டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

இந்தியாவில் உள்ள டோல்கேட்களை இலவசமாக கடந்து செல்ல சிலருக்கு மட்டும் அரசு அனுமதியளித்துள்ளது. இதை பலர் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

By Balasubramanian

இந்தியாவில் உள்ள டோல்கேட்களை இலவசமாக கடந்து செல்ல சிலருக்கு மட்டும் அரசு அனுமதியளித்துள்ளது. இதை பலர் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து இலவசமாக பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டவர்களின் கார்களுக்கு மட்டும் சிறப்பு "ஜீரோ டிரான்ஸ்சிஷன் " ஆர்எப்ஐடி கார்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட் என்பது பெரும் தலைவலியாக இருந்து வருவதாகவும், டோல்கேட்டில் கொள்ளை லாபம் அடிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரோடு போட்டதற்கான பணம் திருப்ப வந்த பின்பும் தொடர்ந்து டோல்கேட் நடத்தப்படுகிறது என பொதுமக்கள சார்பில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

அரசு சார்பில் அதற்கு பதில் சொல்லும் போது, நாட்டில் போக்குவரத்து கட்டமைப்புகள் மிகவும் உயர்தரமாக இருக்க வேண்டும், இவ்வாறான கட்டமைப்புகளை முறையாகவும் சரியாகவும் பராமரிக்க வேண்டியதும் அவசியம். இதை கருத்தில் கொண்டு தான் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

இந்த டோல்கேட்டில் பலர் பணம் வழங்காமல் பிரச்னை செய்கின்றனர். அவ்வப்போது இந்த பிரச்னை தொடர்பான சிசிடிவி காட்சிகளை நாம் பார்த்து கொண்டு தான் வருகிறோம். டோல் கேட்டிற்கு பணம் வழங்க பலர் அவ்வப்போது மறுத்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

இதற்கிடையில் சிலர் தாங்கள் டோல்கேட் கட்டணத்தில் இருந்து தப்பிக்க தங்களது செல்வாக்கை பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக போலீசார், வக்கீல், பத்திரிக்கையாளர்கள் பலர் டோல்கேட் கட்டணத்தில் இருந்து தப்பிக்க அந்த பதவியை பயன்படுத்தி வருகின்றனர்.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

சட்டப்படி அரசு அதிகாரிகள், உயர் பதவியில் உள்ளவர்கள் சிலர் பயன்படுத்தும் கார்களுக்கு மட்டுமே டோல்கேட் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மற்ற அனைவருக்கும் கட்டணம் செலுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் பலர் வாக்குவாதம் செய்வதால் பெரும் பிரச்னை ஏற்படுத்துகிறது.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

இதை சமாளிக்க அரசு டோல்கேட் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களின் வாகனங்களுக்கு "ஜீரோ டிரான்ஸாக்ஸன் டேக்" என்ற ஆர்எப் ஐடி கார்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படிஅவர்கள் தாங்கள் பயன்படுத்தும் காரில் இந்த ஐடியை மாட்டிவிட்டு

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

பின்னர் ஃபாஸ்ட் டேக் லேன் வழியாக சென்றால் தானாகே கேட் ஓபன் ஆகிவிடும் பணம் செலுத்தி செல்ல நினைப்பவர்கள் கட்டாயம் பணம் செலுத்த வேண்டும்.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

அரசு டோல்கேட் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இந்த ஆர்எப் ஐடியை பயன்படுத்த முடியும். விலக்கு பெற்றவருடன் செல்லும் மற்ற கார்களுக்கு விலக்கு கிடையாது.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் இது குறித்து பேசினார். அப்பொழுது எம்பிகளுக்கு இரண்டு ஆர்எப் ஐடி டேக் வழங்கப்படும் அதில் ஒன்றை அவர்கள் டில்லியில் பயன்படுத்திகொள்ளலாம் மற்றொன்றை தங்கள் தொகுதியில்பயன்படுத்தி கொள்ளலாம்.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

எம்பிகளுக்கு மட்டும் இரண்டு கார்களுக்கு பயன்படுத்த முடியும் அவர்களின் டில்லி வாகனம் மற்றம் தொகுதியில் உள்ள வாகனத்தை தவிர மற்ற வாகனங்களை பயன்படுத்த முடியாது.

தற்போது டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் செல்ல ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஐகோர்ட் தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், ராணுவ தலைமை பொறுப்பு வகிப்பவர்கள், மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் மட்டுமே டோல்கேட்டில் பணம் கட்டாமல் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள்.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

இது மட்டும் அல்லாமல் ராணுவ வாகனங்கள், பாரா மில்ட்ரி வாகனங்கள், போலீஸ் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் மாஜித்திரேட் ஆகியோரும் பணம் கட்டாமல் டோல்கேட்களை பயன்படுத்தலாம்.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

இந்தியாவில் உள்ள சிறிய டோல்கேட் முதல் பெரிய டோல்கேட் வரை எல்லா டோல்கேட்களும் இணையம் வழி கட்டணப்பதிவுகளை செய்கிறது. இவை எல்லாம் சென்ட்ரல் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் ஒரே இடத்தில் நாட்டில் உள்ள எந்தெந்த டோல்கேட்டில் எவ்வளவு வாகனங்கள் செல்கிறது. எவ்வளவு கலெக்ஷன்கள் ஆகிறது என்பதை லைவ்வாக பார்க்க முடியும்.

டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்

இதன் மூலம் அரசும் தாங்கள் வழங்கும் ஆர்.எப் ஐடி மூலம் எந்தெந்த வாகனங்கள் எந்தெதந்த டோல்கேட்களில் எவ்வளவு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறுது என்பதை அறிய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Govt took action for misuse of ‘exempt category’ vehicles at toll plazas. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X