கலால் வரி குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது... காரணம்?

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைக்கப்பட்டாலும், விலை குறையாத அளவுக்கான யுக்தியை மத்திய அரசு கையாண்டுள்ளது.

By Saravana Rajan

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கலால் வரியை குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை குறையாத வகையில் புதிய வரி விதிக்கப்பட்டு இருப்பதால் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலால் வரி குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது... காரணம்?

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

கலால் வரி குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது... காரணம்?

மேலும், சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை 80 ரூபாயை எட்டியதால், கலால் வரியை குறைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.

Recommended Video

Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
கலால் வரி குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது... காரணம்?

ஆனால், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு கிஞ்சித்தும் இல்லை என்பது மத்திய பட்ஜெட்டில் செய்த ஒரு காரியமே சான்றாக மாறி இருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான அடிப்படை கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கலால் வரி குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது... காரணம்?

மேலும், கூடுதல் கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் வரை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பு பொய்க்கும் விதத்தில் புதிய சாலை செஸ் வரியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

கலால் வரி குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது... காரணம்?

இந்த வரி மூலமாக கலால் வரியில் குறைக்கப்பட்ட 8 ரூபாய் ரோடு செஸ் என்ற இந்த புதிய வரியின் மூலமாக சமன் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலால் வரி குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது... காரணம்?

பெட்ரோல், டீசலுக்கான வரி நிர்ணய முறை ஜிஎஸ்டி நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதுகுறித்து பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

கலால் வரி குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது... காரணம்?

ஆனால், பெட்ரோல், டீசல் விலைக்கான வரியை குறைத்தால் அது நடப்பு பற்றாக்குறையை பெருமளவு அதிகப்படுத்தும் அச்சத்தால், புதிய வரியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போயிருக்கிறது.

 கலால் வரி குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது... காரணம்?

ஆக மொத்தத்தில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ஒரு வகையில் கூட நன்மைையான செய்திகள் இந்தத பட்ஜெட்டில் இல்லை என்பது பெரும் ஏமாற்றமே.

Most Read Articles
English summary
Even Excise Duty Cut On Petrol, Diesel Price Will Remain Unchanged: Here's Why
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X