புதிய டட்சன் கார்களுக்கு அதிரடி ஆஃபர்... முழு விபரம்!!
டட்சன் பிராண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், 'Datsun Pease Of Mind' என்ற புதிய ஆஃபர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்து.இதன்படி, டட்சன் ரெடிகோ, கோ மற்றும் கோ
டட்சன் கார் பிராண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பட்ஜெட் ரக கார்களை விற்பனை செய்து வரும் டட்சன் நிறுவனம் நிஸான் கார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், டட்சன் பிராண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், 'Datsun Pease Of Mind' என்ற பெயரில் புதிய ஆஃபர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்து.

இந்த புதிய திட்டத்தின்படி, டட்சன் ரெடிகோ, டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கான வாரண்டி திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரம்பில்லா கிலோமீட்டர் தூரம் வரை இதனை பெற முடியும் என்பதே சிறப்பு.

மேலும், இந்த சிறப்பு வாரண்டி திட்டத்தின் கீழ் எஞ்சின், ஏசி கம்ப்ரஷல், இசியூ சாதனம், ஆல்டர்னேட்டர், ஷாக் அப்சார்பர் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப கருவிகள் மற்றும் உதிரிபாகங்களுக்கு பொருந்தும்.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் 24 மணி நேர அவசர கால உதவி திட்டமும் கொடுக்கப்படுகிறது. கார் சாவி தொலைந்து போதல், எரிபொருள் இல்லாமல் கார் நின்று போகும் பிரச்னை, பேட்டரி ஜம்ப் ஸ்டார்ட் செய்வதற்கான உதவிகளும் இந்த திட்டத்தில் உண்டு. கார் ரிப்பேரானால் ஓட்டல் மற்றும் வாடகை கார் ஏற்பாடு செய்து தரும் வசதியும் கொடுக்கப்படுகிறது.

கார் சர்வீஸ் செய்வதற்கு கட்டணமில்லாமல் பிக்கப் மற்றும் டிராப் வசதியும் கொடுக்கப்படுகிறது. அருகிலுள்ள நிஸான் அல்லது டட்சன் கார் சர்வீஸ் மையங்களுக்கு காரை எடுத்துச் செல்வதற்கு இந்த வசதி செய்து தரப்படுகிறது. முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் திட்டமும் உள்ளது.

இந்த திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பு என்னவெனில், முதல் 5 ஆண்டுகளுக்குள் காரை விற்பனை செய்யும்போது, இந்த திட்டத்தை புதிய உரிமையாளர் பெயரில் மாற்றம் செய்து கொடுக்க முடியும் என்பதுதான். இது நிச்சயம் சிறப்பு வாய்ந்த திட்டமாக சந்தையில் பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் விசேஷ சலுகை திட்டங்களும் உள்ளதாக டட்சன் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை அருகிலுள்ள டட்சன் ஷோரூமை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications








