இந்தியாவில் ரூ. 3.80 லட்சம் விலையில் டட்சன் ரெடி-கோ ஏஎம்டி 1 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!
இந்தியாவில் ரூ. 3.80 லட்சம் விலையில் டட்சன் ரெடி-கோ ஏஎம்டி 1 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!
டட்சன் ரெடி-கோ (1 லிட்டர்) கார் தற்போது புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவையுடன் ரூ. 3.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த 10ம் தேதி முதலே இந்த காருக்கான புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், நாடு முழுவதும் இந்த காரை டெலிவிரி செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

டட்சனுக்காக ஏஎம்டி தயாரிப்புகளில், ரெடி-கோ 1.0 காரின் இந்த மாடல் தான் மிகவும் உயர்தர அம்சங்களை பெற்ற மாடலாக உள்ளது.
டூயல்-டிரைவிங் மோடு மற்றும் ரஷ் ஹவர் மோடு என இரண்டு வித ஸ்மார்ட் டிரைவ் தேர்வுகளை இந்த கார் பெற்றுள்ளது.
Recommended Video


புதிய ரெடி-கோ 1.0 ஏஎம்டி மாடலில் இடம்பெற்றுள்ள இந்த காரின் இயக்க தேர்வுகள் நகர பகுதிகளில் கூட மிகவும் சொகுசான பயணங்களை வழங்கும் என டட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காரில் நீங்கள் மலைப் பிரதேசங்களில் ஏறும்போதும் அல்லது கீழிறங்கும் போதும் மற்றும் டிராஃபிக் நிறுத்தங்களில் இருக்கும்போது போன்ற சூழ்நிலைகளில் டூயல்-டிரைவிங் மோடு மிகவும் பயன்படும்.
Trending On DriveSpark Tamil:

காரணம் இந்த இயக்கத்தேர்வில், ஆட்டோமேடட் மற்றும் மேனுவல் என இருவேறு தேர்வுகள் உள்ளன. அதை பயன்படுத்தி சவாலான சாலைகளிலும் ரெடி-கோ 1.0 ஏஎம்டி காரை எளிதாக ஓட்டி செல்லலாம்.

அதேபோல ரஷ் ஹவர் மோடை பொறுத்தவரை டிராஃபிக் நிறுத்தங்களுக்கு ஏற்ப க்ரூஸிங் ஸ்பீடு மணிக்கு 5 முதல் 6 கி.மீ என்ற வேகத்தில் செயல்படும். இதனால் நிதானமான டிரைவிங் கிடைப்பது உறுதி.

1 லிட்டர் திறன் பெற்ற இன்டலிஜன்ட் ஸ்பார்க் ஆட்டோமேடட் தொழில்நுட்பத்துடன் (ஐசாட்) கூடிய எஞ்சின் இந்த கார் உள்ளது.
3 சிலிண்டர் பெட்ரோல் திறன் பெற்ற இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவர் மற்றும் 91 என்.எம் டார்க் திறனை இந்த கார் வழங்கும்.

சி.எம்.எஃப்-ஏ பிளாட்ஃபாரமின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள டட்சன் ரெடி- கோ 1.0 ஏஎம்டி கார் ரெனால்ட் கிவிட் மாடலில் உள்ள கூறுகளை தயாரிப்பில் பகிர்ந்துக்கொண்டுள்ளது.

ஹேன்ட்ஸ்-ப்ரீ காலிங் உடன் ப்ளூடூத் ஆடியோ ஸ்ட்ரீமிங் போன்ற அம்சங்கள் இந்த காரின் டி(ஓ) மற்றும் எஸ் வேரியன்டுகளில் இடம்பெற்றுள்ளன.
முற்றிலும் கருப்பு நிறத்திலான டட்சன் ரெடி- கோ 1.0 ஏஎம்டி காரின் உள்கட்டமைப்பில், ரிமோட் மூலம் இயங்கும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் உள்ளது.

பல கவர்ந்திழுக்கும் அம்சங்களை பெற்றுள்ள புதிய டட்சன் ரெடி-கோ 1.0 ஏஎம்டி கார் 185 மி.மீ உடன் கூடிய கிரவுன்டு கிளயரஸ், பூட் ஸ்பேஸ் மற்றும் ஹெட் ரூம்-களை பெற்றுள்ளது.

தற்போதுள்ள மாடலில்லிருந்து டட்சன் ரெடி-கோ ஏஎம்டி வேரியன்டிற்கு ரூ. 22,000 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Trending On DriveSpark Tamil:

ரூபி ரெட், லைம் க்ரீன், வைட், கிரே மற்றும் சில்வர் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ள டட்சன் ரெடி-கோ 1.0 ஏஎம்டி கார், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ட்ரி-லெவல் ஏஎம்டி செக்மென்டை பொறுத்தவரை தற்போது வெளிவந்துள்ள டட்சன் ரெடி-கோ 1.0 ஏஎம்டி கார் இன்னும் அதிக தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கி தந்துள்ளது.

புதிய ரெடி-கோ 1.0 ஏஎம்டி காரிலுள்ள பல்வேறு விதமான கட்டமைப்புகள், நிச்சயம் நகர்புற வாடிக்கையாளர்களுக்கு பெரியளவில் பயனளிக்கும் என்பது உறுதி.

இந்தியாவில் மாருதி ஆல்டோ கே10 ஏஜிஎஸ், ரெனால்ட் க்விட் ஏஎம்டி ஆகிய மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள ரெடி-கோ 1.0 ஏஎம்டி கார் குறித்த அடுத்தடுத்த அப்டேட்ஸிற்கு இணைந்திருங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழுடன்.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications








