ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

சூரத் நகரை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.

சூரத் நகரை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்களை பரிசாக வழங்கியுள்ளார். நாடு முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தொலாகியா. தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவது சாவ்ஜி தொலாகியாவின் வழக்கம். இதனால் இவரது பெயர் அடிக்கடி செய்திகளில் அடிபடும்.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

கடந்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, தனது நிறுவனத்தில் பணியாற்றும் 1,200 ஊழியர்களுக்கு டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் கார்களை, சாவ்ஜி தொலாகியா வழங்கினார். இந்த சூழலில், சாவ்ஜி தொலாகியாவின் பெயர் தற்போது மீண்டும் செய்திகளில் அடிபட தொடங்கியுள்ளது.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

இம்முறை தனது நிறுவனத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த 3 ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி (Mercedes-Benz GLS 350d) கார்களை வழங்கி அமர்க்களப்படுத்தியுள்ளார். எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார்கள் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

தனது நிறுவனத்துடனான ஊழியர்களின் நீண்ட கால உறவை போற்றும் வகையில், விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி கார்களை, சாவ்ஜி தொலாகியா வழங்கியுள்ளார். இந்த கார்களின் சூரத் ஆன்ரோடு விலை 1 கோடி ரூபாய்.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

ஆக மொத்தம் 3 ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி கார்களை வழங்குவதற்காக 3 கோடி ரூபாயை, சாவ்ஜி தொலாகியா செலவழித்துள்ளார். இதற்கென சூரத் நகரில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், 3 ஊழியர்களிடமும் கார்கள் ஒப்படைக்கப்பட்டன.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் என்பது லக்ஸரி கார்களில் ஒன்று. இதன் 350டி வேரியண்ட்களைதான் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார் சாவ்ஜி தொலாகியா. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்பட பிரபல நட்சத்திரங்கள் பலரும் இந்த காரை உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

இந்த ஜிஎல்எஸ் காரானது, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மற்றொரு காரான எஸ்-க்ளாஸ் கார்களுக்கு இணையான லக்ஸரி வசதிகளை கொண்டது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 3.0 லிட்டர் வி6 டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

ஆட்டோமெட்டிக் 7 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை இந்த கார் பெற்றுள்ளது. Intelligent Light System (ILS) உடனான எல்இடி ஹெட்லேம்ப்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த காருக்கு கூடுதலான லக்ஸரி லுக்கை வழங்குகிறது.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

ஒரே நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிவது என்பது எளிதானது கிடையாது. எனவே அதனை பெருமிதப்படுத்தும் விதமாகதான் விலை உயர்ந்த கார்களை 3 ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார் வைர வியாபாரி சாவ்ஜி தொலாகியா.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

இதனை பார்க்கும் இதர ஊழியர்களுக்கும், நாமும் இதே நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். 1,200 ஊழியர்களுக்கு டட்சன் ரெடி கோ கார்களையும், 3 ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி கார்களையும் வழங்கியதுடன் சாவ்ஜி தொலாகியா நின்று விடவில்லை.

ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..

இதற்கு முன்னதாக அவர் 500 ஃபியட் புன்டோ கார்களையும், 1,260 மாருதி மற்றும் டட்சன் கார்களையும் தனது ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இனிடையே 3 ஊழியர்களிடமும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியின் வீடியோவை Khabarchhe வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

எங்க முதலாளி.. தங்க முதலாளி பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, சாவ்ஜி தொலாகியாவுக்கு நன்றாகவே பொருந்தும். நிச்சயமாக அவர் தங்கமான முதலாளிதான்.

Most Read Articles

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் குறித்த செய்தியை மேலே படித்தீர்கள். இங்கே 2019 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் புகைப்பட ஆல்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Gujarat Diamond Trader Gifts 3 Mercedes-Benz Cars Worth Rs.3 Crores To Employees. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X