பென்ஸ் எஞ்சினுடன் வரும் பவர்ஃபுல் ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி!!
அதிசக்திவாய்ந்த எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் விபரங்கள் கசிந்துள்ளது. அந்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் 3 கதவுகள் கொண்ட மாடலாக வருகிறது.
அதிசக்திவாய்ந்த எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் விபரங்கள் கசிந்துள்ளது. அந்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் சக்திவாய்ந்த புதிய மாடல் குர்கா எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் வர இருக்கிறது. தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மேம்பட்ட மாடலாக இது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் புரோஷர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கசிந்துள்ளது.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளோரர் என்ற 3 கதவுகள் கொண்ட மாடலில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஆஃப்ரோடு எஸ்யூவியாக வருகிறது. ஒற்றை பட்டையுடன் கூடிய சதுர வடிவ க்ரில் அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லைட், வலுவான ஹெவி ட்யூட்டி பம்பர், க்ளியர் லென்ஸ் கொண்ட இன்டிகேட்டர்கள் முன்புற டிசைன் அம்சங்கள்.

புதிய வடிவத்திலான சக்கரங்கள், எக்ஸ்ட்ரீம் பேட்ஜ் கொண்ட முன்புற கதவுகள் பொருத்தப்பட்டு இருக்கும். புரோஷரில் வெளியானத் தகவல்களின்படி, பின்புற டிசைன் அமைப்பு குறித்த தகவல் இல்லை. ஆனால், சிறிய அளவிலான மாற்றங்கள் மற்றும் எக்ஸ்ட்ரீம் பேட்ஜ் இடம்பெற்றிருக்கும்.

புதிய யஃபோர்டு குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவியானது 6 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட வேரியண்ட் ஸ்டான்ட்ர்டு மாடலாக இருக்கும். வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் 8 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மாடலையும் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும், சக்திவாய்ந்த 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற இருக்கிறது. இந்த எஸ்யூவி 138 பிஎச்பி பவரையும், 321 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

இந்த ஆஃப்ரோடு எஸ்யூவியில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும். டிஃபரன்ஷியல் லாக் மற்றும் ஹை, லோ ரேஷியோவுடன் கூடிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும். சாதாரண மாடலில் பயன்படுத்தப்படும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக இந்த புதிய டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறு.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி 2,510 கிலோ எடை கொண்டது. இந்த எஸ்யூவி ஹார்டு டாப் மற்றும் சாஃப் டாப் மாடல்களில் கிடைக்கும். இந்த எஸ்யூவியின் டீசல் டேங்க் 63.5 லிட்டர் கொள்திறன் கொண்டதாக வருகிறது.

தோற்றத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி கூடிய விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆஃப்ரோடு பிரியர்களின் எதிர்பார்ப்பை இந்த எஸ்யூவி அதிகப்படுத்தி இருக்கிறது.
Source: Trax Gurkha and Force Motors


Click it and Unblock the Notifications








