400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தாலும் 7 உயிர்களை காப்பாற்றிய எண்டெவர் எஸ்யூவியின் கட்டுமானம்... அதாங்க
மஹாராஷ்டிராவில் நடந்த பயங்கர விபத்தில் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். காரின் பாதுகாப்பு அம்சங்கள் அவர்கள் உயிர்பிழைக்க உதவியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஃபோர்டு எண்டெவர் கார் ஒன்று 400 அடி பள்ளத்தில் உருண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

மஹாராஷ்டிர மாநிலம், வாசய் நகரை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங். கட்டுமானத் தொழில் அதிபரான இவர் சமீபத்தில் தனது மனைவி, குழந்தைகளுடன் சில நாட்களுக்கு முன் சிந்த்துர்க் மாவட்டத்திலுள்ள கன்கவ்லி என்ற இடத்திற்கு வார இறுதியில் சுற்றுலா சென்றுள்ளார்.

காலை 6 மணியளவில் அவர்கள் கோல்ஹாப்பூர் அருகே ககன்பவடா என்ற இடத்தை கடந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரில் அதிவேகமாக ஒரு டிரக் நேர் எதிராக வந்துள்ளது.

இதனை பார்த்த ஜிதேந்திர சிங் கார் ஓட்டுனர், டிரக் மீது நேருக்கு நேர் மோதாமல் இருப்பதை தவிர்க்க, இடதுபுறத்தில் திருப்பி இருக்கிறார். ஆனால், அந்த சாலை வளைவாகவும், மிக குறுகலாகவும் இருந்துள்ளது.

இதனால், கார் மாறிச் செல்வதற்கு போதிய இடமின்றி, சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கிடுகிடு பள்ளத்தில் பல்டியடித்தது. கிட்டத்தட்ட 400 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து நின்றது.
Recommended Video


இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த ஜிதேந்திர சிங், மனைவி, அவரது 3 குழந்தைகள், ஓட்டுனர் மற்றும் நண்பர் ஆகிய 7 பேரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், காரையும் கிரேன் உதவியுடன் மேலே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து போனது.

ஃபோர்டு கார்கள் எப்போதுமே சிறந்த கட்டுமானத்திற்கு பெயர் பெற்றவை. அதனை உறுதி செய்யும் விதத்தில் ஒரு பெரும் விபத்திலிருந்து 7 பேர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

காரில் இருந்த 6 ஏர்பேக்குகளும் உரிய நேரத்தில் விரிவடைந்து பயணிகளை காத்திருப்பதுடன், காரின் வலுவான கட்டுமானமும் இந்த மோசமான விபத்திலிருந்து பயணிகளை காவந்து செய்துள்ளது.
ஃபோர்டு எண்டெவர் விபத்து குறித்த வீடியோவை இங்கே காணலாம்.
பீர் குடிக்க காரில் 32,000 கிமீ தூரம் டூர் அடித்த சாகச பயண பிரியர்!

பீர் குடிப்பதற்காக வடதுருவ முனையிலுள்ள மதுபான பாரிலிருந்து தென்துருவ முனையிலுள்ள மதுபான பாருக்கு சாகச பயண ஆர்வலர் ஒருவர் 32,000 கிமீ தூரம் பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் பென் கூம்ஸ். சாகச பயண விரும்பியான இவர் பீர் குடிப்பதிலும் அதீத ஆர்வம் கொண்டவர். எழுத்தாளரும்கூட. ஒருநாள் பாரில் அமர்ந்து பீர் அருந்தும்போது, அவருக்கு வித்தியாசமான யோசனை தோன்றியது. அதாவது, நீண்ட தூர பார் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசை துளிர்விட்டது.

ஐரோப்பிய கலாச்சாரத்தில் பார் பயணம் என்பது பிரபலமானது. ஒரு இரவில் சைக்கிள், நடை பயணம் அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்தி அதிக பார்களில் பீர் குடிப்பதுதான் பார் பயணம் என்று குறிப்பிடப்படுகிறது. புதிய நண்பர்கள் மற்றும் சுற்றுலா வருபவர்களை கவரும் விதத்தில் இந்த பார் பயணம் அங்கு மேற்கொள்ளப்படுவது வாடிக்கை.

அடிக்கடி பார் பயணம் செய்த அனுபவமுடைய பென் கூம்ஸுக்கு நீண்ட தூர பார் பயணம் மேற்கொள்ள ஆசை பிறந்தது. இதற்காக மண்டையை கசக்கியதில், வட துருவத்திலிருந்து தென் துருவத்திற்கு பயணிக்க முடிவு செய்தார்.

