ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

நீங்கள் கடைக்கும் போகாமல், டெலிவரி பாய் உங்கள் வீட்டிற்கும் வராமல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும் தொழிற்நுட்பத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறது ஒரு சூப்பர் மார்கெட்ட

By Balasubramanian

நீங்கள் கடைக்கும் போகாமல், டெலிவரி பாய் உங்கள் வீட்டிற்கும் வராமல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும் தொழிற்நுட்பத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறது ஒரு சூப்பர் மார்கெட்ட நிறுவனம், ஆளில்லா வாகனத்தில் பொருட்களை டெலிவரி செய்ய எடுத்து செல்லும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

உலகம் தொழிற்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே வருகிறது. இந்த முன்னேற்றத்தின் வேகம் என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இது எல்லாம் கனவுகளில் தான் நடக்கும் என்ற விஷயம் எல்லாம் இன்று நினைவாகி கொண்டிருக்கிறது.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

ஒரு காலத்தில் டிரைவரே இல்லாமல் போகும் வாகனங்களை எல்லாம் சயிண்டிபிக் பிக்ஷன் படங்களிலோ, கார்டூன்களிலோ பார்த்திருப்போம் ஆனால் அதை டெஸ்லா நினைவாக்கி காட்டி அதில் பெரும் சரித்திர மாற்றத்தையே உருவாக்கி வருகிறது.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

தற்போது அமெரிக்காவில் மட்டும் டெஸ்லா அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும் விரைவில் பெரும்பாலான உலக நாடுகளில் தங்கள் காலை ஊன்ற போவது நமக்கு தெளிவாக தெரிகிறது.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

அதே போல சமீபகாலமாக ஷாப்பிங்கும் துறையிலும் பெரும் தொழிற்நுட்ப

புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு ஒருவர் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அவர் அந்த பொருளை விற்பனை செய்யும் கடைக்கு சென்று வாங்க வேண்டும். ஆனால் இன்று அப்படி அல்ல. எந்த பொருளை வேண்டுமானலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் அந்த பொருள் உங்கள் வீடு தேடி வரும்.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

இன்று அன்று அந்த தொழிற்நுட்பத்தையும் இலகுவாக்கும் வகையில் டெலிவரி பாயே இல்லாமல் ஆளில்லாமல் இயங்கும் வாகனம் மூலம் பொருட்களை டெலிவரி செய்ய ரோபோவை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயார் செய்துள்ளது.

இது குறித்த செய்தியை இங்கே காணலாம்.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

அமெரிக்காவில் மிகப்பெரிய சூப்பர் மார்கெட்டை நடத்தி வரும் நிறுவனம் கோர்கர், இந்நிறுவனமும் ஆளில்லா வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமான நியூரோ நிறுவனமும் சேர்ந்து பொருட்களை டெலிவரி செய்யும் ஆளில்லா வாகனங்களை தயாரிக்க முடிவு செய்தது.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

அதன் படி நியூரோ நிறுவனம் ஆளில்லாமல் பொருட்களை டெலிவரி செய்யும் வானகத்தை தயாரித்துள்ளது. இந்த வாகனத்தை முதலில் அமெரிக்காவின் ஸ்கோட்டெயில், அரிசோனா ஆகிய மாகாணங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

இது குறித்து கோர்கர் நிறுவனத்தின் டிஜிட்டல் அதிகாரி யேல் காஸ்ஸட் கூறுகையில் :" இந்த ஆட்டோமெட்டிக் டெலிவரி வாகனத்தை நடைமுறைக்கு கொண்வடு வருவதில் ஆவலுடன் உள்ளோம். வாடிக்கையாளர்களை செளகரியமாக பொருட்கள் வாங்குவதற்காக இதை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தே பொருட்களை தங்கள் செல்போன் மூலமே, அல்லது ஏதேனும் ஒரு டிஜிட்டல் வழியில் ஆர்டர் செய்தால் சில மணி நேரங்களில் இந்த பொருட்கள் அவர்கள் வீட்டை சென்றடையும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிரமம் இல்லாமலும் உடனடியாகவும் ஷாப்பிங் செய்ய முடியும்" என கூறினார்.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

இது குறித்து ஸ்காட்ஸ்டெயில் மாகாண மேயர் ஜிம் கூறுகையில் : "ஸ்காட்ஸ்டெயில் நகரில் கோர்கர் மற்றம் நியூரோ ஆகிய நிறுவனங்கள இணைந்து செய்யவுள்ள இந்த செயலால் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஸ்காட்ஸ்டெயில் நகரில் வாழும் மக்களுக்கு பயன் தரும் வகையில் உள்ள எல்லா தொழிற்நுட்பங்களையும் நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் இந்த மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்வு மேலும் எளிமையடையும் என நாங்கள் நம்புகிறோம்." இவ்வாறு கூறினார்.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

நியூரோ நிறுவனம் முதற்கட்டமாக டோயோட்டா ப்ரியூஸ் காரை தான் இந்த திட்டத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிபெற்று, அதிகமான மக்கள் இதை பயன்படுத்த துவங்கினால் இதற்கான பிரத்தியோ வாகனத்தை தயார் செய்ய நியூரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்

மேலும் இந்த சேவையை பயன்படுத்த மக்கள், ஆர்டர் செய்யும் நாள் மற்றும் மறுநாள் டெலிவரி செய்யும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Driverless Cars For Grocery Deliveries In US. Read in Tamil
Story first published: Friday, August 17, 2018, 14:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X