பெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி

இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மோசமான விபரீதம் ஒன்று முதல் முறையாக அரங்கேறியுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இதுதவிர மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரி காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இதில், மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். எனவே இந்தியா முழுவதும் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாவது கிடையாது. அதற்கு மாறாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாக வலுத்து வருகிறது. ஏனெனில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படும் பட்சத்தில், ஒரே வரி என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக குறையும்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இதன் காரணமாகதான் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரி மூலமாக கிடைக்கும் அதிகப்படியான வருவாயை இழக்க வேண்டியது வரும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

MOST READ: ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

எனவே தொடர்ந்து அதிகப்படியான விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். வாகனங்களுக்கான பெட்ரோல், டீசலுக்கு என மாதந்தோறும் பெருந்தொகையை அவர்கள் ஒதுக்க வேண்டியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்காத மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீதுதான் மிக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஆனால் மத்திய அரசு எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. அத்துடன் மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான திட்டங்கள் எதுவும் மத்திய அரசிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலையில் மோசமான புதிய அத்தியாயம் ஒன்று தொடங்கியிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

பொதுவாக இந்தியாவில் பெட்ரோலின் விலையை காட்டிலும் எப்போதும் டீசலின் விலை குறைவாகவே இருக்கும். அதாவது பெட்ரோலை விட 10 ரூபாய் குறைவான விலையிலேயே டீசல் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

MOST READ: பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஆனால் சமீபகாலமாக இந்த நிலையில் மாற்றம் தென்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோலின் விலையை டீசலும் நெருங்கி வந்தது. இந்த சூழலில் வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோலை விட அதிகமான விலைக்கு டீசல் சென்றுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இந்தியாவில் பெட்ரோல் விலையை டீசல் விலை கடப்பது இதுவே முதல் முறை. பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமான இந்தியாவின் முதல் மாநிலம் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியிருப்பது ஒடிசா.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நேற்றைய (அக்டோபர் 21) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 80.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 80.69 ரூபாய்க்கு விற்பனையானது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை காட்டிலும் டீசலின் விலை 12 காசுகள் அதிகம்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

புவனேஸ்வர் நகரில் இன்றைய (அக்டோபர் 22) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 80.27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு லிட்டர் டீசலோ 80.40 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலை காட்டிலும் 13 காசுகள் அதிகமான விலையில் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய பாரதிய ஜனதா அரசுதான் காரணம் என பிஜூ ஜனதா தளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

MOST READ: ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, மாநில அரசு வாட் வரியை குறைக்காததே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது. ஒடிசா மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிற்கும் 26 சதவீத வாட் வரியை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

மத்திய, மாநில அரசுகள் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ சாமானிய மக்கள்தான். குறிப்பாக டீசல் கார் வாங்கிய மக்கள்தான் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

பொதுவாக பெட்ரோல் கார்களை காட்டிலும் டீசல் கார்கள் அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் பெரும்பாலானோர் டீசல் கார்களைதான் தேர்வு செய்கின்றனர். பெட்ரோலை விட டீசலின் விலை குறைவு என்பதே இதற்கு மிக முக்கிய காரணம்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஆனால் தற்போது பெட்ரோல் விலையை டீசலின் விலை கடந்து சென்றுள்ளது. இதனால் டீசல் கார் வாங்கிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதவிர டீசலில் இயங்கும் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

அத்துடன் இனி பெட்ரோல் கார் வாங்குவதா? அல்லது டீசல் கார் வாங்குவதா? என்ற குழப்பமும் மக்கள் மத்தியில் மீண்டும் எழ தொடங்கியுள்ளது.

MOST READ: மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய (அக்டோபர் 22) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 84.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 79.22 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

தமிழகத்திலும் பெட்ரோலின் விலையை டீசலின் விலை நெருங்கி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெட்ரோலின் விலையை விட டீசலின் விலை அதிகம் என்ற மோசமான வரலாறு இங்கும் உருவாகி விடுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது கார் உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. இந்த நேரத்தில் மைலேஜாவது கொஞ்சம் அதிகமாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் கார் உரிமையாளர்களின் எண்ணம்.உங்கள் கார் குறித்து யாரிடம் பேசினாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? என்பதாகதான் இருக்கும். எனவே காரின் மைலேஜை எப்படி அதிகரிப்பது? என்பது குறித்து இனி பார்க்கலாம்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

பெட்ரோல்/டீசல்

நீங்கள் ஒரே பிராண்ட் பெட்ரோல்/டீசல் நிரப்புவது நல்லது. வேறு வேறு இடங்களில் எரிபொருளின் தரத்தில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். இதை காரின் இன்ஜினால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் நல்ல மைலேஜ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் எப்போதும் ஒரே பங்க்கில் எரிபொருள் நிரப்புவதும் நல்லது. ஏனெனில் ஒரே பிராண்ட் எரிபொருள் என்றாலும் ஒவ்வொரு பங்க்கிற்கும் வித்தியாசம் இருக்கும்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