நார்வே நாட்டின் ஸ்வால்பார்டு என்ற இடத்திலிருக்கும் கைவிடப்பட்ட பிரமிடென் சுரங்கப் பகுதியிலுள்ள மது பான பாரிலிருந்து புறப்பட்டு தென்துருவத்தின் சிலி நாட்டிலுள்ள மதுபான பார் வரை பயணிக்க முடிவு செய்தார்.

ஆர்ட்டிக் பிரதேசத்தின் அருகில் அமைந்துள்ள பிரமிடென் சுரங்கப் பகுதியில் 4 பேர் மட்டுமே தற்போது வசிக்கின்றனராம். அங்கு இயங்கி வரும் பாரிலிருந்துதான் 38 வயதாகும் பென் கூம்ஸ் தனது பயணத்தை துவங்கினார்.

அங்கிருந்து புறப்பட்டு தென் அமெரிக்க நாடான சிலியின் டியாரா டெல் ஃப்யூகோ என்ற தென்கோடி முனைக்கு நோக்கி பயணித்தார். இந்த பயணத்திற்காக தனது டிவிஆர் சிமேரா என்ற கன்வெர்ட்டிபிள் ரக ஸ்போர்ட்ஸ் காரை பயன்படுத்தினார்.

டிவிஆர் சிமேரா கார் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகத்தையும் பார்க்கலாம். இங்கிலாந்தை சேர்ந்த டிவிஆர் நிறுவனம் 1992 முதல்ல 2003ம் ஆண்டு வரை தயாரித்த கார் மாடல்தான் டிவிஆர் சிமேரா. கன்வெர்ட்டிபிள் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

க்ரிஃபித் காரில் பயன்படுத்தப்படும் சேஸீயில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ரோவர் வி8 எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்பட்டன. பென் கூம்ஸ் கார் 20 ஆண்டுகள் பழமையானது. இந்த காரில்தான் தற்போது மிக நீண்ட தூர சாகச பயணத்தை செய்துள்ளார் கூம்ஸ்.

பிரமிடெனில் துவங்கிய பயணம், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை கடந்து சவுதம்ப்டன் துறைமுகம் வரை நீண்டது. அங்கிருந்து கப்பல் மூலமாக நியூயார்க் நகருக்கு பென் கூம்ஸ் கார் எடுத்துச் செல்லப்பட்டது.

அட்லான்ட்டிக் பெருங்கடலை தாண்டி அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரை கார் அடைந்தது. அங்கிருந்து கலிஃபோர்னியாவை நோக்கி பென் கூம்ஸ் பயணித்தார்.

இடையில் நாம் ஏற்கனவே எழுதியிருந்து உலகின் மரணச் சாலை வழியாகவும் பயணித்துள்ளார். டெத் ரோடு எனப்படும் இந்த சாலை பொலிவியாவில் உள்ளது. ஆண்டுக்கு 300 பேரை காவு வாங்கும் இந்த சாலையில் சாகச பயண பிரியரான பென் கூம்ஸின் எதிர்பார்ப்புக்கு மேலாகவே த்ரில்லான பயண அனுபவத்தை வழங்கியுள்ளது.

பின்னர் தென் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா, ஈக்குவடார்,பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா நாடுகள் வழியாக 12,874 கிமீ தூரம் பயணித்தார். பின்னர், உலகின் தென்கொடி முனையிலுள்ள டியாரா டெல் ஃப்யூகோ பகுதியை அடைந்தார்.

மொத்தம் 31,000 கிமீ தூரத்திற்கு 21 நாடுகள் மற்றும் மூன்று கண்டங்களை கடந்து தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஆங்காங்கே இருந்த பயண ஆர்வலர்களும் பென் கூம்ஸ் பயணத்திற்கு வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் வந்துள்ளனர். இதனால், தனது பயணம் மிக எளிதாக நிறைவு செய்ய முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

ஒரு வழியாக பென் கூம்ஸின் 7 மாத பயணம் கடந்த 12ந் தேதி தென் அமெரிக்காவில் உள்ள டியரா டெல்ல ஃப்யூகோ பகுதியிலுள்ள உலகின் தென்கோடி முனையில் உள்ள மது பாரில் சுபம் போட்டு முடிந்தது.

தற்போதைக்கு உலகின் மிக நீண்ட தூர பார் பயணம் செய்த பெருமையை பென் கூம்ஸ் பெற்றிருக்கிறார். இந்த பயணத்திற்கு பலர் ஸ்பான்சர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார் பென் கூம்ஸ்.
Source: Pub2Pub


Click it and Unblock the Notifications








