துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்.. பல லட்சங்களை செலவழித்து அரசு வாங்கியது..

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா காருக்கு பதிலாக, துணை முதல்வருக்கு என பிரத்யேகமாக, மிகவும் விலை உயர்ந்த மற்றும் பிரபலமான ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் வாங்கப்பட்டுள்ளது.

By Arun

சாதாரண காரை பயன்படுத்தி வந்த துணை முதல்வருக்கு என பிரத்யேகமாக, மிகவும் விலை உயர்ந்த மற்றும் பிரபலமான புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு பேன்ஸி நம்பரும் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

இந்திய வாடிக்கையாளர்கள் இடையே மிகவும் பிரபலமாக விளங்கும் எஸ்யூவி வகை கார்களில் ஒன்று ஜீப் காம்பஸ் (Jeep Compass). பிரீமியம் எஸ்யூவி வகை கார் வாங்க வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பது ஜீப் காம்பஸ்தான்.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக விளங்கும், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 (Mahindra XUV500) மற்றும் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) உள்ளிட்ட எஸ்யூவி வகை கார்களுக்கு, ஜீப் காம்பஸ் கடும் சவாலை வழங்கி வருகிறது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

சாதாரண மக்கள் மட்டுமல்லாது, பிரபலங்கள் பலரும் கூட ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை ஆர்வமாக வாங்கி வருகின்றனர். இந்த சூழலில் வெளியாகி வரும் சில தகவல்களின் படி பார்த்தால், ஜீப் காம்பஸ் எஸ்யூவி, அரசியல்வாதிகளின் காராக உருவெடுத்து வருவது தெரியவருகிறது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

ஏனெனில் அரசியல்வாதிகள் பலரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை வாங்க தொடங்கியுள்ளனர். யூனியன் பிரதேசமான டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராக இருப்பவர் மணீஸ் சிசோடியா.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

ஜீப் காம்பஸ் எஸ்யூவியை விரைவில் தனது அதிகாரப்பூர்வ காராக மணீஸ் சிசோடியா பயன்படுத்த உள்ளார். மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா காரைதான் தற்போது வரை அவர் பயன்படுத்தி வருகிறார். இந்த காருக்கு பதிலாக விரைவில் அவருக்கு ஜீப் காம்பஸ் எஸ்யூவி வழங்கப்படவுள்ளது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டொயோட்டா இன்னோவா காரை பயன்படுத்த தொடங்கினார். அதே நேரத்தில், துணை முதல்வர் மணீஸ் சிசோடியா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா காரை தேர்வு செய்தார்.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

எனினும் டெல்லி மாநில அரசு, துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவுக்காக, தற்போது ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ளது. இந்த கார் இன்னும் ஒரு வாரத்தில், மணீஸ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மணீஸ் சிசோடியாவின் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பதிவு எண் '0017'.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 5 மாருதி சுஸூகி சியாஸ் கார்கள் வாங்கப்பட்டன. எனினும் அம்மாநில நிர்வாகம் தற்போது, ஜீப் காம்பஸ் எஸ்யூவி வடிவில், விலை உயர்ந்த மற்றும் பிரீமியம் கார்களை வாங்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

நாம் ஏற்கனவே கூறியிருந்தபடி, பிரீமியம் எஸ்யூவி கார் வாங்க வேண்டும் என்பவர்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பது ஜீப் காம்பஸ்தான். இந்திய மார்க்கெட்டில், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் கிடைக்கிறது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. அதே நேரத்தில் டீசல் இன்ஜின், 350 என்எம் என்ற டார்க் திறனுடன் இணைந்து 170 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடியது. இந்த காரில் 4×4 ஆப்ஷனலாக உள்ளது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டியூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் என்ற 2 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெட்ரோல் இன்ஜின் வழங்குகிறது. மறுபக்கம் டீசல் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார், ரூ.15.35-ரூ.21.94 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்த சக்தி கொண்ட டீசல் இன்ஜின், குறைந்த அளவிலான இருக்கைகள் (5) என ஒரு சில குறைகள் இருந்தாலும் கூட, ஜீப் காம்பஸ் எஸ்யூவி அதிக எண்ணிக்கையில்தான் விற்பனையாகி வருகிறது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

ஏனெனில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள, ஆடம்பரம் மற்றும் சொகுசான வசதிகள், கவர்ந்து இழுக்கும் தோற்றம் ஆகியவை ப்ளஸ் பாயிண்ட்களாக உள்ளன. இதுதவிர ஜீப் என்ற பிராண்ட் வேல்யூ கூட காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு மட்டுமல்லாது, சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட பெரிய எஸ்யூவி காரான மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போன்ற கார்களுக்கும், ஜீப் காம்பஸ் கடும் போட்டியை வழங்கி வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் சீட்டிங் கெபாசிட்டி 7 என்பது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

புனேவுக்கு அருகே உள்ள ரஞ்சன்கூன் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபியட் ஆலையில் காம்பஸ் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் காம்பஸ் காரின் வலது கை (right-hand) டிரைவ் வேரியண்ட்களின் உற்பத்தி கேந்திரமாக இது திகழ்கிறது.

துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்..

இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. காம்பஸ் காரின் டிரெய்ல்ஹவாக் வெர்ஷனை, ஜீப் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டில் லான்ச் செய்யும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, July 25, 2018, 11:40 [IST]
English summary
Delhi Government Bought a New Jeep Compass SUV for Manish Sisodia. Read in Tamil
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+