போலீஸூக்கு செம வேட்டை...! ஹெல்மெட் கட்டாயம்; கோர்ட் உத்தரவு

பைக்கில் பின்னாடி உட்காந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக நட

By Bala

பைக்கில் பின்னாடி உட்காந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக நடைமுறைப்படுத்தி வரும் அக். 23ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த 2015ம் ஆண்டில் நீதிபதி கருணாகரன் உத்தரவிட்ட பின்பு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. முன்னதாக இது தொடர்பாக பல்வேறு தீர்ப்புகளும், சட்டங்களும் கொண்டு வரப்பட்டாலும் பெரிய அளவில் நீண்ட காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

2015ம் ஆண்டு வெளியான தீர்ப்பிற்கு பின் பெரிய அளவில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை காவலர் ஒருவர் எட்டி உதைத்ததில் மனைவி பரிதாபமாக பலியானார்.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

இந்நிலையில் சென்னை கோட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

இந்த வழக்கு கடந்த செப்.5ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது கடந்த 2015ம் ஆண்டிற்கு பின் ஹெல்மெட்டை கட்டாயப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

அத்துடன் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் நீதிபதிகள் மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்தனர்.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

அப்போது முதல் தமிழகத்தில் மீண்டும் ஹெல்மெட் குறித்த பேச்சு பரபரப்பானது. பல இடங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதிக்க துவங்கினர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

அப்போது ஹெல்மெட் அணிவது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், விளம்பர யுக்திகள் குறித்தும், போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2015ம் ஆண்டு வெளியான தீர்ப்பிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

அதனை படித்த நீதிபதிகள், ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறையை, காவல்துறை சரியாக அமல்படுத்தவில்லை. அமல்படுத்துவதற்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கையில் திருப்தியில்லை என தெரிவித்தனர்.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

மேலும் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதாது. ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் என்பதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். மக்களை பின்பற்ற வைக்க வேண்டும் என கூறினர். மேலும் இந்த வழக்கில் இன்று (20ம் தேதி) உத்தரவு பிறப்பிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு கடுமையாக பின்பற்றவேண்டும் எனவும், யாருக்காவும், எதற்காகவும் சட்டத்தை பின்பற்றுவதில் மெத்தனம் காட்ட கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஓட்டுநர் மட்டும் அணிந்து செல்வதை ஏற்றுகொள்ள முடியாது. அதே போல காரில் செல்லும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை அரசு கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் கட்டாயம் கோர்ட் உத்தரவு

கட்டாய ஹெல்மெட் அரசாணையில் உள்ள விதிகளை சரியாக பின்பற்றி அது குறித்த அறிக்கையை வரும் அக்.23ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் அக். 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Most Read Articles
English summary
chennai high court new orders on helmet issue. Read in tamil
Story first published: Thursday, September 20, 2018, 17:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X