ஏலம் விடப்படும் அரசு வாகனங்களில் இனி 'G' இருக்காது.. முறைகேடுகளை தடுக்க புது நடைமுறை அமலாகிறது
ஏலம் விடப்படும் அரசாங்க வாகனங்களின் நம்பர் பிளேட்களில் இனி 'G' இடம்பெறாது. முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பதற்காக இனி புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
ஏலம் விடப்படும் அரசாங்க வாகனங்களின் நம்பர் பிளேட்களில் இனி 'G' இடம்பெறாது. முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பதற்காக இனி புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அரசாங்கத்திற்கு சொந்தமான கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்களில் 'G' (ஜி) என்ற எழுத்து இடம்பெற்றிருக்கும். அரசாங்க வாகனங்கள் என்பதை தனித்துவப்படுத்தி காட்டுவதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அரசாங்க வாகனங்கள் பத்து ஆண்டுகளை நிறைவு செய்தாலோ அல்லது 2 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு மேல் ஓடி விட்டாலோ ஏலம் விடப்படுவது வழக்கம். போக்குவரத்து துறையின் கீழாக செயல்பட்டு வரும் அரசு வாகனங்கள் பராமரிப்பு துறைதான், இந்த வாகனங்களை ஏலம் விடுகிறது.

இதன்படி தமிழகத்தில் மட்டும் ஒரு ஆண்டிற்கு சுமார் 1,500 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த வாகனங்களை யார் வாங்குகிறார்களோ அவரது பெயருக்கு வாகனத்தின் ஓனர்ஷிப் மாற்றம் செய்யப்பட்டு விடும்.

ஆனால் வாகனத்தின் பதிவு எண் அப்படியேதான் இருக்கும். முக்கியமாக 'G' மாற்றம் செய்யப்படாது. எனவே எவ்வளவு அதிக விலை கொடுத்தாவது இந்த வாகனங்களை வாங்கி விட வேண்டும் என பலர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஏனெனில் வாகன தணிக்கையின்போது, போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், வணிக வரித்துறையை சேர்ந்த அதிகாரிகள் என யாருமே 'G' சீரிஸ் வாகனங்களை பெரும்பாலும் நிறுத்துவதே இல்லை.

இதனால்தான் இந்த வாகனங்களுக்கு அதிக டிமாண்ட் நிலவி வருகிறது. இந்த வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், அடிப்படை விலையில் இருந்து, 30 முதல் 60 சதவீதம் வரை அதிக தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்கும் சிலர் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதவிர டோல்கேட்களில் அரசாங்க வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளையும், இந்த வாகனங்களை ஏலம் எடுக்கும் சிலர் பயன்படுத்தி கொள்கின்றனர்.

அத்துடன் தேர்தல் நேரங்களில் பண பட்டுவாடா செய்வதற்கும் இந்த வாகனங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2016 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, இதுபோன்று ஏலம் எடுக்கப்பட்ட அரசாங்க வாகனங்களில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

எனவே இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தமிழக அரசு ஏற்று கொண்டுள்ளது. எனவே இனி ஏலம் விடப்படும் அரசாங்க வாகனங்களில் 'G'இடம்பெறாது. அதற்கு பதிலாக முற்றிலும் புதிதான ஒரு பதிவு எண் அந்த வாகனத்திற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Image Courtesy:
"Ambassadors" by Owen Young Is licenced under CC-BY-2.0
"Hindustan Ambassador cars parked outside Secretariat Building, New Delhi" by Christian Haugen Is licenced under CC-BY-2.0
More from DriveSpark
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








