்ஸ்களையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகமாவதோடு, புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிறது.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் பெட்ரோல் விலையை சமாளிக்க இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே வழியாக பார்க்கப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தான். பெட்ரோல் இல்லாமல் முழுமையாக பேட்டரி பவரில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களால் மாசு ஏற்படுவதும் குறைகிறது.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

இதன் காரணமாக மத்திய அரசு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகிறது. மஹிந்திரா, ஹீரோ உள்ளிட்ட சில பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க துவங்கிவிட்டனர்.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

தற்போது டில்லி, மும்பை, பெங்களூரு, புனே, ஆமதாபாத் ஆகிய இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் வாகன விற்பனைக்கு பெரிய தடையாக இருப்பது என்றால் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய இந்தியாவில் போதுமான அளவிற்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாததுதான் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்கள் அதிகமாக திறக்கப்பட்டால் எலெக்ட்ரிக் வாகன விற்பனை தற்போது உள்ளதை விட பல மடங்கு அதிகமாகும் என தெரிகிறது. இதற்கிடையில் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகமாக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

அதன் படி இனி தனி நபர்கள் யார் வேண்டுமானாலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை துவக்கலாம் என்ற முறை விரைவில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை துவக்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த தகுதியும் நிர்ணயிக்கவில்லை. இதனால் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவங்க உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அதே சமயம் நாட்டில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜ் ஏற்றும் மையங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும், ஓலா, உபர் போன்ற வாடகை கார் இயக்கும் நிறுவனங்களும் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மின்சார விநியோகம் செய்வதற்கான கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க உள்ளது.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

ஒவ்வொரு 3 கி.மீ.,க்குள் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் உரிமம் பெறாமலேயே சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கலாம் என அரசு கூறி இருப்பதன் மூலம் சிறு தொழில்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

டில்லி, புனே, மும்பை, பெங்களூரு, ஆமதாபாத் உள்ளிட்ட முக்கியமான 9 நகரங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கும் பொறுப்பு பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

இது தவிர போக்குவரத்து நெரிசல் மிகுந்த 11 நெடுஞ்சாலைகள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு 25 கி.மீ.,க்கும் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
central govt took action to increase charging stations in india. Read in Tamil
Story first published: Friday, November 9, 2018, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X