மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

பிரபல வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான போர்ஸ் மோட்டார்ஸ் இந்தியாவின் பலதரப்பட்ட மக்களை கவர்ந்து வாகனங்களை வெளியிட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வகையில் தற்பொழுது போர்ஸ் மோட்டார்ஸ் தனது 33 / 41 வகையிலான ட்ராவலர் மோனோபஸ்-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பஸ் மோனோகோக்(MONOCOQUE) தொழில்நுட்பத்தால் ஆனா சாஸ்ஸிஸ் ஐ ஒத்து வெளிவர உள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கும் முதல் பேருந்து இது என்று போர்ஸ் மோட்டார்ஸ் தற்பெருமை கூறுகிறது.

மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

பெங்களூரில் நடந்த பஸ் வேர்ல்ட் 2018 கண்காட்சியில் இந்த பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ரக பேருந்துகளில் மோனோகோக் கட்டமைப்பு சாஸி கொண்ட முதல் பேருந்து என்பது முக்கிய விஷயம். சாஸ்ஸிஸ் மட்டுமல்லாமல் இந்த பிரிவில் அதீத தொழில்நுட்ப மேம்பாட்டுடன் வரவிருக்கும் முதல் பேருந்து இதுவே.

மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

33 / 41 என்ற பெயரை கொண்டே நம் இதன் இருக்கை கொள்ளளவை கணித்து கொள்ளலாம் . ஆம் 33 நபர்கள் மற்றும் 41 நபர்கள் அமரும் வகையில் இரண்டு வெவ்வேறு பரிணாமத்தில் இதனை நாம் பெறலாம் என்பது மகிழ்ச்சிகரமான செய்தி. வருகின்ற விழாக்காலங்களில் இந்த வாகனத்தை வாடிக்கையாளர்கள் நாடு முழுவதுமாய் அமையப்பெற்ற அங்கீகரிக்கப்பட்ட போர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை நிலையங்களில் பெறலாம் .

மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

இந்த வாகனத்தின் முக்கியம்சம் பற்றி இந்தியாவின் தலை சிறந்த கனரக வாகன உற்பத்தியாளர்கள் கூறுகையில், இதன் அதீத செயல் திறன் , மேம்பட்ட எரிபொருள் சிக்கனம், தகர்க்கப்படா பலம், பாதுகாப்பின் உச்சம், சொகுசு பயணம் போன்றவை மெய்சிலிர்க்கவைக்கின்றன என்கிறார்கள். மேலும் இவை மருத்துவமனை, சுற்றுலா விருப்பங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றிக்கு இன்றியமையா தேர்வாக அமையும் என்று வலு சேர்த்துள்ளனர்.

மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

மேலும் இதே பாணியில் கல்லூரி மற்றும் பள்ளிக்கூட சேவைக்கான பேருந்து ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அது போர்ஸ் மோட்டார்ஸ் மோனோபஸ் ஸ்காலர் (FORCE MOTORS MONOBUS SCHOLAR) என்று அழைக்கப்படுகிறது. அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள் போலவே இதுவும் வெளிர் மஞ்சள் நிறத்துடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் கூறியுள்ள கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு உண்டான அனைத்து பாதுகாப்பு அம்சம் மற்றும் தொழில்நுட்பங்களில் சீரும் சிறப்புமாய் அமைந்துள்ளது அருமை. குழந்தைகள் சிரமமின்றி இறங்கி ஏற இதன் தளம் மிகவும் குறைவான உயரத்தில் அமையப்பெற்றிப்பது மற்றுமோர் அத்தியாவசியம்.

Most Read Article:ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்!

மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

இந்த மோனோபஸ் ஆனது சிக்ஸ்த் ஜெனெரேஷன் காத்தோடிக் எலெக்ட்ரோ டெபொசிஷன் (SIXTH GENERATION CATHODIC DEPOSITION DIP) எனப்படும் தொழில்நுட்பத்தினை வண்ணம் பூச பட்டவை. இந்த தொழில்நுட்பத்தில் வர்ணம் பூசப்பட்ட முதல் வாகனம் இதுவே. இதில் துரு அழுக்கு போன்ற வெளிப்புற பிரச்சனைகள் வராமல் வருடங்கள் கடந்து நீடித்து உழைக்கும் தன்மை வர்ணத்திற்கு இருக்குமென்பது ஆணித்தனமான உண்மை.

மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

மெர்சிடிஸ் வாகனங்களில் பயன்படுத்தப்படும் காமன் ரயில் () தொழில்நுட்பத்தில் ஆனா என்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 . 2 லிட்டர் என்ஜின் ஆனா இது 115BHP செயல் திறன் மற்றும் 350NM டார்க் திறன் வெளிப்படுத்தும். 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ்(5 SPEED MANUAL GEAR BOX) உடன் பொருத்தப்பட்டுள்ளது.

மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

இதன் செயல் திறனுக்கும் வாகன எடைக்கும் ஏணிபோட்டாலும் எட்டாது. ஆம் இது வெறும் 800 கிலோகிராம் எடையை கொண்டு இந்த அதீத செயல் திறனை வெளிக்கொணர்கிறது. இந்த எடை ஒன்றே இதன் போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளப்போவது நிச்சயம். இந்த குறைந்த எடை காரணமாக இதன் எரிபொருள் சிக்கனம் மேம்படும் என்பதை நம் சோதித்து பார்க்காமல் மனக்கணக்கிலே

நம்பி இறங்கலாம்.

மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட , தொழில்நுட்பங்களில் செறிவேற்றப்பட்ட தொழிற்சாலையில் உருவானது இந்த மோனோபஸ். சாஸ்ஸிஸில் தொடந்து முழு வாகனமாய் வெளிவரும் வரை அனைத்தும் ரோபோடிக்ஸ் முறையால் கட்டமைக்கப்படுகிறது. மேலும் போர்ஸ் மோட்டார்ஸ் இன்று நேற்று அல்லாமல் தனது வாகன வீரியத்தை கடந்த அறுபது ஆண்டுகளாக இந்திய வாகனத் தயாரிப்பு துறையில் காட்டி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் அங்கங்கே அமையப்பெற்ற விற்பனை மற்றும் சேவை மையங்கள் இதன் பக்கபலம்.

மோனோகாக் சாஸியுடன் புதிய ஃபோர்ஸ் பேருந்து அறிமுகம்!!

டிரைவ் ஸ்பர்க்கின் கருத்து :

சிற்றுந்து சந்தையில் இந்த போர்ஸ் மோனோபஸ் சகாப்தம் படைப்பது உறுதி. பேருந்தை ஒத்து பார்க்கையில் சிற்றுந்துங்கள் பலதரப்பட்ட உபயோகத்திற்கு பயன்படுவதால் விற்பனை விண்ணை பிளப்பது சாதாரண விஷயமே. அதீத செயல் திறன் , நீடித்த உழைப்பு, நல்ல லாபம், குறைந்த முதலீடு போன்றவற்றை கணக்கிட்டால் இந்த போர்ஸ் மோனோபஸ் சிற்றுந்து வரிசையில் முதலிடம் பிடிக்கும்.

{document1}

Tamil
English summary
Force Motors has launched the new 33/41 Traveller Monobus at Bus World 2018. The Force Traveller Monobus is the only bus in its class to have a monocoque chassis and comes with a lot of segment-first features and equipment.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more