TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
வாகனம் ஓட்டும்போது மொபைல்போனில் பேசினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து!!
வாகனம் ஓட்டும்போது மொபைல்போனில் பேசினால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யுமாறு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டும் பழக்கம் அதிகரித்துவிட்டது. ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் செய்யும் இந்த செயலால் இப்போது ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரி சார்பில் ராஜஸ்தான் நீதிமன்றத்தில், வாகன ஓட்டிகள் மொபைல்போனில் பேசும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோபால் கிருஷ்ணன் வியாஸ் மற்றும் ராமச்சந்திர சிங் ஜாலா அடங்கிய அமர்வு இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது, பெரும்பாலான வாகன ஓட்டிகள் மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை செலுத்துவதாக ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், வாகன ஓட்டிகள் மொபைல்போனில் பேசுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் நீதிபதிகளிடம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
அதில், மொபைல்போனில் பேசும் வாகன ஓட்டிகளின் ரத்து செய்யுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மொபைல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவோர் குறித்து புகார் பதிவு செய்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யுமாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், மொபைல்போனில் பேசிக் கொண்டு வரும் வாகன ஓட்டிகள் தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க நீதிமன்றத்தில் வாய்தா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகே ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கான நடைமுறை பின்பற்றப்படும்.
இந்த அதிரடி உத்தரவை ஜோத்பூர் மாநகர போக்குவரத்து போலீசார் தீவிரமாக அமல்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதன்மூலமாக, அங்கு மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டும் வழக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.