காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

Written By:

சில உயர் ரக கார்களில் பின் பக்கம் 2 புகைவெளியேறும் கருவி இருக்கும், இந்த கருவியால் காருக்கு என்ன பயன் இது காரின் அழகிற்காக பொருத்தப்படுவதா? இதற்கு பின்னால் இருக்கும் சிஸ்டம் என்ன என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

கார்கள் பெரும்பாலும் 4 ஸ்டோக் இன்ஜின்களுடன் வருகிறது. இந்த இன்ஜின் முதலில் எரிபொருளை உள்ளே இழுக்கும், அடுத்ததாக பிஸ்டன் மூலம் பியூயல்களை கம்பிரஸ் செய்யும். அடுத்து எரிபொருள் பகுதியில் ஸ்பார்க் பிளக் கொண்டு சிறிய அளவில் வெடிப்பு ஏற்படுத்தும், அதில் எரியாத கழிவுகள் எக்ஸாட் வழியாக வழியேற்றப்படும்.

காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

இந்த இன்ஜினின் செயல்பாட்டில் எரியாத பியூயல் கழிவுகள் எக்ஸாட் வழியாக மெனிபோல்டிற்கு சென்று ஒரே இடத்தில் குவியும், அதன் பின் அது கேட்டலிஸ்ட் கன்வென்டர்க்கு சென்று அங்கு சில வாயுக்கள் பில்டர் செய்யப்பட்டு பின் மப்ளருக்கு செல்லும் அங்கு எக்ஸாட்டின் சத்தம் குறைக்கப்பட்டு புகையை வெளியிடும் கருவி வழியாக கழிவுகள் வெளியேறும்.

காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

பெரும்பாலான கார்களில் 1 புகைவெளியிடும் கருவி மட்டும் தான் இருக்கும். ஆனால் சில உயர் ரக கார்களில் இரண்டு புகை வெளியிடும் கருவிகள் இருக்கும் பலர் அதை அழகிற்காக டிசைன் செய்யப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு, இரண்டு புகை வெளியிடும் கருவி வைத்திருப்பதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

பொதுவாக 4 சிலிண்டர் உள்ள இன்ஜின்களில் 1 மெனிபோல்டு பொருத்தப்பட்டு அதின் வழியாக கழிவுகள் வெளியே வரும். ஆனால் வி-6 அல்லது அதற்கும் அதிகமான திறன் படைத்த இன்ஜின்களில் 2 மெனிபோல்டு கொண்டு புகை வெளியேற்றப்படும்.

காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

ஏன் என்றால் வி-6 மற்றும் அதற்கு அதிக திறன் படைத்த கார்களில் 6 அல்லது அதற்கும் மேற்பட்ட இன்ஜின்கள் இருக்கும். ஆனால் மெனி போல்டுகளில் 4 வழிகள் மட்டுமே இருப்பதால் அதன் வழியாக கழிவுகளை அதிக பிரஷருடன் வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்

காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

அதனால் 4க்கும் அதிகமாகன சிலிண்டர் உள்ள இன்ஜின்களில் 2 மெனிபோல்டுகள் அமைக்கப்பட்டும் அதன் மூலம் கழிவுகள் விரைவாக வெறியேறும் அடுத்த செயல்பாடுகளும் விரைவாக துவங்கும். இதன் மூலம் இன்ஜினின் வாழ்நாள் மற்றும் வேகம் அதிகரிக்கும்.

காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

இவ்வாறாக கழிவுகள் விரைவாக வெளியேறுவது மூலம் காரின் பின்பக்கம் இருக்கும் பிரஷரின் அளவு குறையும், அதன் மூலம் காரின் குதிரை திறன் மேலும் அதிகரிக்கும். காரின் செயல்பாடுகளில் பெரிய மாற்றம் தெரியும்.

காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

இரண்டு மெனிபோல்டு அமைக்கப்படும் பட்சத்தில் கேட்டலிஸ்ட் கன்வென்டர், மப்ளர்,புகை வெளியேறும் கருவி என எல்லாமே இரண்டாக அமைக்கப்படும், அதாவது புதிய எக்ஸாட் சிஸ்டமே அமைக்கப்படும்.

காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

இது மட்டுமல்லாமல் இரண்டு எக்ஸாட் சிஸ்டம் அமைக்கப்படுவதால் கார் பெட்ரோலின் செலவும் குறையும், காரின் இரண்டு புகை வெளியிடும் கருவி இருப்பது வெறும் அழகிற்காக மட்டுமல்ல 4 சிலிண்டர்களுக்கு அதிமான இன்ஜின் இருந்தால் 2 புகைவெளியிடும் கருவி இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!!

02.புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

03.உலகின் விலை உயர்ந்த "F1"என்ற கார் நம்பர் பிளேட் ரூ 132 கோடிற்கு விற்பனைக்கு வருகிறது

04.ஆப்பிள் நிறுனவத்தின் ஐகார் 2020ல் விற்பனைக்கு வருகிறது?

05.மஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டம்!!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
DUAL EXHAUSTS – ARE THEY JUST FOR LOOKS?. Read in Tamil.
Story first published: Tuesday, April 10, 2018, 11:45 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark