அந்த நடிகரின் படங்களை போல இந்த கார்களும் பிளாஃப் தான்..!

இந்தியா உலகின் மிகப்பெரிய கார் மார்கெட்டாக உள்ளது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். பலர் வர்த்தகம் செய்வதற்கான வழியை கண்டு வருகின்றனர்.

இந்தியா உலகின் மிகப்பெரிய கார் மார்கெட்டாக உள்ளது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். பலர் வர்த்தகம் செய்வதற்கான வழியை கண்டு வருகின்றனர்.

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

இப்படி இந்திய மக்கள் கார் வாங்குவதில் அலாதி பிரியத்துடன் இருந்தாலும் இந்தியாவில் பல கார்கள் வெளியான விஷயமே பலருக்கு தெரியாமல் போகும் அளவிற்கு விற்பனை படுமோசமாக இருந்துள்ளது

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

இந்த கார்கள் எல்லாம் இந்தியாவில் விற்பனையானதா? இதுவரை நான் ரோட்டில் இது போன்ற ஒரு காரை கூட பார்த்தது இல்லையே என்று நீங்கள் நினைக்க தோன்றும் வகையிலான கார்கள் கூட இருக்கிறது. இந்த செய்தியில் இந்தியாவில் விற்பனையாகி யாருக்குமே தெரியாமல் உள்ள மாருதி சுசூகி நிறுவன கார்களின் பட்டியலைதான் பார்க்க போகிறோம் வாருங்கள் பார்க்கலாம்.

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

சென் கிளாசிக்

மாருதி சென் காரை எல்லாருக்கும் தெரியும். இந்த கார் இந்தியாவில் அதிக அளவு பிரபலமானது முதன் முதலாக கார் வாங்க நினைத்த பலர் இந்த காரை தேர்வு செய்தனர். சென் விற்பனையை பார்த்த மாருதி நிறுவனம் அதன் ரெட்ரோ மாடலில் சிறிது மாற்றம் செய்து இதையும் மக்கள் அதிகம் வாங்குவார்கள் மக்கள் மத்தியில் இந்த கார் சென் காரை விட அதிக புகழ் பெறும் என நினைத்து வெளியிட்டனர். ஆனால் இந்த கார் இந்தியாவின் மிகப்பெரிய பிளாஃப் காராக மாறிவிட்டது. இந்த சென் காரை பலர் இதுவரை தங்கள் வாழ்நாளில் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

வெர்ஷா

மாருதி நிறுவனம் வெளியிட்ட கார் வெர்ஷா இந்த காருக்கு அமிதாப் பச்சன் விளம்பர மாடலாக நடித்தார். ஆனால் இந்த காரும் பெரிய அளவில் போனியாகவில்லை. இந்த கார் வரும் போது 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் வந்தது. அமிதாப் பச்சனை வைத்து விளம்பரம் செய்தும் இந்த கார் விற்பனையாகாததற்கு அதன் விலைதான் முக்கிய காரணம் என கூறப்பட்டது. இதை கண்டுபிடித்த மாருதி நிறுவனம் உடனடியாக இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தி விலையையும் கணிசமாக குறைத்து அதை இக்கோ என்ற பெயரில் வெளியிட்டனர். அது பெரிய அளவில் ஹிட்டாகியது. மக்களும் அதிகமாக வாங்க துவங்கினர்.

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

பெலேனோ ஆல்டுரா

செடன் காரையம் எம்பிவி காரையும் க்ராஸ் ஓவர் செய்த ஸ்டைலில் பெலேனோ ஆல்டுரா காரை மாருதி நிறுவனம் தயாரித்தது. இது போன்ற கார் இந்தியாவில் இல்லாவிட்டாலும் துணிச்சலுடன் இந்த காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

ஆனால் இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுபடவில்லை. இந்த கார்களை நீங்கள் ரோட்டில் பார்ப்பது சிரமம்தான்.

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

சென் எஸ்டிலோ

டாடா நிறுவனத்தின் நானோ காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் இந்த காரை அறிமுகப்படுத்தியது. போட்டிக்காக காரை அறிமுகப்படுத்த வேண்டியதுதான் அதற்காக அந்த மாடலையுமா அப்படியே காப்பியடிப்பது? நானோ காரை அப்படியே காப்பிடித்தனர். நானோ பிளாஃப் ஆக பின் இந்த காரும் பிளாஃப் ஆகியது. இந்த கார் பிளாஃப் ஆனதற்கு இதன் கலரும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது. பிங்க் கலரில் வெளியான இந்த கார் ஆண்களை கவரவில்லை.

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

ஏ ஸ்டார்

மாருதி நிறுவனம் ஏ ஸ்டார் என்ற காரை அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்பொழுது ஆல்டோ கார் அதே ரக பிரிவில் சிறப்பாக விற்பனையாகி வந்ததால் பெரும் அளவிலான மக்கள் இதை வாங்கவில்லை. இருந்தாலும் சிலர் வாங்கினார்கள். நீங்கள் இந்த காரை அவ்வப்போது ரோட்டில் பார்க்கலாம்.

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

கிராண்ட் விட்டாரா

கிராண்ட் விட்டார கார் மாருதி நிறுவனித்தின் எஸ்யூவி காராகும். இந்தியாவில் எஸ்யூவி கார் அவ்வளவாக பிரபலமாகும் முன்பே இந்த கார் விற்பனைக்கு வந்து விட்டது. ஆனால் இதன் விலை அதிகமாக இருந்ததால் அன்றைய நிலையில் யாரும் இதை வாங்குவதாக இல்லை. இதனால் இந்த கார் மாருதி நிறுவனத்தின் பெரிய பிளாஃப் மாடலாக மாறியது.

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

கிஸாசி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாருதி நிறுவனம் இந்த காரை வெளியிட்டது. இந்த கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சிறப்பான காராகும். வால்வோ கார்களை விட இந்த காரில் அதிக வசதிகள் இருந்தன. இருந்தாலும் இந்த கார் விற்பனை படுமோசம் தான். காரணம் இதன் மைலேஜ் தான்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

இந்த காரை எல்லாம் நீங்க ரோட்டுல பார்த்திருக்கவே முடியாது..!

இந்த காரின் மைலேஜை கேட்டால் பெட்ரோல் பங்க் ஓனர் கூட இதை வாங்க மாட்டார். மேலும் இதன் விலை ரூ.15 லட்சத்திற்கும் அதிகம். அதனால் இந்த கார் இந்தியாவில் மட்டும் அல்ல வெளியான அனைத்து நாடுகளிலும் பிளாஃப் தான்.

ட்ரெண்டிங் டிரைவ்ஸ்பார்க் யூ டியூப் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ டியூப் சேனலை பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
English summary
Flop cars in maruthi hard to see in roads. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X