கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை மோசடி செய்த ஷோரூம் முன்னாள் ஊழியர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை மோசடி செய்த ஷோரூம் முன்னாள் ஊழியர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள பஜ்கீரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஹரி ஓம். இவர் செக்டார் 18 என்ற பகுதியில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்றை புக் செய்தார்.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

10 நாட்கள் கழித்து, அதாவது 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஹரி ஓமுக்கு கார் டெலிவரி செய்யப்பட்டது. காருக்காக 11.05 லட்ச ரூபாயை ஹரி ஓம் செலுத்தியிருந்தார். இதுதவிர ரிஜிஸ்ட்ரேஷனுக்கு என தனியாக 1.09 லட்ச ரூபாயையும் ஹரி ஓம் கட்டியிருந்தார்.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

இதன்பின் ஹரி ஓம் வாங்கிய காருக்கு HR26-DC7485 என்ற ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் வழங்கப்பட்டது. ஆனால் ஹரி ஓமின் கார், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருடுபோனது. பஞ்சாபி பாக் என்ற பகுதியில்தான் ஹரி ஓமின் கார் கொள்ளையடிக்கப்பட்டது.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

எனவே உடனடியாக பஞ்சாபி பாக் போலீஸ் ஸ்டேஷனில் ஹரி ஓம் புகார் அளித்தார். அப்போது காரின் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி ஹரி ஓமிடம் போலீசார் கேட்டனர். ஆனால் தனது காரினுடைய ஆவணங்களின் நகல் ஹரி ஓமிடம் இல்லை. எனவே அவர் ஆர்டிஓ அலுவலகத்தை அணுகினார்.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

அப்போதுதான் ஹரி ஓமின் காருக்கு வழங்கப்பட்ட HR26-DC7485 என்ற பதிவு எண், வேறு ஒரு டூவீலரினுடைய பதிவு எண் என்பது தெரியவந்தது. அத்துடன் கார் வாங்கும்போது ரிஜிஸ்ட்ரேஷனுக்கு என ஹரி ஓம் செலுத்திய ரூ.1.09 லட்சத்தை, ஷோரூம் ஊழியர்கள் 2 பேர் மோசடி செய்ததும் கண்டறியப்பட்டது.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

ஹரி ஓம் கார் வாங்கிய சமயத்தில், அந்த ஷோரூமில் மேலாளராகவும், விற்பனை பிரதிநிதியாகவும் பணியாற்றிய இருவர்தான், ரூ.1.09 லட்ச ரூபாயை மோசடி செய்திருந்தனர். அது காலதாமதமாகதான் ஹரி ஓமுக்கு தெரியவந்தது.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

எனவே தான் கார் வாங்கிய ஷோரூமை, ஹரி ஓம் உடனடியாக தொடர்பு கொண்டார். ஆனால் புகார் கூறப்படும் மேலாளரும், விற்பனை பிரதிநிதியும் அந்த சமயத்தில் அங்கு வேலையில் இல்லை. எனவே இதுகுறித்தும் ஹரி ஓம் போலீசில் புகார் அளித்தார்.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணையை நடத்திய போலீசார், புகாருக்கு உள்ளான ஷோரூமின் முன்னாள் மேலாளர் மற்றும் விற்பனை பிரதிநிதி ஆகிய இருவர் மீதும் தற்போது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

அந்த 2 முன்னாள் ஊழியர்கள் குறித்தும், ஷோரூமின் தற்போதைய மேலாளரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், ''புகாருக்கு உள்ளான 2 முன்னாள் ஊழியர்களும் முன்பே வேலையை விட்டு சென்று விட்டனர். அவர்களுக்கும், ஷோரூமுக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை'' என்றார்.

கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்

வாடிக்கையாளர்கள் சற்றே அசந்தாலும் நூதன முறையில், அவர்களை கார் ஷோரூம் ஊழியர்கள் ஏமாற்றி விடுகின்றனர். இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது, வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

வெறும் ரப்பர் பெல்ட் பழுதான காரை சரி செய்ய ரூ.1.68 லட்சம் செலவாகும் என ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த காரை, சாதாரண மெக்கானிக் ஒருவர், வெறும் ஆயிரம் ரூபாய் செலவில், சரி செய்து கொடுத்துள்ளார்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நவீன். இவரது நண்பர் ஒருவர், ஸ்கோடா லாரா (Skoda Laura) கார் வைத்துள்ளார். இந்த காரின் உரிமையாளருடைய மகன், அதாவது நவீனின் நண்பரது மகன், கடந்த 16ம் தேதி, தங்களது ஸ்கோடா லாரா காரை ஓட்டி கொண்டு வெளியே சென்றார்.

