பழைய கார்களை ரோட்டில் நிறுத்தினால், அந்த வாகனம் அரசால் ஸ்கிராப் செய்யப்படும்

டில்லி அரசு டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கான புதிய விதி ஒன்றை அமல்படுத்தவுள்ளது. அதன் படி வாகனங்களை குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்த வேண்டும் எனவும் அதன் பின் அந்த வாகனத்தை முறையாக ஸ்கிராப்

By Balasubramanian

டில்லி அரசு டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கான புதிய விதி ஒன்றை அமல்படுத்தவுள்ளது. அதன் படி வாகனங்களை குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்த வேண்டும் எனவும் அதன் பின் அந்த வாகனத்தை முறையாக ஸ்கிராப் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய அரசு உத்தரவு

டில்லியில் பெருகி வரும் வாகனங்களால் காற்று மாசு அதிக அளவில் இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு எமிஷன் கண்ட்ரோல் சிறப்பாக இருந்தாலும் பழைய வாகனங்கள் பெரிய அளவுவிற்கு காற்ற மாசுவை ஏற்படுத்தி வருகின்றன.

பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய அரசு உத்தரவு

இதையடுத்து டில்லியில் பழைய வாகனஙகள் பயன்படுத்துவதை தடுக்க மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய அரசு உத்தரவு

அதன் படி சுமார் 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களும் அரசு அங்கீகரிக்கப்பட்ட ஸ்கிராப்பிங் மையத்தில் ஸ்கிராப் செய்யப்பட வேண்டும்.

பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய அரசு உத்தரவு

அதன் பின் ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒரு சான்றிதழும் அதற்கான ஒரு தொகையையும் ஸ்கிராப் செய்யும் நிறுவனங்கள் வழங்கும். அதன் பின் ஸ்கிராப்பின் சென்டர்கள் ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனத்தை சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதை மறு சுழுற்சி செய்யும்.

பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய அரசு உத்தரவு

அதே போல தற்போது அரசு ரோட்டராங்களில் 10 ஆண்டுகளுக்கு பழைமையான டீசல் இன்ஜின் வாகனங்கள், நின்றால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நேரடியாக அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்கிராப்பிங் மையங்களுக்கு எடுத்து செல்லப்படும்.

பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய அரசு உத்தரவு

அந்த வாகனத்தின் உரிமையாளர் வந்து தங்களது வாகனத்தை கோரினாலும் வழங்கப்பட மாட்டாது. மாறாக அந்த வாகனத்தை ஸ்கிராப் செய்யப்படும். ஸ்கிராப் செய்யப்பட்ட பின் அதற்காக வழங்கப்படும் சான்றிதழும் பணமும் மட்டுமே அந்த காரின் உரிமையாளருக்கு வழங்கப்படும்.

பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய அரசு உத்தரவு

இதுவே 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் ரோட்ரோரங்களில் நிறுத்தப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டால் அந்த வானகங்களை உரிமையார்கள் கோரும் பட்சத்தில் அந்த வாகனத்தை இனி பொது இடங்களில் நிறுத்த மாட்டோம் எனவும்,

பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய அரசு உத்தரவு

வாகன உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்துவோம் என அவர்கள் உறுதி அளிக்கும் பட்சத்தில் அவர்களிடம் அந்த வாகனம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த வாகனமும் ஸ்கிராப் செய்யப்படும். வாகனத்தை ஓனரிடம் ஒப்படைக்கும் முன்பு அவரிடம் அந்த வாகனத்தை நிறுத்த போதிய இடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்பே வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில்அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Govt wants to scrap more than 10 year old diesel vehicle 15 year petrol vehicle. Read in Tamil
Story first published: Wednesday, August 29, 2018, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X