மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

By Azhagar

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மாசு உமிழ்வு மோசடி புகார்கள் இன்னும் குறைந்தபாடில்லை. ஃபோக்ஸ்வேகன், ஆடி நிறுவனங்களை தொடர்ந்து தற்போது மெர்சிடிஸ் மீது டீசல்கேட் புகார் எழுந்துள்ளது.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

டெய்ம்லர், இதுதான் மெர்சிடிஸ்-பென்ஸின் தாய் வீடு. காற்று மாசு தொடர்பாக அமெரிக்க நடத்திய ஆய்வில் மெர்சிடிஸின் டீசல் கார்கள் அதிக மாசு உமிழ்வை வெளிப்படுத்தும் விதத்தில் தயாராகியிருப்பது தெரியவந்துள்ளது.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

ஜெர்மனை சேர்ந்த நாளிதழ் ஒன்று இந்த மோசடி தொடர்பான புகார்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் காற்று மாசு ஆய்வில் டெய்ம்லர் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

அமெரிக்காவில் மட்டுமில்லாமல் டெய்ம்லர் மீதான மாசு உமிழ்வு மோசடி தொடர்பான புகார்கள் அந்நிறுவனத்தின் தாய் நாடான ஜெர்மனியிலும் நடைபெற்று வருகிறது.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

அமெரிக்கா நடத்தும் மாசு உமிழ்வு சோதனையில் இருந்து தப்புவதற்கு உதவும் மென்பொருளை டெய்ம்லர் தயாரித்த மெர்சிடிஸின் டீசல் கார்களில் பொருத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

2015ம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு மோசடியில் சிக்கிய போது அதனுடன் சேர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நிறுவனம் தான் டெய்ம்லர்.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

அதிகமான நைட்ரஸ் ஆக்சைடு நச்சு வாயுவை கக்கும் டீசல் கார்களை ஃபோக்ஸ்வேகன் தயாரித்ததை ஒத்துக்கொண்டதோடு, அதற்கான அபராதத்தையும் அமெரிக்காவிற்கு செலுத்தியது.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

தற்போது டெய்ம்லர் தயாரித்த மெர்சிடிஸ் டீசல் கார்கள் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த கார்களை தயாரித்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

மாசு உமிழ்வு மோசடியில் இருந்து தப்பிக்க உதவுவதாக கூறப்படும் மென்பொருளில் 'ஸ்லிப்கார்ட்' என்ற ஒரு செயல்பாடு உள்ளது. இது காரை பரிசோதனைக்கு உட்படுத்தம்போது, எமிஷன் குறித்த விவரங்களை மாற்றி வழங்கும்.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

மேலும் பிட்-15 என்ற செயல்பாடு இந்த மென்பொருளில் உள்ளது. இது காரை இயக்கி சோதனை செய்யும் போது சுமார் 26 கி.மீ வரை எமிஷன் தொடர்பான விவரங்களை மாற்றி வழங்கும்.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

டெய்ம்லர் தயாரித்துள்ள கார்களில் ஏட்ப்ளூ டீசல் என்ற புகைப்போக்கி குழாய்க்கான திரவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காரிலிருந்து உருவாகும் நைட்ரஸ் ஆக்சைடு நச்சு வாயுவை சோதனையின் போது குறைத்து வெளியேறச்செய்யும்.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

டெய்ம்லர் தயாரித்துள்ள மெர்சிடிஸ் டீசல் கார்களில் இதுபோன்ற மோசடிகள் நடத்தப்பட்டுள்ளதை ஜெர்மனியை சேர்ந்த நாளிதழ் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

அதோடு சட்டப்பூர்வமாக அமெரிக்கா அரசு அனுமதிப்பதை விட 10 மடங்கு நைட்ரஸ் ஆக்சைடு நச்சுவாயுவை மெர்சிடிஸ் டீசல் மாடல் கார்கள் வெளியேற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

ஆனால் அமெரிக்காவின் மாசு உமிழ்வு சோதனையில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை டெய்ம்லர் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுப்பற்றி ராய்டர்ஸிடம் பேசிய அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்,

"டெய்ம்லர் மற்றும் அதில் பணியாற்றும் 290,000 ஊழியர்களின் பெயரை கலங்கப்படுத்தவும் தான் இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

2015ம் ஆண்டு முதன்முறையாக மாசு உமிழ்வு மோசடி குறித்த விவரங்கள் இந்த உலகிற்கு தெரியவந்தது. அப்போது அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் இந்த மோசடி தலைப்புச்செய்தி ஆனது.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

டெய்ம்லர் தயாரித்த பல கார்கள் இன்று உலகின் பல முன்னணி நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் டெய்ம்லர் கார்கள் தான் பெரியளவில் விற்பனையாகி வருகின்றன.

மெர்டிசிஸ் மாசு உமிழ்வு மோசடியை அம்பலப்படுத்திய அமெரிக்கா

இந்நிலையில் அமெரிக்கா மாசு உமிழ்வு மோசடி குற்றச்சாட்டை டெய்ம்லர் மீது எழுப்பியுள்ளது, அதன் வாடிக்கையாளர்களையும் கவலையடைய செய்துள்ளது. இதனால் அவர்கள் எங்கே தங்களது கார்கள் திருப்பப்பெறப்பட்டு விடுமோ என அச்சம் தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 21, 2018, 13:04 [IST]
English summary
Read in Tamil: Mercedes Accused Of Using Software To Cheat Diesel Emissions Tests. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+