டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு!!

வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள், வரும் 9ந் தேதி இந்த கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்த்த மாடல்களுக்கு முன்பதிவு துவங்கி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு!!

வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள், வரும் 9ந் தேதி இந்த கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்நிலையில், தற்போது டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு!!

நாடு முழுவதும் உள்ள டட்சன் கார் ஷோரூம்களில் ரூ.11,000 முன்பணத்துடன் இந்த கார்களுக்கு முன்பதிவு ஏற்கப்படுகிறது. இந்த இரு மாடல்களும் 5 வேரியண்ட்டுகளில், இரண்டு புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆம்பர் ஆரஞ்ச் மறர்றும் சன்ஸ்டோன் பிரவுன் ஆகிய வண்ணங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு!!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்ககளில் புதிய முகப்பு க்ரில் அமைப்பு, ஹெட்லைட், புதிய பம்பருடன் முகப்பு வசீகரமாக மாற்றப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு!!

இந்த இரண்டு புதிய மாடல்களிலும் 14 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும். குறைவான விலை மாடல்களில் ஸ்டீல் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு!!

உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட பாகங்கள், புதிய டேஷ்போர்டு அமைப்பு வசீகரமாக இருக்கிறது. அனலாக் டாக்கோமீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும். எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு மிரர்கள், ரியர் பவர் விண்டோஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் இடம்பெறுகிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு!!

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். இந்தோனேஷியாவில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால், இந்திய மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வருவதற்கான வாய்ப்புள்ளது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு!!

பண்டிகை காலத்தில் பட்ஜெட் கார்களை எதிர்பார்ப்பவர்களை குறிவைத்து இந்த இரு மாடல்களையும் டட்சன் நிறுவனம் களமிறக்க இருக்கிறது. புதிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #டட்சன்
English summary
Datsun is all set to launch the new facelifted Go hatchback and Go+ MPV in the Indian market on October 9, 2018. Ahead of that Datsun has commenced the pre-bookings for the new Go and Go+. The company has also revealed the new Datsun Go and Go+ facelift.
Story first published: Monday, October 1, 2018, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X