டிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை
இனி இந்தியாவில் டிஜிலாக்கர் மற்றும் எம்பரிவாகன் ஆகிய ஆப்களில் பதிவு செய்யப்பட்ட டிரைவிங் லைசன்ஸ், ஆர்சிபுக், இன்சூரன்ஸ் காப்பிகளை ஒரிஜினல் காப்பிகளுக்கு பதிலாக பயன்படுத்தலாம் எனவும், இனி பேப்பர்களில்
இனி இந்தியாவில் டிஜிலாக்கர் மற்றும் எம்பரிவாகன் ஆகிய ஆப்களில் பதிவு செய்யப்பட்ட டிரைவிங் லைசன்ஸ், ஆர்சிபுக், இன்சூரன்ஸ் காப்பிகளை ஒரிஜினல் காப்பிகளுக்கு பதிலாக பயன்படுத்தலாம் எனவும், இனி பேப்பர்களில் உள்ள ஆவணத்தை எடுத்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா டிஜிட்டல் மயமாவாதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலத்துறை அமைச்சகம் டிஜிலாக்கர் அல்லது எம்பரிவாகன் மொபைல் ஆப் ஆகிய தளங்களில் சேமிக்கப்பட்டட டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் ஆகியவற்றை சட்டபூர்வ ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

கடந்த 2000வது ஆண்டில் இயற்றப்பெற்ற தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் படி டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்கள் ஒரிஜினல் ஆவணத்திற்கு இணையாக கருதப்பட வேண்டும் என்ற சட்டம் வருகிறது. இது இந்தியா முழுவதும் செல்லுபடியாகும்.

பீகார், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முதலில் டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்களை ஒரிஜினல் ஆவணங்களாக கருதினர். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இதை நடைமுறைபடுத்தும் படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதை நாம் பயன்படுத்த டிஜிலாக்கர் அல்லது எம் பரிவாகன் என்ற ஆப்பை டவுண்லோடு செய்து அதை நம் ஆதார் எண்ணை கொண்டு உறுதி செய்ய வேண்டும். அதன் பின், டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பதிவு ஆவணத்தின் எண்ணை அதில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின் உங்களை பயணத்தின் போது போலீசார் நிறுத்தி சோதனையிட்டால் நீங்கள் அவர்களிடம் அந்த ஆப் வழங்கும் க்யூ ஆர் கோர்டை காண்பித்தால் போது அதை கொண்டு அவர்கள் உங்கள் விபரங்களை பெற்றுக்கொள்வார்கள்.

இது வெறும் சான்றிதழாக மட்டும் அல்லாமல் போலீசாரின் வழக்குகளை சுலபமாக்கவும் பயன்படுகிறது. போலீசார் ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அந்த வாகனம் குறித்த தகவலை இ செல்லான் சிஸ்டத்தில் பதிவேற்றினால் அதன் மூலம் அந்த வாகனங்களின் ஆவணங்களை பார்க்க முடியும்.

மேலும் அதை முடக்கவும் எதிர்காலத்தில் அந்த வாகனம், இந்தியாவில் எந்த மூலையில் வாகன சோதனையில் ஈடுபட்டாலும் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்யும் திட்டமும் அரசிடம் உள்ளது.

இந்த அறிவிப்பு, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு டிஜிட்டலாக ஆவணங்களை சமர்பிக்கும் முறையை பலர் ஏற்றுக்கொள்ளாதது குறித்தும், அவ்வாறான சட்டங்கள் நடைமுறையில் உள்ளதா என்பது குறித்தும் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்ததால் வெளியிட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே போல் புதிய வாகனங்களுக்காக வழங்கப்பட்டுள்ள இன்சூரன்ஸ், மற்றும் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் குறித்த தகவல்கள் நேரடியாக இன்சூரன்ஸ் இன்பர்மேஷன் போர்டு வழியாக வாகன் டேட்டாபேஷிற்கு சென்று விடும்.

இந்த தகவல்கள் தினம் தோறும் எம்பரிவாகன் மற்றும் இ செல்லான் ஆகிய தளத்திற்கு சென்றுவிடும். இதன் மூலம் இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தை அதிகாரிகளால் கண்டறிய முடியும்.
ஒரு வாகனம் எம் பரிவாகன், மற்றும் இ செல்லான் ஆகிய பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை அவர்கள் ஆவணமாக பயன்படுத்த முடியும். பேப்பர் காப்பிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