*Images for representational purpose only.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

அப்போது திடீரென கார் பழுதாகி நின்று விட்டது. எவ்வளவு முயன்றும் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. நல்லவேளையாக அருகிலேயேதான் வீடு இருந்தது. எனவே மற்றொரு வாகனம் மூலம் டவ் (tow) அடித்து, தங்களது ஸ்கோடா லாரா காரை, எப்படியோ வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

மறுநாள், அதாவது ஆகஸ்ட் 17ம் தேதி, நவீனின் நண்பரும், அவரது மகனும், ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற (Autobahn Enterprises Pvt. Ltd) ஸ்கோடா இந்தியா நிறுவன டீலரை அணுகினர். பின்னர் தங்கள் காரில் ஏற்பட்ட பிரச்னை குறித்து தெரிவித்தனர்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

இதன்பின்னர் அந்த டீலர்ஷிப்பில் இருந்து வந்த ஊழியர்கள், காரை மீண்டும் டவ் அடித்து, தங்களது சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மெக்கானிக்குகள், காரை சோதித்து பார்த்தனர். பின்னர் காரை சரி செய்ய 1.68 லட்ச ரூபாய் செலவு ஆகும் என எஸ்டிமேட் (Estimate) கொடுத்தனர்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

அதாவது ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கு 1.43 லட்ச ரூபாய் செலவாகும் எனவும், லேபர் சார்ஜ் ரூ.25 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவீனின் நண்பருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த ஸ்கோடா டீலர், தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என அவர் கருதினார்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

இதன்பின் பாரத் ஆட்டோ அசோசியேட்ஸ் என்ற சிறிய நிறுவனத்தை சேர்ந்த நிதின் என்பவரை, நவீனின் நண்பர் அழைத்தார். பாரத் ஆட்டோ அசோசியேட்ஸ் என்பது ஒரு கார் சர்வீஸ் சென்டர் ஆகும். ஆனால் அது, ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது அல்ல.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

இருந்தாலும் பரவாயில்லை என நினைத்த நவீனின் நண்பர், காரை அங்கேயே கொண்டு செல்வது என முடிவெடுத்தார். ஆனால் காரை விடுவிக்க வேண்டுமென்றால், ரூ.3 ஆயிரம் கட்ட வேண்டும் என ஸ்கோடா டீலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

காரில் என்ன குறை என்பதை கண்டறிந்து, அதற்கு எஸ்டிமேட் போட்டதற்குதான் அந்த 3 ஆயிரம் ரூபாய் போல! இருந்தாலும் நவீனின் நண்பர் அந்த ரூ.3 ஆயிரத்தையும் செலுத்தி விட்டார். வேறு என்ன செய்வது? காரை வெளியில் எடுத்தாக வேண்டுமே.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

அதன்பின் வொர்லி என்ற பகுதியில் உள்ள பாரத் ஆட்டோ அசோசியேட்ஸின் ஒர்க்ஸாப்பிற்கு, நவீனின் நண்பரது கார் கொண்டு செல்லப்பட்டது. ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் குர்லா என்ற பகுதியில் உள்ளது.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

குர்லாவில் இருந்து வொர்லி வரை, நவீனின் நண்பரது கார், மீண்டும் டவ் அடித்தே கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்த மெக்கானிக் காரை பரிசோதித்து பார்த்து விட்டு, வெறும் 1,062 ரூபாய்தான் செலவாகும் என எஸ்டிமேட் கொடுத்தார்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

இதன்பின் நடந்தவற்றை நவீன் விவரிக்கிறார். ''பாரத் ஆட்டோ அசோசியேட்ஸின் ஒர்க்ஸாப்பிற்கு காரை கொண்டு வந்தோம். அங்குள்ள மெக்கானிக் காரை சோதித்து பார்த்து விட்டு, ரப்பர் பெல்ட்டை மட்டும் மாற்ற வேண்டும் என கூறினார். இதற்கு லேபருடன் சேர்த்து வெறும் 1,000 ரூபாய் மட்டுமே செலவானது.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

காரில் என்ன பழுது? என்பதை கண்டறிந்து, அதனை சரி செய்வதற்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே ஆனது. ஆனால் ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரான ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், 1.68 லட்ச ரூபாய்க்கு எஸ்டிமேட் கொடுத்தனர்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

தற்போது எனது நண்பர் காரை வழக்கம்போல பயன்படுத்தி வருகிறார். காரில் எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை. ஒரு சிறிய கேரேஜை சேர்ந்த மெக்கானிக், வெறும் 1,000 ரூபாய் செலவில் காரை சரி செய்து கொடுத்து விட்ட நிலையில், ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பில் எதற்காக ரூ.1.68 லட்சம் கேட்டனர்?

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

அவர்களின் நோக்கம் என்ன? என்பது எங்களுக்கு புரியவில்லை'' என்றார். இந்த சம்பவம், கார் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்த சம்பவங்களை எல்லாம் நவீன்தான், இணையதளங்களின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அத்துடன் பில் ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
FIR Registered Against Ex-Showroom Staffs For Cheating Car Buyer. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X