வாங்கிய ஒரு மாதத்தில் தீப்பிடித்து எரிந்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி!!

Written By:

கர்நாடக மாநிலத்தில், புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி சாலையில் செல்லும்போது, திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வாங்கிய ஒரு மாதத்தில் தீப்பிடித்து எரிந்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள யாத்கிர் சட்டசபை தொகுதியில் பிஜேபி சார்பில் டாக்டர் ஷரண போபோல் ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர் புத்தம் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை வாங்கினார்.

வாங்கிய ஒரு மாதத்தில் தீப்பிடித்து எரிந்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி!!

தேர்தல் பணிகளின்போது அதிக தூரம் பயணிக்கும் நோக்கில் இதனை வாங்கி இருக்கிறார். மேலும், இந்த கார் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை பெற்றிப்பதோடு, 7 சீட்டர் மாடலான இந்த காரில் ஆதரவாளர்களையும் உடன் அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும் என்று கருதி இந்த காரை தேர்வு செய்துள்ளார்.

வாங்கிய ஒரு மாதத்தில் தீப்பிடித்து எரிந்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி!!

இந்த நிலையில், ரெட்டி மற்றும் ஆதரவாளர்கள் சிலர் அந்த காரில் நேற்றுமுன்தினம் பயணித்துள்ளனர். கார் சென்றுகொண்டிருந்தபோது முன்பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதையடுத்து, காரில் இருந்த டாக்டர் ஷரண போபால் ரெட்டி, ஓட்டுனர் மற்றும் உடன் பயணித்தவர்கள் அவசரமாக காரிலிருந்து வெளியேறினர்.

வாங்கிய ஒரு மாதத்தில் தீப்பிடித்து எரிந்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி!!

சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசதமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

வாங்கிய ஒரு மாதத்தில் தீப்பிடித்து எரிந்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

?rel=0&wmode=transparent" frameborder="0">

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வரும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி தீப்பிடித்து எரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கார் தீப்பிடித்ததற்கான காரணத்தை கண்டறிந்து, தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிய வந்தால் அதனை உடனடியாக சரிசெய்து தர ஃபோர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வாங்கிய ஒரு மாதத்தில் தீப்பிடித்து எரிந்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி!!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் டாப் வேரியண்ட் மாடல் ரூ.40 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த கார் தீப்பிடித்து எரிந்திருப்பது இந்த காரின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதாக இருக்கிறது.

English summary
A Ford Endeavour was seen engulfed in flames yesterday in Yadgir district of Karnataka. According to reports from PublicTV, the Endeavour SUV belonged to Dr Sharana Bopal Reddy, a BJP Ticket aspirant for the Yadgir constituency.
Story first published: Wednesday, April 11, 2018, 11:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark