அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

இந்தியாவில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களை வாங்க வைக்க அரசு பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் முடிவு செய்த அரசு 10,000 எலெக்ட்ரிக் கார்களை வாங்க திட்டமிட்டது. தொடர்ந்து சார்ஜ் ஏற்றும

By Balasubramanian

இந்தியாவில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களை வாங்க வைக்க அரசு பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் முடிவு செய்த அரசு 10,000 எலெக்ட்ரிக் கார்களை வாங்க திட்டமிட்டது. தொடர்ந்து சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவி விட்டு எலெக்ட்ரிக் கார்களை வாங்கலாம் என்று அரசு கார் வாங்கும் முடிவை தள்ளி வைத்துள்ளது.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

இந்திய அரசு மாசுகட்டுபாட்டை தீவிரமாக அமல் படுத்த பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வைக்க திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக அரசுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற முடிவு செய்தது.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

இதையடுத்து இந்தாண்டு சுமார் 10,000 எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்திருந்தது. இதற்காக டாடா மோட்டர்ஸ் மற்றும் மஹேந்திரா ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுடிருந்தது.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

முதற்கட்டமாக கடந்த 500 கார்களை கடந்தாண்டு நவம்பர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மற்ற கார்கள் இந்த மாதம் டெலிவரி செய்வதாக முதலில் பேசப்பட்டிருந்தது.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

ஏற்கனவே வாங்கிய 500 கார்களில் 150 கார்கள் டில்லியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும், 100 ஆந்திராவில் உள்ள சில அரசு அதிகாரிகளுக்கும் அலுவல் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. மற்ற கார்கள் எதுவும் இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையிலேயே உள்ளது.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

இதற்கு முக்கிய காரணம் இந்த கார்களுக்கான சார்ஜ் ஏற்றும் மையங்களின் பற்றாகுறை தான். தற்போது இந்த கார்களை சார்ஜ் செய்ய இந்தியா முழுவதும் 200 சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 100 மையங்கள் டில்லியிலேயே உள்ளது.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

இந்நிலையில் இத்திட்டத்தை அடுத்ததாண்டிற்கு மாற்றி வைத்துள்ளது. அரசு அதாவது தற்போது கார்கள் நிறுவனங்கள் வழங்க வேண்டிய கார்களை அடுத்த ஆண்டு வழங்க அந்நிறுவனங்களிடம் கோரியுள்ளது. அதற்குள் இந்தியாவிற்குள் அதிக சார்ஜ் சென்டர்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

தற்போது சார்ஜ் ஏற்றும் மையங்களை திறப்பதில் பெரிய அளவில் தனியார்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு குறைவு என்பதால் பெரிய அளவில் லாபம் தராது என பலர் இந்த சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்க தயங்கி வருகின்றனர்.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

எனினும் தற்போது அரசு தீவிர முயற்சியெடுத்து சார்ஜ் ஏற்றும் மையங்களை திறக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. மேலும் இந்தாண்டு பல எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவிருக்கிறது. அதன் பின் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

தொடர்ந்து சார்ஜ் ஏற்றும் மையங்களும் அதிகரிக்கும் என அரசு திட்டிமட்டுள்ளது. இவ்வாறாக உறுதியாக நடக்கும் அல்லது நடத்தியே ஆக வேண்டும் என முடிவு செய்த அரசு கடந்த மார்ச் மாதம் மேலும் 10,000 எலெக்ட்ரிக் கார்களுக்கான டெண்டரை அறிவிப்பை வெளியிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் இந்திய ரோடுகளில் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

இந்தியாவில் பெட்ரோல்/டீசல் கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற முக்கியமான காரணம் மாசு கட்டுப்பாடு மற்றும் பெட்ரோல் பயன்பாடு குறைவு தான். இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்து அதை விநியோகம் செய்வதில் பெரும் தலை வலியை சந்தித்துள்ளது.

அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு

எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்தால் பெட்ரோலுக்கான தேவை வெகுவாக குறையும். இதன் மூலம் அரசுக்கும் சற்று பணிச்சுமை குறைகிறது. அதே நேரத்தில் பெட்ரோல்/டீசல் வாகனத்தால் ஏற்படும் மாசு அளவை விட எலெக்ட்ரிக் வாகனத்தால் ஏற்படும் மாசு அளவு மிக மிக மிக குறைவு தான். இதன் காரணமாக தான் அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்க முடிவு செய்துள்ளது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்.

More from DriveSpark

Article Published On: Friday, June 1, 2018, 11:29 [IST]
English summary
Indian Government Delays 10,000 Electric Vehicle Roll-Out — Lack Of Electric Charging Stations.Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+