1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவில் அதுவும் குறிப்பாக தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக பனி காலங்களில் ஏற்படும் மாசுவின் அளவு மிக அதிகமாக இருக்கும்.

இதற்காக டில்லி மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2015ம் ஆண்டு தலைநகர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதித்தது.

1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

ஆனால் இந்த உத்தரவு வெறும் பேப்பரில் மட்டும் இருந்ததே தவிர செயல்பாட்டிற்கு சரியான வடிவில் வரவில்லை. தடை செய்யப்பட்ட வாகனங்கள் அதிக அவில் பயன்பாட்டிலேயே இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணம் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த விதியில் சில சிக்கல்கள் இருந்தன.

1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

தேசிய தலைநகர் பகுதியில் பதிவு செய்யப்பட்ட 10 ஆண்டு பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களை தலைநகர் பகுதியை தவிர மற்ற பகுதிகளில் இயக்க தடையில்லா சான்று வழங்கப்பட்டது. ஆனால் இந்த தடை குறித்தோ, தடையில்லா சான்று குறித்தோ மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை.

1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

இதன் காரணமாக எல்லோரும் தடை செய்யப்பட்ட வாகனங்களை தொடர்ந்து இயக்கி வந்தனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் இயக்கப்படுவதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

இந்த வழக்கில் மொத்தம் 1,29,825 தடை செய்யப்பட்ட வாகனங்கள் காஸியாபாத் பகுதியில் இயக்கப்படுவதாகவும், 51,745 வாகனங்கள் கவுதம் புத்தா நகரில் இயக்கப்படுவதாகவும் தெரியவந்தது.

1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

இதில் காஸியாபாத்தில் தடை செய்யப்பட்ட 1.29 லட்சம் வாகனத்தில் 1,11,730 வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் பழமையான பெட்ரோல் வாகனங்கள் எனவும், 18,095 வாகனங்கள் 10 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் வாகனங்கள் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

அதே போல கவுதம் புத்தா நகரில் 39,709 வாகனங்கள் பெட்ரோல் வாகனங்கள் எனவும், 12,036 வாகனங்கள் டீசல் வாகனங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

இதில் தேசிய தலைநகர் தவிர மற்ற இடங்களில் இயங்குவதற்காக தடையில்லா சான்று வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். மொத்தம் 1,710 பழைய பெட்ரோல் மற்றும் 2,615 பழைய டீசல் வாகனங்களுக்கு மட்டுமே தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

இதை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் வாகனத்தையும், 15 ஆண்டுகளுக்கு பழமையான பெட்ரோல் வாகனத்தையும் தலைநகர் பகுதியில் செயல்படுவதை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அதிகாரிகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்… என்ன காரணம் தெரியுமா?

இதன் காரணமாக தற்போது டில்லி பகுதியில் சுமார் 1.29 லட்சம் வாகனங்களை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இவர்கள் தங்கள் வாகனங்களை பயன்படுத்த இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி போக்குவரத்து அலுவலகத்தில் தடையில்லா சான்று பெற்றுவிட்டு தலைநகருக்கு வெளிப்பகுதியில் பயன்படுத்துவதே...

More from DriveSpark

Article Published On: Tuesday, October 30, 2018, 12:42 [IST]
English summary
Court order to stop plying old cars in ncr. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+