ஓடோ/ டிரிப் மீட்டர்கள்

உங்கள் காரின் மைலேஜை அடிக்கடி கணக்கிட்டு கொள்வது நல்லது. அப்போதுதான் காரின் மைலேஜ் குறைந்தால் உங்களுக்கு தெரியவரும். பொதுவாக கார்களில் ஓடோ மீட்டர், டிரிப் மீட்டர் என இரண்டு மீட்டர்கள் இருக்கும்.ஓடோ மீட்டர் என்பது நீங்கள் கார் வாங்கியதில் இருந்து இதுவரை எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது? என்பதை கணக்கிடுகிறது. அதே நேரத்தில் டிரிப் மீட்டர் என்பது நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட நேரத்தில் கார் எவ்வளவு தூரம் ஓடியுள்ளது?என்பதை கணக்கிடுவதற்கானது.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

நீங்கள் ஓவ்வொரு முறை காரில் எரிபொருள் நிரப்பும் போதும் டிரிப் மீட்டரை ரீசெட் செய்து கொள்ளுங்கள். அடுத்த முறை எரிபொருள் நிரப்பும்போது எவ்வளவு தூரம் கார் பயணித்துள்ளது என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் ஒவ்வொரு முறை எரிபொருள் நிரப்பும் போதும் உங்களது காரின் மைலேஜை சரியாக கணக்கிட முடியும்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

சில கார்களில் டிரிப் ஏ, டிரிப் பி என இரண்டு டிரிப் மீட்டர்கள் இருக்கும். நாம் அதிக தூரம் டிரிப் செல்லும் போது டிரிப் முடியும் முன்பே அடிக்கடி எரிபொருள் நிரப்ப வேண்டிய சூழ்நிலை வந்தால், அந்த நேரங்களில் இது உதவும். அதாவது டிரிப் ஏ-வில் முழு டிரிப்பிற்கான தூரத்தையும், டிரிப் பி-யில் ஒவ்வொரு முறை எரிபொருள் நிரப்பிய போதும் பயணம் செய்த தூரத்தையும் கணக்கிட்டு கொள்ளலாம்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

டிரைவிங் சைக்கிள்

பொதுவாக கார் ஒருவரின் டிரைவிங்கில் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். ஆனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது ஒரே ஆள் வாகனத்தை ஓட்டுவது என்பது முடியாத காரியம். அந்த நேரங்களில் இரண்டு அல்லது மூன்று பேர் வாகனத்தை மாறி மாறி ஒட்ட வேண்டிய சூழ்நிலை வரும். அந்த நேரங்களில் மைலேஜில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

இதை கட்டுப்படுத்த ஒவ்வொரு டிரைவர் மாறும் போதும் எரிபொருளின் அளவையும், பயண தூரத்தையும் கணக்கிட வேண்டும். இதன் மூலம் யார் டிரைவிங்கில் அதிக எரிபொருள் செலவாகிறது? என்பதை கணக்கிட்டு அவர்களின் டிரைவிங் ஸ்டைலை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

கார் பராமரிப்பு

உங்கள் காரின் மைலேஜ் என்பது எரிபொருள் மற்றும் இன்ஜின் செயல்பாட்டில் மட்டும் இருப்பதில்லை. உங்கள் காரின் மற்ற பாகங்களை பொருத்தும் மாறுகிறது. உதாரணத்திற்கு உங்கள் காரின் வீல்களில் காற்று குறைவாக இருந்தால் வீல் சுற்றுவதற்கு சற்று சிரமப்படும். அந்த நேரங்களில் எரிபொருள் அதிகம் செலவாகும். சில நேரங்களில் பியூயல் பம்ப்களில் உள்ள பிரச்சனைகளாலும் மைலேஜில் பாதிப்பு ஏற்படலாம். அதனால் நீங்கள் காரை சரியான நேரத்தில் பராமரித்து கொள்ளவது நல்லது.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

தொழிற்நுட்பம்

இன்று செல்போனில் கார் மைலேஜை கணக்கிடும் பல ஆப்ஸ்கள் வந்து விட்டது. இதில் நாம் காருக்கு எப்பொழுது எவ்வளவு பெட்ரோல் போடுகிறோம் என்பதை பதிவு செய்தாலே போதும். அது நாம் அடுத்த பெட்ரோல் போடும் போது எவ்வளவு தூரம் பயணத்துள்ளோம் என்பதை கணக்கிட்டு நமது காரின் மைலேஜை கூறுகிறது. அதே நேரங்களில் நாம் செயல்பாடுகளை கணக்கிட்டு இன்னும் அதிக மைலேஜை பெற என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்களையும் வழங்குகிறது. இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

ஆனால் இந்த மொபைல் ஆப்ஸ்கள் பயண நேரத்தில் இண்டர்நெட் சிக்னல்கள் கட் ஆனாலோ, செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனாலோ அந்த நேரத்திற்கான பயண தகவல்களை எடுத்துக்கொள்வதில்லை. அந்த மாதிரியான நேரங்களில் இந்த ஆப்ஸ்கள் சரியான தகவல்களை தராது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Tamil
English summary
First Time In Indian History Diesel Price Crosses Petrol In Odisha. Read in Tamil
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more