பெட்ரோலுக்கான வரியை அதிகரிக்க அரசு மத்திய அரசு முடிவு?; விலை விண்ணை தொடும் அபாயம்..!
இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் வரிகளை உயர்த்தி அதன் மூலம் பொதுமக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வைக்க அரசு வீபரீத முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் வரிகளை உயர்த்தி அதன் மூலம் பொதுமக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வைக்க அரசு வீபரீத முடிவை எடுத்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தினால் மாசுவை கட்டுப்படுத்தலாம் என்ற அரசின் எண்ணத்திற்கு மக்களை உட்படுத்த அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

மத்திய அரசு ஃபேம் என்ற அமைப்பை ஏற்படுத்தி எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்கப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.

இந்த குழு எவ்வளவு முயற்சித்தும் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களை கொண்டு செல்ல முடியவில்லை. பலருக்க எலெக்ட்ரிக் கார் ஒன்று இருக்கிறது. பெட்ரோல், டீசல் இல்லாமலேயே அது இயங்கும் என்ற தகவல்கள் கூட போய் சேர வில்லை.

குறிப்பாக பெங்களூரு, போன்ற பெரு நகரங்களில் தான் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு சற்று அதிகரித்துள்ளது. என்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்ப்பில்லை. எலெக்ட்ரிக் கார்களுக்கு மானியம் வழங்கப்பட்டும் எந்த பெரிய பலனும் இல்லை.

இதற்கு இந்த ஃபேம் குழுவை கண்காணிக்கும் மத்திய கனரக தொழிற்துறை அமைச்சரவை வரும் 2022-2023ம் ஆண்டு வரை இந்த ஃபேம் குழுவை இயக்க ரூ 9,381 கோடி தேவை என அறிவித்திருந்தது.

எலெக்ட்ரிக் கார்களுக்கு போதுமான வரவேற்ப்பு இல்லை என்பது ஃபேம் குழு தனது முதற்கட்ட பணிகளை நிறைவு செய்தவுடன் எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்பதை கொண்டு முடிவு செய்தது.

இருந்தாலும் கடந்த மாதம் அதன் இரண்டாம் கட்ட பணியை துவங்கியது. இரண்டாம் கட்ட பணியானது. 18-19 ஆண்டின் நிதியாண்டில் இருந்து 22-23 நிதியாண்டு வரை 5 ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 5 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்கு விக்க தான் இந்த ரூ 9,381 கோடி தேவை என அக்குழு கோரியுள்ளது. இந்த முறை அதிகமாக பொது போக்குவரத்து வாகனங்கள், கமர்ஷியல், வாகனங்கள், அதிவேக டூவீலர்கள், ஆகிவற்றின் விற்பனையில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஃபேம் குழு இரண்டாம் கட்ட பணிகளை தொடர்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை வரும் செப்டம்பர் மாதம் இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வரை இந்த குழு முதற்கட்ட பணியில் போது வழங்கிய சலுகைகள்,மானியங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது முடிந்துள்ள முதற்கட்ட பணிகளை கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதத்துடனே முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டு முறை 6 மாதங்கள் நீட்டக்ப்பட்டு கடந்த மார்ச் மாதத்துடன் தான் முடிந்தது.

2015ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஃபேம் குழுவின் முதற்கட்ட பணியில் எலெக்ட்ரிக் மற்றும் ஹெபிரிட் வாகனங்களான பைக்குகளுக்கு ரூ 29,000 வரையிலும், கார்களுக்கு ரூ 1.38 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்பட்டது. இந்த திட்டம் தான் வரும் செப்டம்பர் அல்லது இரண்டாம் கட்ட பணிகளுக்கான அனுமதி கிடைக்கும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஃபேம் குழுவின் முதற்கட்ட பணி வெற்றி கரமாக போகாததால் இரண்டாம் கட்ட பணியை கட்டாயம் வெற்றி கரமான கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடி அரசிற்கு ஏற்பட்டடுள்ளது. இதற்கு அரசு ஒரு வீபரீதமான முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களையே அதிகம் வாங்குகின்றனர். இதை கட்டுப்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மேலும் பல மடங்கு அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு செய்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும். இந்த விலையை சாதாரண பொதுமக்களுக்கு கட்டுபடியாகாது. மக்கள் தாங்களாக மாற்று எரிபொருளை நோக்கி வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு மார்கெட்டில் வரபிரசாதமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கும்.

இப்படியாக இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாட்டை அதிகமாக்கினால் இந்தியாவில் உள்ள காற்றில் உள்ள மாசின் அளவு வெகுவாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இன்று இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மற்ற வாகனங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. அரசு தரும் மானியங்களை பயன்படுத்தினாலும் விலை சாதாரண காருக்கு ஈடாகவில்லை. இதனால் தற்போது இந்த முடிவை அரசு எடுத்தால் மக்கள் தலையில் சுமத்தும் பெரும் பாராமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








