மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

பெட்ரோல் வளம் மூலமாக உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி கொண்டுள்ள அரபு நாடுகளின் கொட்டத்தை அடக்கும் இந்திய பிரதமர் மோடியின் திட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவடைந்து வருவதே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்விற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும் கூட பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்விற்கு மற்றொரு முக்கிய காரணமாக உள்ளது. கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருள்.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

உலக அளவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவிற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ள இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை நிர்ணயம் செய்வதில் மேற்கண்ட நாடுகளின் கையே ஓங்கியுள்ளது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

சில சமயங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தியை இந்த நாடுகள் திடீரென குறைத்து விடுகின்றன. இதன் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்வதேச சந்தையில் அதன் விலை திடீரென உயர்ந்து விடுகிறது.

MOST READ: தமிழன்டா எந்நாளும்.. சொன்னாலே திமிர் ஏறும்.. ரூ.12 லட்சம் செலவில் மாட்டு வண்டியை உருவாக்கிய நெசவாளர்

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

அதாவது கச்சா எண்ணெய்யின் விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காக செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. அத்தகைய சமயங்களில், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அதனை இறக்குமதி செய்யும் நாடுகள் எல்லாம் கெஞ்சி கூத்தாடுவது என்பது வாடிக்கையாகவே உள்ளது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது. இவ்வளவு அதிகமான தொகையை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே செலவிடுவதால், இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைக்க தேவையான நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

எலெக்ட்ரிக் வாகனங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து விட்டால், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு வெகுவாக குறைந்து விடும். இதன்மூலமாக இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்படும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

ஆனால் இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பதெல்லாம் ஒரே இரவில் நடந்து விடக்கூடிய விஷயம் அல்ல. மிகவும் கடினமான இந்த இலக்கை படிப்படியாகதான் எட்ட முடியும்.

MOST READ: ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும் வரும் 2030ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முழு மூச்சாக எடுக்கப்பட்டு வருகின்றன.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொது மக்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட தொகை மானியமாக கிடைப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் அதிகரித்து கொண்டுள்ளது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தற்போது வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் அதனை உறுதி செய்கின்றன. இந்தியாவில் கடந்த 2015-16ம் நிதியாண்டில் மொத்தம் 20,000 எலெக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனையாகி இருந்தன.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

இந்த எண்ணிக்கையானது கடந்த 2016-17ம் நிதியாண்டில் 23,000 ஆகவும், 2017-18ம் நிதியாண்டில் 54,800 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆக மொத்தத்தில் எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

ஆனால் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சற்றே சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2015-16ம் நிதியாண்டில் 2,000 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியிருந்தன. கடந்த 2016-17ம் நிதியாண்டிலும் இந்த எண்ணிக்கையானது 2,000 என அப்படியேதான் தொடர்ந்தது.

MOST READ: அட இதுல கூட தமிழர்கள் கெத்துதான்... மிரண்டு போனது மத்திய அரசு

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

இந்த சூழலில், 2017-18ம் நிதியாண்டில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 1,200 என சரிவை சந்தித்து விட்டது. என்றாலும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து கொண்டேதான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

ஏனெனில் கடந்த 2015-16ம் நிதியாண்டில் மொத்தம் 22,000 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. இந்த எண்ணிக்கையானது கடந்த 2016-17ம் நிதியாண்டில் 25,000ஆக அதிகரித்தது. அதே சமயம் 2017-18ம் நிதியாண்டில் விற்பனையான மொத்த எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 56,000ஆக உயர்ந்துள்ளது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

இதே பாணியில் இனி வருங்காலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என நம்பலாம். பொதுமக்களிடம் வலியுறுத்துவதோடு மட்டுமல்லாது அரசு அதிகாரிகளும் எலெக்ட்ரிக் வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

எனவே அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களை புழக்கத்திற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 10,000 எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கான டெண்டர் சமீபத்தில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

அரசின் இந்த ஆர்டரை டாடா மோட்டார்ஸ் (டிகோர் எலெக்ட்ரிக் கார்) வென்றுள்ளது. தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றன.

MOST READ: நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

மாருதி சுஸுகி, பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்களும் வெகு விரைவில் எலெக்ட்ரிக் கார், எலெக்ட்ரிக் ரிக்ஸா உள்ளிட்ட வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. எனவே வருங்காலங்களில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றி.. பெட்ரோல் வளம் மூலம் திமிர் காட்டிய அரபு நாடுகளின் ஆட்டம் க்ளோஸ்

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் மூலமாக பெட்ரோல், டீசல் விலை குறைவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற மற்றொரு நன்மையும் ஏற்படும். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. எனினும் எலக்ட்ரிக் வாகனங்களில் ஒரு சில குறைகளும் காணப்படவே செய்கின்றன. எலக்ட்ரிக் வாகனங்களின் நிறை, குறைகள் என்ன? அவற்றை வாங்கலாமா? வேண்டாமா?

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

க்ளோபல் வார்மிங் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்க புதைபொருள் எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல்தான் முக்கிய காரணம் என்பதை இந்த உலகம் ஒருவழியாக புரிந்து கொண்டு விட்டது. ஆனால் மக்கள் தொகையும், வணிகமயமாக்கலும் அதிகரித்து வருவது, நிலைமையை மிகவும் மோசமாக்கி கொண்டு வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

அதிகரித்து வரும் க்ளோபல் வார்மிங் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, எலக்ட்ரிக் வாகனங்கள் தீர்வாக பார்க்கப்படுகின்றன. எகோ ப்ரெண்ட்லி என்ற காரணத்திற்காக, எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுவதும் ப்ரமோட் செய்யப்பட்டாலும், அதிலும் கூட சில பிரச்னைகள் உள்ளன.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

இதன் காரணமாகதான், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நாம் மாறுவதில் பிரச்னைகள் எழுந்து வருகின்றன. அப்படி எலக்ட்ரிக் வாகனங்களில் உள்ள நிறை, குறைகளை இனி அலசலாம். முதலில் குறைகளை பார்த்து விடுவோம்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை

எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிகப்பெரிய குறை சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறைதான். பெட்ரோல் பங்க்களை போல், இன்னமும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

ஒருவேளை சார்ஜ் இல்லாமல் நடுவழியில் நிற்க நேரிட்டால், மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது என்பது பிரயோஜனமற்றது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

குறிப்பாக நமது நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களை ப்ரமோட் செய்ய வேண்டுமென்றால், முதலில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எனினும் இந்த குறையை போக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது பெருநகரங்களில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

MOST READ: செல்போனில் பேசி கொண்ட பைக் ஓட்டியவருக்கு ரூ31,556 அபராதம், அதிரடி வசூல் வேட்டையில் இறங்கிய போலீஸ்

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

அதிக விலை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் இருக்கும் அடுத்த பிரச்னை அதன் விலைதான். எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் மற்றும் உற்பத்தி செய்பவர்கள் என இருவருக்குமே அரசாங்கம் மானியம் அளித்தால் மட்டுமே, அதன் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எலக்ட்ரிக் வாகனங்களின் முக்கிய பாகம் என்றால், அதன் பேட்டரிதான். ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் இதன் விலை வருங்காலத்தில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

குறைந்த சக்தி

எலக்ட்ரிக் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் ஆக்ஸலரேஷன் மிகவும் சிறப்பாக இருக்கும். அதாவது அந்த வாகனங்கள் அதிக சக்தி வாய்ந்தவை. எலக்ட்ரிக் வாகனங்களின் பவர் குறைவாக இருப்பது ஒரு மைனஸ்தான்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

ரேஞ்ச்

ஒரு முறை சார்ஜ் செய்தால், எலக்ட்ரிக் வாகனம் எவ்வளவு தூரம் ஓடும் என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. எனவே நீண்ட நெடுந்தூர பயணங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்கின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

ஆனால் டெஸ்லா மற்றும் ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் நல்ல ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கவே செய்கின்றன. ஒரு சராசரி எலக்ட்ரிக் வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 முதல் 200 மைல் வரை பயணிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

MOST READ: உங்கள் காசுக்கு வேட்டு வைக்கும் "ஹெட்லைட் எமன்"; போலீஸ் கிட்ட மாட்டுனா அவ்வளவு தான்..!

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

ஒரு சில குறைகள் இருந்தாலும் கூட, எலக்ட்ரிக் வாகனங்களினால் நிறைய பயன்கள் உள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் ஆதரவு அளித்தால், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எகோ ப்ரெண்ட்லி

எலக்ட்ரிக் வாகனங்களின் முதன்மையான பயன் எகோ ப்ரெண்ட்லிதான். பெட்ரோல், டீசல் போன்று தீய வாயுக்களை வெளியிட்டு, காற்றை மாசுபடுத்தும் பணியை எலக்ட்ரிக் வாகனங்கள் ஒருபோதும் செய்யாது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

பர்ஸ் ப்ரெண்டலி...!!!

பெட்ரோல், டீசல் வாங்குவதற்கே லோன்தான் வாங்க வேண்டும் என்பது போல அவற்றின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது...!!! இன்று குறைந்து விடும், நாளை குறைந்து விடும் என எதிர்பார்த்து காத்திருக்கும் சாமானிய மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எனவே எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தினால், பெட்ரோல், டீசலுக்கு செலவிட வேண்டிய தொகையை மிச்சம் பிடிக்கலாம். ஒரு முறை சார்ஜ் மட்டும் செய்து விட்டு, ரிலாக்ஸாக சுற்றி வரலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

அதாவது பெட்ரோல், டீசல் வாகனங்களில் ஒரு மைல் செல்வதற்கு ஆகும் செலவை விட எலக்ட்ரிக் வாகனங்களில் 30 சதவீதம் வரை குறைவான செலவே ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் மொபைலில் டெலிகிராம் ஆப் இருக்கிறதா இப்பொழுதே இங்கே கிளிக் செய்து எங்களுடன் இணையுங்கள்..!

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எளிதாக சார்ஜ் செய்யலாம்

எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வது எளிதானது. எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கு, ஒரு சாதாரண சாக்கெட் போதுமானதுதான்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

அமைதியானவை

எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை மட்டும் குறைப்பதில்லை. கூடவே சேர்த்து ஒலி மாசுபடுவதையும் தவிர்க்கின்றன. ஆம், எலக்ட்ரிக் வாகனங்களில் சப்தமே எழாது. பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் அமைதியானவை. மற்றும் ஸ்மூத் ஆனவை.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி குறித்தும் பலருக்கு அச்சம் உள்ளது. ஆனால் தேவையில்லாமல் பயப்பட தேவையில்லை. ஒரு நல்ல பேட்டரி, 10 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

இந்தியா தனது பெட்ரோல், டீசல் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறது. எப்போது ஒரு நாட்டின் இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்கிறதோ அப்போதுதான் அந்நாடு பொருளாதார ரீதியில் முன்னேறும்.

MOST READ: ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

பெட்ரோல், டீசல் இறக்குமதியின் அளவு குறைந்தால், நமது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரிக்கும். இது நமது நாட்டின் கஜானாவிற்கு பலன் அளிக்க கூடிய ஒரு பொதுவான விஷயம்.

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Tamil
English summary
Electric Vehicle Sales Increased In India. Read in Tamil
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more