அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலின் உற்பத்தி அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை உறுதி செய்துள்ளது அஸ்டன் மார்ட்டின் நிறுவனம்.

By Saravana Rajan

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலின் உற்பத்தி அடுத்த ஆண்டு துவங்குகிறது. அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை உறுதி செய்துள்ளது அஸ்டன் மார்ட்டின் நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!

எஸ்யூவி கார்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. எனவே, உயர் ரக கார் தயாரிப்பு நிறுவனங்களும் இப்போது எஸ்யூவி மாடலை களமிறக்க முனைப்பு காட்டி வருகின்றன. பென்ட்லீ பென்டைகா, லம்போர்கினி உரஸ் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் கலினன் என உயர் வகை எஸ்யூவி மாடல்கள் வரிசை கட்டி வருகின்றன.

அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!

இந்த வரிசையில், அஸ்டன் மார்ட்டின் நிறுவனமும் முதல் எஸ்யூவி மாடலை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அடுத்த ஆண்டு தனது புதிய எஸ்யூவியின் உற்பத்தி துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள அஸ்டன் மார்ட்ட்டின் நிறுவனத்தின் செயிண்ட் அதான் ஆலையில்தான் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!

எனினும், கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் நடந்த பெபுள் பீச் ஆட்டோமொபைல் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!

இந்த புதிய எஸ்யூவிக்கு வரேகய் என்று பெயரிடப்பட உள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. ரோமானிய மொழியில் வரேகய் என்பதற்கு எங்கு வேண்டுமானாலும் என்று பொருள்படுகிறது.

அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!

இந்த புதிய அஸ்டன் மார்ட்டின் எஸ்யூவியில் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். மேலும், உலகின் அதிசக்திவாய்ந்த எஸ்யூவி மாடலாக அஸ்டன் மார்ட்டின் வரேகய் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அஸ்டன் மார்ட்டின் உரஸ் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடலானது 650 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக உள்ளது.

அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!

ஆனால், அஸ்டன் மார்ட்டின் எஸ்யூவியானது 700 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனுடன் வர இருக்கிறது. மெர்சிடிஸ்- ஏஎம்ஜி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் வி8 ட்வின் டர்போசார்ஜ்டு எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் மிக சக்திவாய்ந்த மாடலாக இருக்குமாறு களமிறக்க அஸ்டன் மார்ட்டின் திட்டமிட்டுள்ளது.

அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!

பென்ட்லீ பென்டைகா, லம்போர்கினி உரஸ், ரோல்ஸ்ராய்ஸ் கலினன் போன்ற உயர் வகை எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். அஸ்டன் மார்ட்டின் மட்டுமின்றி, இதே ரகத்தில் ஃபெராரி சூப்பர் கார் நிறுவனமும் புதிய எஸ்யூவி மாடலை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 26, 2018, 12:05 [IST]
English summary
First Aston Martin SUV to Enter Production in 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+