ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்ஸ் குர்கா முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. சிறந்த எஞ்சின், டிஃபரன்ஷியல் லாக்கிங் வசதியுடன் கிடைப்பதால், ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இதன் சிறந்த வடிவமைப்பு, கட்டுமானம் ஆகியவை எந்தவொரு கடினமான சாலை நிலைகளிலும் எதிர்கொள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. எனினும், இந்த எஸ்யூவியின் எஞ்சின் பவர் குறைவாக இருப்பதாக ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் கருத்து இருந்து வந்தது. இந்த குறையை போக்கும் விதத்தில், தற்போது சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷனுடன் புதிய மாடல் வந்துள்ளது.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 230 என்எம் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக உள்ளது.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த நிலையில், குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 321 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமையை பெற்றதாக வந்துள்ளது. வழக்கமான ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்படிஷன் மற்றும் எக்ஸ்ப்ளோரர் மாடல்களில் பயன்படுத்தப்படும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் அடிப்படையில்தான் இந்த புதிய 2.2 லிட்டர் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

மேலும்,மெர்சிடிஸ்ஸ பென்ஸ் OM611 எஞ்சின் குடும்ப வரிசையை சேர்ந்த எஞ்சின் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். இதே எஞ்சின்தான் ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலில் லோ ரேஷியோ கியர்பாக்ஸ் கொண்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும், முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களுக்கான டிஃபரன்ஷியல் லாக்கிங் வசதியும் உள்ளது.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

அதிக செயல்திறன் கொண்ட குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலில் சஸ்பென்ஷன் அமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் மல்டி லிங்க் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்டி ரோல் பார்களும் உள்ளன.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த எஸ்யூவியின் இன்டீரியரும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய சென்டர் கன்சோல் அமைப்பு இடம்பெற்றுள்ளது. வெளிப்புறத்தில் எக்ஸ்ட்ரீம் பேட்ஜ் தவிர்த்து, எந்த பெரிய மாற்றங்கள் இல்லை. இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களை கவரும் என்று தெரிகிறது.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆட்டோகார் இந்தியா கூறும் தகவல்களின்படி, தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்யூவி காண்பிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி ரூ.12.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று வெளியான தகவல் தெரிவிக்கிறது. மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Force Motors has launched the Gurkha Xtreme in India at a starting price of Rs 12.99 lakh (ex-showroom, pan-India). With a new 140bhp engine, the Force Gurkha Xtreme is now the top-of-the-line model in the Force Gurkha line-up.
Story first published: Thursday, December 13, 2018, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X