டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது நிஸான் நிறுவனம். இரண்டு கார்களிலும் சில டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்

By Saravana Rajan

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது நிஸான் நிறுவனம்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

டட்சன் பிராண்டில் பட்ஜெட் கார்களை விற்பனை செய்து வருகிறது நிஸான் நிறுவனம். டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு வந்து நீண்ட காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் தொடர்ந்து 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

அதேநேரத்தில், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து இந்தோனேஷியாவில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே வரும். சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனுக்கு வாய்ப்பு இல்லை.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் முன்பக்க பம்பர் பெரிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்இடி பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. ரியர் வியூ மிரரிலேயே இண்டிகேட்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாடி கிட் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

காரின் உட்புறத்தில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது 6.75 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஏசி வென்ட் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் பவர் விண்டோ, ஓட்டுனருக்கான ஏர்பேக் ஆகியவை நிரந்தரமாக இடம்பெற்றுள்ளன.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

அடுத்த சில மாதங்களில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 9, 2018, 17:04 [IST]
English summary
The Datsun GO hatchback and the GO+ MPV facelift has been launched for the Indonesian market.
மேலும்... #டட்சன் #datsun
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+