TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
ஃபியட் புன்ட்டோ மற்றும் லீனியா கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன!
ஃபியட் புன்ட்டோ மற்றும் லீனியா கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
வலுவான கட்டமைப்பு தரத்துடன் கூடிய பாதுகாப்பான கார்கள் என்ற பெருமை ஃபியட் புன்ட்டோ மற்றும் லீனியா கார்களுக்கு உண்டு. குறிப்பாக, ஃபியட் பிரியர்களால் இந்த கார்கள் அதிகம் சிலாகித்து பேசப்பட்டு வருகின்றன.
ஆனால், மிக மோசமான விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் விற்பனை கொள்கைகளால் சிறந்த கார்களாக இருந்தும் இந்தியாவில் விற்பனையில் சோபிக்க இயலாத நிலையில் ஃபியட் கார்கள் உள்ளன. மேலும், இதன் ரகத்திலான பல கார்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஃபியட் கார்கள் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் செய்யப்படாமல் விற்பனையில் உள்ளது.
இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஃபியட் நிறுவனம் இந்தியாவில் மிக மோசமான விற்பனை நிலையில் காலம் தள்ளி வருகிறது. எனினும், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மூலமாக வர்த்தகத்தை சரிகட்டி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் வர்த்தகத்தை சீர்படுத்த ஃபியட் க்றைஸ்லர் குழுமம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஃபியட் புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், ஃபியட் பிராண்டில் கார் வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் முடிவு செய்துள்ளதாகவும் லைவ் மின்ட் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஃபியட் புன்ட்டோ மற்றும் லீனியா கார்கள் மட்டுமின்றி, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அபார்த் புன்ட்டோ, அவென்ச்சுரா மற்றும் அர்பன் க்ராஸ் கார்களும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜீப் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலையில் புத்தம் புதிய காம்பஸ் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த எஸ்யூவி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ஜீப் பிராண்டில் அடுத்து ஒரு காம்பேக்ட் எஸ்யூவியையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளது.
எனவே, ஜீப் பிராண்டை வைத்து இந்திய வர்த்தகத்தை முன்னிறுத்த ஃபியட் க்றைஸ்லர் திட்டமிட்டுள்ளது. ஃபியட் கார்களுக்கு முதலீடு செய்வதில் பலன் இருக்காது என்று கணித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
2020ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா மாறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கடந்த 1905ம் ஆண்டு முதல் நூற்றாண்டை தாண்டி இந்தியாவில் ஃபியட் நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. புதிய கார் நிறுவனங்கள் எல்லாம் சுதாரிப்பாக, வர்த்தகத்தை நிலைநாட்டியுள்ள நிலையில், ஃபியட் பிராண்டு வெளியேற இருப்பது துரதிருஷ்டவசமானது.
கடந்த ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் செவர்லே கார் நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து, இரண்டாவதாக, இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனமும் இந்தியாவில் கார் வர்த்தகத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
ஃபியட் கார்கள் விற்பனை நிறுத்தப்பட்டாலும், ஜீப் பிராண்டில் பல புதிய மாடல்களுடன் இந்திய வர்த்தகத்தை தொடர ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டமிட்டிருப்பது ஆறுதலான விஷயமாக பார்க்க முடியும்.