கடுமையான டிராப்பிக்கில் சாதுர்யமாக கார் ஓட்டிய நாய்… அசர வைக்கும் வீடியோ..!

இந்தியாவில் உலகின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது டிராபிக் அதிகமான பகுதி தான். இங்கு திறமையாக கார் ஒட்டுபவர்கள் கூட சில நேரங்களில் திணற நேரிடும். குறிப்பாக, டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கோல்கட்ட

இந்தியாவில் உலகின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது டிராபிக் அதிகமான பகுதி தான். இங்கு திறமையாக கார் ஒட்டுபவர்கள் கூட சில நேரங்களில் திணற நேரிடும். குறிப்பாக, டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கோல்கட்டா ஆகிய நகரங்களில் வாகனம் ஓட்டுதல் சற்று சவாலான விஷயம் தான்.

கடுமையான டிராப்பிக்கில் சதுர்யமாக கார் ஓட்டிய நாய்… எப்படி சாத்தியமானது?

இப்படி மனிதர்களே கார் ஓட்ட திணறும் ஒரு ரோட்டில் காரின் எஜமானர் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று அந்த காரை ஓட்டிச்செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கடுமையான டிராப்பிக்கில் சதுர்யமாக கார் ஓட்டிய நாய்… எப்படி சாத்தியமானது?

என்ன நாய் கார் ஓட்டுகிறதா? என்ற ஆச்சரியமாக உங்கள் மனதில் எழும் கேள்வி எங்களுக்கு கேட்கிறது. அதற்கு ஒரே பதில் ஆம். ஷிலாங் நகரில் மாருதி 800 காரை நாய் ஒன்று ஓட்டு செல்லும் 2 வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.

கடுமையான டிராப்பிக்கில் சதுர்யமாக கார் ஓட்டிய நாய்… எப்படி சாத்தியமானது?

அதில் முதல் வீடியோவில் நாய் டிராபிக் நிறைந்த ரோட்டில் மனிதர்கள் எவ்வளவு சாதூர்யமாக கார் ஓட்டுகிறார்களோ அதே போல இந்த நாயும் கார் ஓட்டுகிறது. டிரைவர் சீட்டிற்கு அருகில் உள்ள சீட்டில் இந்த நாயின் ஓனர் அமர்ந்திருக்கிறார்.

கடுமையான டிராப்பிக்கில் சதுர்யமாக கார் ஓட்டிய நாய்… எப்படி சாத்தியமானது?

இரண்டாவது வீடியோவும், அதே போல நாய் கூட்டமே இல்லாத ஒரு ரோட்டில் கார் ஓட்டுகிறது. அந்த வீடியோவிலும் நாயின் ஒனர் பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கிறார். இந்த இரண்டு விடியோவில் பின்னால் சென்ற மற்றொரு காரில் பயணத்தவர்களால் எடுக்கப்பட்டது.

கடுமையான டிராப்பிக்கில் சதுர்யமாக கார் ஓட்டிய நாய்… எப்படி சாத்தியமானது?

நாய்கள் மனிதர்களுடன் மிகவும் பாசமாகவும் அன்பாகவும் பழகும் ஒருமிருகம் தான். மனிதர்களை சொல்வதை கேட்டு அதற்கு தகுந்தார் போல் செயல்படும் குணம் நாய்களுக்கு இருக்கிறதுதான் அதற்காக இது போன்று கார்களை ஓட்டுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்றுதான்.

கடுமையான டிராப்பிக்கில் சதுர்யமாக கார் ஓட்டிய நாய்… எப்படி சாத்தியமானது?

இந்த வீடியோவை பார்க்கும் பாேது அந்த நாய்க்கு அதன் கால்களை ஸ்டியரிங்கில் வைத்து கார் ஓட்டுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்க நன்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் நாய் காரின் ஸ்டிரயிங்கில் ஒரு காலையும், ஆக்ஸிலரேட்டரில் ஒரு காலையும் வைத்திருப்பது சாத்தியமில்லாத காரியம்.

கடுமையான டிராப்பிக்கில் சதுர்யமாக கார் ஓட்டிய நாய்… எப்படி சாத்தியமானது?

இந்த மாருதி 800 காரில் மாடிஃபிகேஷன் செய்வது சுலபம், காரின் கிளட்ச், பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டரை நாயின் பக்கத்து சீட்டில் உட்காந்து இருக்கும் நாயின் ஓனரின் கண்ட்ரோலில் இருக்கும் படி மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கலாம். அதன் மூலம் அவர் காரின் வேகம், பிரேக், மற்றும் கியர்களை அவரால் எளிதாக கட்டுப்படுத்த இயலும்

கடுமையான டிராப்பிக்கில் சதுர்யமாக கார் ஓட்டிய நாய்… எப்படி சாத்தியமானது?

மேலும் ஸ்டியரிங்கை பொருத்தவரை நாயின் கால்களுக்கு ஸ்டியரிங் கிரிப்பாக இருக்காது. அதனால் அதை கண்டிப்பாக அருகில் இருக்கும் நாயின் ஓனர் தான் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவர் காரின் ஸ்டியரிங்கை ஸ்டியரிங்கின் அடிப்பகுதியில் பிடித்து ஸ்டியரிங்கை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் இந்த நாயரை காரை ஓட்ட வைப்பது போன்ற விஷயங்களை செய்வது வெறும் மக்களின் கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக மட்டுமே என தெளிவாக நம்மால் புரிய முடிகிறது. கார் என்பது மனிதர்கள் ஓட்டுவதற்காக என்றே டிசைன் செய்யப்பட்டுள்ளது. எந்த விலங்கும் கார் ஓட்டுவது என்பது சாத்தியமற்றது.

கார் ஓட்டுவது சாத்தியமற்றது மட்டும் அல்ல சட்ட விதிகளுக்கு மீறியது. நாய்களுக்கு கார் ஓட்டுவதற்காக அரசு லைசன்ஸ்களை வழங்குவதில்லை. இவ்வாறாக டிராபிக்கான ரோட்டில் இவ்வாறான முயற்சிகளை செய்வது மிகவும் ஆபத்தானது. இவர் மீது போலீஸ் நடவடிக்கை பாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Most Read Articles
English summary
Dog drives maruthi 800 car in shillong. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X