2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா ? ஏன் ?

போர்டு நிறுவனம் 2020 வரை புதிய கார்களை அறிமுகப்படுத்தப்போவதில்லை அறிவித்துள்ளது. லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் வேலை ஆட்களை குறைப்பது, புதிய ஆட்களை சேர்ப்பதில் விலக்கு, வருடாந்திர ஊதிய உயர்வினை தள்ளி வ

அமெரிக்க கார் நிறுவனமான போர்டு 2020 வரை வாகனங்கள் ஏதும் அறிமுகப்படுத்தப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளது .

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் இன் தொடடகமானது இந்தியாவில் அக்டோர்பேர் 1995 இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் சென்னை மறைமலை நகர் என்பது நம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். மாருதி சுசூகி , ஹூண்டாய் , ஹோண்டா , டாடா , மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் போன்றே இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் போர்டு இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சியில் சுணக்கம் காணப்படுகிறது.

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

போர்டு இந்தியா நிறுவனம் இந்தியா முழுவதும் 376 விற்பனை சேவை நிலையங்களை கொண்டுள்ளது. 209 நகரங்களில் இதன் கிளைகள் காணப்படுகிறது . போர்டு இந்தியா தற்பொழுது தனது 40 சதவிகித என்ஜின் மற்றும் 25 சதவிகித வாகன உற்பத்தியினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

இந்நிறுவனமானது 35 நாடுகளுக்கு மேல் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் போர்டு பெருமை கொள்கிறது . அவற்றில் சவூதி அரேபியா, சவுத் ஆப்பிரிக்கா, நேபால், மெக்ஸிகோ, கென்யா, பஹ்ரைன், அங்கோலா, பெர்முடா, கானா, ஈராக், மடகாஸ்கர், லிபெரியா, லெபனான், மலாவி, மொரிஷியஸ் , நைஜீரியா, செனிகல், தான்சானியா , UAE , சாம்பியா, ஜிம்பாப்வே போன்றவை முக்கியப்பங்கு.

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

10,000 தொழிலாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் வேலை ஆட்களை குறைப்பது, புதிய ஆட்களை சேர்ப்பதில் விலக்கு, வருடாந்திர ஊதிய உயர்வினை தள்ளி வைப்பது, போன்ற சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் நஷ்ட கணக்கை குறைக்க மஹிந்திரா உடன் கார்கோற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது போர்டு .

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

செலவுகளை கட்டாயம் குறைத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளது போர்டு . TOI நாளிதழின் படி போர்டு தனது கார்ப்பரேட் அலுவலகத்தை குர்கானிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றவும் முடிவெடுத்துள்ளது. வாடகை செலவினை குறைக்கும் பொருட்டு இம்முடிவென்பது மூக்கின் மேல் விரல் வைக்கவேண்டிய விஷயம்.

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

மேலும் பலதரப்பட்ட தொழிலாளிகளை சிங்கார சென்னைக்கு மற்றம் செய்யும் முடிவு வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். போர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பேட்டி அளிக்கையில் பொருளாதார சரிவை சந்திக்க இது போன்ற நடவடிக்கை அவசியம் என்றும் போர்டு நிறுவனம் தனது நிர்வாக அமைப்பினை வாடிக்கையாளர்கள் பாராட்டும் வகையில் மாற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

ஒவ்வொரு பணியாளரின் திறனும் முறையே ஆராயப்படும் என்றும், மேலும் நிரப்பபடாமல் இருக்கும் பல காலி பணியிடங்களை சென்னையில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கீழ் ஒப்படைத்து சரிவர கண்காணிப்போம் என்றும் கூறினார் .

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

இந்தியாவில் கடந்த ஆண்டு போர்டு வாகனங்களின் விற்பனை அவ்வளவு திருப்திகரமான முடிவுகளை அளிக்கவில்லை . ஆயினும் ஏற்றுமதி பிரிவில் போர்டு நிறுவனம் சென்ற ஆண்டை காட்டிலும் முன்னேறி தற்போது 3.4 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்பது சற்றே நிம்மதி.

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

ஒரு சதவிகித முன்னேற்றத்துடன் போர்டு நிறுவனமானது 87,588 வாகனங்களை இந்திய சந்தையில் விற்றுள்ளது. முன்பு கூறியது போல் இது ஏற்றுமதி பிரிவை விட வெகு குறைவே. 15 சதவிகித முன்னேற்றதுடன் அவை 175196 வாகனங்களை கொண்டு சேர்த்துள்ளது என்பது வல்லமை.

2020 வரை போர்டு நிறுவனத்திலிருந்து வாகனங்கள் அறிமுகம் இல்லையா?

டிரைவ் ஸ்பார்க்கின் கருத்து :

உலக அளவில் தானியங்கி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய சந்தையில் இது போன்ற சரிவு குறைவே. போர்டு நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் ஏற்றுமதி பிரிவின் லாபத்தை கணக்கில் கொண்டு ஈடுகட்டி வருகிறது. வெறும் 33 சதவிகிதம் மட்டுமே ஒட்டுமொத்த வருவையாக உள்ளது என்பது வருத்தமளிக்கிறது. போர்டு நிறுவனத்தின் இந்நிலை யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்பதே நிதர்சனம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 1, 2018, 12:21 [IST]
English summary
Ford plans not to launch any new cars in the Indian market till 2020.
மேலும்... #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+