உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

சென்னையில் சில இளைஞர்கள் முறையான ஆவணங்களுடன் உயர்ரக பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்த போலீசார் அவர்களின் பைக்கில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர்கள் பொருத்தப்ப்டடிருப்பதாக கூறி அபர

By Bala

சென்னையில் சில இளைஞர்கள் முறையான ஆவணங்களுடன் உயர்ரக பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்த போலீசார் அவர்களின் பைக்கில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர்கள் பொருத்தப்ப்டடிருப்பதாக கூறி அபராதம் விதித்துள்ளனர். அவர்கள் பொருத்தியிருப்பது சட்டவிரோதமான சைலன்ஸர் இல்லை என்பதை நிரூபிக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

இந்தியாவில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் அதிக அளவில் மீறப்பட்டு வருகின்றன. இதற்காக போலீசாரும் பல்வேறு சட்டங்கள் போட்டாலும் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை கண்டுபிடித்து அதன் வழியாக தப்புகளை தொடர்ந்து செய்து வருபவர்கள் ஏராளம்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களை நடத்தி வருகின்றனர். இதில் இந்திய இளைஞர்கள் செய்யும் மிக அபாயகரமான விஷயம் ரோட்டில் ரேஸ் ஓட்டுதல் மற்றும் மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக சத்தத்தை எழுப்பி கொண்டு வாகனம் ஓட்டுதல்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

குறிப்பாக சென்னையில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் ரோட்டில் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, பொதுமக்களுக்கு இடையூறு செய்வது என அதிக அளவில் தவறுகள் நடந்து வருகிறது.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் முக்கியமான விஷயம் அதிக சத்தத்துடன் வாகனம் ஒட்டுவது தான். இதற்கு முக்கியமான காரணம் வாகன தயாரிப்பு நிறுவனம் அளிக்கும் சைலன்சர்களை மாற்றிவிட்டு வெளிமார்கெட்டில் கிடைக்கும் அதிக சத்தம் அல்லது ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற சத்தம் எழுப்பும் சைலன்ஸர்களை மாற்றுவது தான்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

முக்கியமாக ராயல் என்பீல்டு பைக்குகளை வைத்திருப்பவர்கள் இது போன்ற சைலன்ஸர்களை மாற்றுவது அதிகமாக நடந்து வருகிறது. ஆனால் இது சட்டப்படி குற்றம். அதனால் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை டிராபிக் போலீசார் பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

இந்நிலையில் சென்னையை சேர்ந்த சில இளைஞர்கள் தங்களின் சூப்பர் பைக்குகளான, டுகாட்டி, கவாஸகி நின்ஜா, பென்னலி உள்ளிட்ட பைக்குகளில் சென்னை ஈசிஆர் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

அப்போது அவர்களிடம் போலீசார் அவர்களது பைக்கில் அதிக சத்தம் வரும் சைலன்ஸர்களை சட்ட விரோதமாக பொருத்திருந்ததாக கூறி அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதை அந்த இளைஞர்களில் ஒருவர் தனது ஹெல்மெட் கேமராவில் பதிவு செய்து சமூக வலை தளத்தில் டிராக் சரத் என்ற யூடிப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

அதில் சூப்பர் பைக்குகளுடன் இளைஞர்கள் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது ஒரு டிராபிக் போலீசார் அவர்களை வழி மறித்து அதில் உள்ள ஒருவரிடம் பைக்கின் சாவியை பிடுங்க முற்பட்டார். உடனடியாக வீடியோ எடுப்பவர் குறுக்கிட்டு தாங்களே வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு ஆவணங்களை காட்டுவதாக கூறியபின்பு அவர் விலகி செல்கிறார்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

பின்பு இளைஞர்கள் தங்கள் வண்டியை நிறுத்தி போலீசாரிடம் ஆவணங்களை காட்டுகின்றனர். அப்பொது போலீசார் இளைஞர்கள் சென்ற பென்னலி டிஎன்டி 600ஐ பைக்கை சுட்டிக்காட்டி அதில் உள்ள சைலன்ஸர் வெளிமார்கெட்டில் வாங்கி பொருத்தப்பட்ட சைலன்ஸர் எனவும், இது சட்டவிரோதமான சைலன்ஸர் எனவும் அவர்கள் போலீசாரிடம் சொல்கிறார்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

இளைஞர்களும் அது பைக் நிறுவனமே மாட்டி கொடுத்த சைலன்ஸர்தான் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்ய துவங்கினர். அதிக நேரம் வாக்குவாதம் செய்து போலீசாருக்கு அது முறையான சைலன்ஸர் தான் என்பதை புரிய வைக்க பல வகையில் முயற்சிகளை செய்தனர்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

கடைசி வரைமுடியவில்லை. முடிவில் அந்த இளைஞர்கள் போலீசாரிடம் அபராதத்தை கட்டிவிட்டு செல்கின்றனர். இந்த காட்சி முழுமையாக வீடியோவாக எடுக்கப்பட்டு சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதை நீங்கள் கீழே காணலாம்.

இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஆங்காங்கே நடந்து வருவது சகஜமாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் தன்மை குறித்து, உள்ளூர் போலீசிற்கு சரியாக தெரிவதில்லை. இதுவே இவ்வாறான சம்பவங்களுக்கு முக்கிய காரணம்.

உயர்ரக பைக்குகளை பார்த்தாலே “வசூல்” செய்யும் சென்னை போலீஸ்… ! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

பாலாவின் பார்வையில்:

இந்தியாவில் அதிக சத்தம் வரும் சைலன்ஸர்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுப்பது கட்டாயம்தான். ஆனால் அதே நேரத்தில் இது போன்ற குழப்பங்களும் போலீசாருக்கு அவ்வப்போது ஏற்படுகிறது. அதனால் முறையாக அனுமதிக்கப்பட்ட சைலன்ஸர்களுக்கான ஒரு எண்ணை வழங்கி அதை ஆர்சி புத்தகத்திலும் இடம் பெற செய்வதன் மூலம் முறையாக வாகனம் ஓட்டுபவர்கள் இது போன்ற சிக்கலில் மாட்டாமல் தப்பிக்கலாம். இதற்கிடையில் சென்னை போலீசார் உயர் ரக பைக்குகளை பார்த்தலே அபராதம் போடுவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Chennai police fined youngsters coming in high end bikes. Read in Tamil
Story first published: Wednesday, October 3, 2018, 17:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X