இன்ஜெனியம் எஞ்சினுடன் ரேஞ்ச்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்கள் அறிமுகம்!!
இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த எஞ்சின் 274 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்
இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இன்ஜெனியம் பொருத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியானது எஸ்இ மற்றும் எச்எஸ்இ ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அதேபோன்று, எவோக் எஸ்யூவியில் எஸ்இ மற்றும் எச்எஸ்இ டைனமிக் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

செயல்திறன், குறைவான மாசு உமிழ்வு, அதிக மைலேஜ் என்று அனைத்து விதத்திலும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. ஏற்கனவே, ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சினுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட வெலர் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, தற்போது ரேஞ்ச்ரோவர் எவோக் மற்றும் டிஸ்கவரி ஆகிய இரண்டு மாடல்களிலும் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த இரு கார்களிலும் இருக்கும் புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 274 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இன்ஜெனியம் எஞ்சின் பொருத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி ரூ.49.20 லட்சம் விலையிலும், எவோக் எஸ்யூவி ரூ.51.06 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் ஆகிய இரண்டு பிராண்டுகளின் சொகுசு கார் மாடல்களிலும் இந்த புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








