TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
டிஜிட்டல் இந்தியாவில் கோளாறு; சுங்கசாவடி பாஸ்ட் டேக் கார்டில் இருந்த பணம் கொள்ளை
தமிழ்நாட்டில் நின்று லாரிக்கு பாஸ்ட் டேக் கார்டு மூலம் ஆந்திராவில் உள்ள சுங்கசாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சுங்கசாவடி கட்டணங்களை செலுத்த வழங்கப்படும் பாஸ்ட் டேக் கார்டில் உள்ள பணத்தில் பாதுகாப்பு இல்லை என்ற அச்சம் தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தவும், வரிசையில் நிற்காமல் உடனடியாக சுங்க சாவடியை கடந்து செல்லவும், பாஸ்ட் டேக் என்ற கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பாஸ்ட் டேக் கார்டை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் இந்த கார்டை நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் உங்களது வாகனம் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்து வாங்க வேண்டும்.
அவ்வாறு வாங்கி அதை உங்கள் வாகனத்தின் முகப்பு பகுதியில் பொருத்தி கொண்டால் போதும். வாகனத்தை நீங்கள் எந்த சுங்க சாவடியிலும் நிறுத்த வேண்டியது இல்லை.
நீங்கள் சுங்க சாவடியில் உள்ள பாஸ்ட் டேக் லேன் வழியாக சென்றால் உங்களது பாஸ்ட் டேக் கார்டு மூலம் அந்த சுங்க சாவடியை கடந்ததற்கான தொகை கழிக்கப்படும். இந்த பாஸ்ட் டேக் கார்டை தேவையான அளவிற்கு ரிசார்ஜூம் செய்து கொள்ளலாம்.
மக்களின் வேலைகளை எளிமைப்படுத்துவதற்காகவும், மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை கடைபிடிப்பதற்காகவும் இந்த பாஸ்ட் டேக் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்படுகிறது. இதை பெரும்பாலும் தமிழகத்தில் லாரி, பஸ்கள் போன்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களை நடத்துபவர்கள் தங்கள் வாகனங்களுக்கு இந்த கார்டை வாங்கி பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனக்கு சொந்தமாக 3 லாரிகளை வைத்து டிரான்ஸ்போர்ட் பிஸ்னஸ் நடத்தி வருகிறார். வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றி கொண்டு செல்வது இவரது டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் முக்கியமான வேலை.
இவர் தனது மூன்று லாரிகளுக்கும் தனித்தனியாக பாஸ்ட் டேக் கார்டை வாங்கி பொருத்தியுள்ளார். இந்தியா முழுவதும் இந்த லாரி எங்கு சென்றாலும் இந்த கார்டு மூலமே கட்டணங்களை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகை காரணமாக டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் விடுமுறையில் இருந்ததால் லாரி எங்கும் ஓடாமல் கோவில்பட்டியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.
அப்பொழுது கணேஷின் மொபைல் எண்ணிற்கு புதிதாக எஸ்எம்எஸ் ஒன்று வந்தது. அதில் அவரது மூன்று லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு டோல்கேட்டை கடந்ததாகவும் அதற்காக இவ்வளவு தொகை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை பார்த்ததும் பதறிபோன கணேஷ் அவர் லாரி நிறுத்தப்பட்ட இடத்திற்கு விரைந்தார். ஆனால் அவர் கட்டுப்பாட்டில் இருந்த லாரிகள் பத்திரமாக அதே இடத்தில்தான் இருந்தன. ஆனால் லாரி ஆந்திராவை கடந்ததாக எஸ்எம்எஸ் வந்ததை நினைத்து குழப்பமடைந்தார்.
உடனடியாக ஒரு வேலை லாரியில் ஒட்டப்பட்டிருந்த பாஸ்ட் டேக் கார்டு மட்டும் திருடப்பட்டிருக்கலாம் என யோசித்து அதை சரி பார்த்தார். அந்த கார்டுகளும் அங்கேயேதான் இருந்தன. இதனால் குழப்பமடைந்த கணேஷ் பாஸ்ட்டேக் கார்டை வழங்கிய ஈக்விடாஸ் வங்கி நிறுவனத்தை அனுகினார்.
இதன்மூலம் பணம் எடுக்கப்பட்டது ஆந்திர மாநிலம் தங்கத்தூரில் உள்ள சுங்க சாவடி என்பது தெரியவந்தது. அந்த சுங்க சாவடியை அவர் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்கும் படி தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் அவர் ஆன்லைனில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் புகார் அளித்தார். அதன் பின் இது குறித்து விசாரணை நடத்தி விட்டு அவரிடம் இருந்து கழிக்கப்பட்ட பணம் மீண்டும் திரும்ப வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. சுங்க சாவடி ஊழியர்களே பாஸ்ட் டேக் கார்டு குறித்த தகவல்களை திருடி அதன் மூலம் நூதன முறையில் அதில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதாக லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தற்போது புகார் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் பாஸ்ட் டேக் கார்டுகளை வாங்குங்கள் என விழிப்புணர்வுகளும் பிரச்சாரங்களும் நடந்து வரும் நிலையில் இன்று அந்த பாஸ்ட் டேக் கார்டிலேயே மோசடி நடப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற மத்திய அரசு கடுமையாக பாடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதில் உள்ள பிரச்னைகளை களைந்து கோளாறு இல்லாத டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கவிட்டால் டிஜிட்டல் இந்தியாவும் ஒரு தோல்வி திட்டமாகவே கருதப்படும்.
நீங்களும் பாஸ்ட்டேக் கார்டு வாங்கியுள்ளீர்களா? அல்லது பாஸ்ட்டேக் கார்டு வாங்கும் திட்டத்தில் உள்ளீர்களா? உங்கள் கார்டு இது போன்ற சிக்கலில் மாட்டாமல் இருக்க எந்த காரணத்தை கொண்டும் உங்கள் கார்டு குறித்த விபரங்களை யாரிடமும் பகீராதீர்கள்.
தற்போது இது போன்று பாஸ்ட் டேக் கார்டை வைத்து பணத்தை திருடுபவர்கள் எந்த வகையில் அதை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாததால் அதை எப்படி தடுப்பது என்பது நமக்கு தெரியாது. அதனால் யாரிடமும் எந்த காரணத்திற்காகவும் உங்கள் பாஸ்ட் டேக் கார்டு குறித்த விபரங்களை பகிராமல் இருப்பதே தற்போதைக்கு சிறந்தது.