வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லியை இணைக்கும் புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

மும்பையிலிருந்து டெல்லியை வெறும் 12 மணிநேரத்தில் இணைக்கும் விதத்தில் புதிய அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பர் 10ந் தேதி துவங்கப்பட இருக்கிறது. 1,250 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்க

By Saravana Rajan

மும்பையிலிருந்து டெல்லியை வெறும் 12 மணிநேரத்தில் இணைக்கும் விதத்தில் புதிய அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பர் 10ந் தேதி துவங்கப்பட இருக்கிறது. இந்த சாலையின் முக்கிய அம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே அதிவிரைவு போக்குவரத்து திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில், புல்லட் ரயில், அதிவிரைவு நெடுஞ்சாலைகள் மற்றும் ஹைப்பர்லூப் உள்ளிட்ட போக்குவரத்து முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையிலிருந்து தலைநகர் டெல்லியை அதிவிரைவாக இணைப்பதற்காக புதிய எக்ஸ்பிரஸ் சாலையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ரூ.1 லட்சம் கோடி முதலீட்டிலான இந்த பிரம்மாண்ட திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையின் கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் 10ந் தேதி துவங்கப்பட இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார்.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

வரும் டிசம்பர் 10ந் தேதி துவங்கும் இந்த சாலைக் கட்டுமானப் பணிகள் அடுத்த 30 முதல் 36 மாதங்களில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. தற்போது மும்பையிலிருந்து டெல்லியை சாலை மார்க்கமாக செல்வதற்கு 1,450 கிமீ தூரம் பயணிக்க வேண்டும்.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையானது 1,250 கிமீ தூரத்திற்கு அணைக்கப்பட இருக்கிறது. இதனால், பயண தூரம் 200 கிமீ தூரம் வரை குறையும். அத்துடன், தற்போது மும்பையிலிருந்து டெல்லியை அடைவதற்கு 24 மணிநேரம் பிடிக்கிறது.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையில் வெறும் 12 மணிநேரத்தில் மும்பையிலிருந்து டெல்லியை அடைந்துவிடலாம். அதாவது, பயண நேரம் பாதியாக குறையும். அந்த அளவுக்க சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளுடம் நிர்மாணிக்கப்படுகிறது.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

விரைவாக இந்த கட்டுமானப் பணிகளை முடிக்கும் விதத்தில், ஒரே நேரத்தில் 40 இடங்களில் கட்டுமானப் பணிகள் செய்யப்பட இருக்கின்றன. இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையானது கிட்டத்தட்ட பழைய தேசிய நெடுஞ்சாலை எண்-8 அமைந்திருக்கும் பகுதியை ஒட்டியே பெரும்பாலும் செல்லும். சில இடங்களில் மட்டுமே வேறு பகுதி வழியாக செல்ல இருக்கிறது.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

ரூ.1 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு தேவைப்படும் தொகையை பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. பணம் பொருட்டாக இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார். எனவே, பணிகள் மிக விரைவாகவும், சுமூகமாகவும் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

டெல்லி அருகேயுள்ள குர்கானில் துவங்கி மேவத், கோட்டா, ரத்லம், கோத்ரா, வதோதரா, சூரத், தஹீசர் வழியாக மும்பை வரை அமைக்கப்பட இருக்கிறது.

வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லி... புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!

இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை மூலமாக விபத்துக்கள் எண்ணிக்கை குறைவதுடன், தேசிய நெடுஞ்சாலை எண் 8 மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து தலைநகர் டெல்லியை நோக்கி செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
New Expressway between Delhi-Mumbai will be completed within three years with work starting in December this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X