தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு புதிய கார், வீடு பரிசு! இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி

புகழ்பெற்ற வைர வியாபாரி ஒருவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 1,600 ஊழியர்களுக்கு கார் மற்றும் வீடுகளை பரிசாக வழங்குகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

புகழ்பெற்ற வைர வியாபாரி ஒருவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 1,600 ஊழியர்களுக்கு கார் மற்றும் வீடுகளை பரிசாக வழங்குகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சாவ்ஜி தொலாகியா. ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் (Hare Krishna Exports) என்ற புகழ் பெற்ற வைர ஏற்றுமதி நிறுவனத்தை சாவ்ஜி தொலாகியா நடத்தி வருகிறார்.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

இந்த சூழலில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சாவ்ஜி தொலாகியா பரிசு அறிவித்துள்ளார். பரிசு என்றால் ஒரு மாத சம்பளம் மட்டும் போனஸாக கிடைக்கும் என சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

சாவ்ஜி தொலாகியாவின் வைர நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டாம். ஆம், ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்காக பாடுபட்ட 1,600 ஊழியர்கள் தீபாவளி பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

அவர்களுக்கு 2 ஆப்ஷன்கள் தெரிவிக்கப்பட்டன. ஒன்று கார். மற்றொன்று பிக்ஸட் டெபாசிட் மற்றும் வீடு. இதில் தங்களுக்கு எது விருப்பமோ அதனை ஊழியர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என சாவ்ஜி தொலாகியா அதிரடியாக அறிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

இதன்படி 600 ஊழியர்கள் காரை தேர்வு செய்தனர். இதர 1,000 ஊழியர்கள் பிக்ஸட் டெபாசிட் மற்றும் வீட்டை தேர்வு செய்துள்ளனர். இந்த 1,600 ஊழியர்களும் சாவ்ஜி தொலாகியாவின் நிறுவனத்தில் வைரத்தை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

இந்த சூழலில் 600 ஊழியர்களுக்கு கார் சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 25) நடைபெறுகிறது. இதில், வீடியோ கான்பரன்ஸிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

சாவ்ஜி தொலாகியாவின் நிறுவனத்தில் பணியாற்றும் காஜல் மற்றும் ஹிரால்பென் ஆகிய 2 பெண்களுக்கு மட்டும் பிரதமர் நரேந்திர மோடி கார் சாவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெறவுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

அதே நேரத்தில் சூரத் நகரில் உள்ள ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திலும், கார் சாவிகளை ஊழியர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், எஞ்சிய ஊழியர்களுக்கு கார் சாவிகள் வழங்கப்படவுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து கார் சாவிகளை பெறவுள்ள பெண்களில் ஒருவரான காஜல் என்பவர் மாற்றுத்திறனாளி என்பது கவனிக்கத்தக்கது. காஜல் மற்றும் ஹிரால்பென் ஆகிய இருவரும் சூரத்தில் இருந்து நேற்றே புது டெல்லி கிளம்பி சென்று விட்டனர்.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

சரி 600 ஊழியர்களுக்கும் எந்த கார்கள் வழங்கப்படவுள்ளனா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். மாருதி சுஸுகி ஆல்டோ மற்றும் மாருதி சுஸுகி செலிரியோ ஆகிய கார்கள்தான் 600 ஊழியர்களுக்கும் தீபாவளி பரிசாக வழங்கப்படவுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

இதர 1,000 ஊழியர்களுக்கு பிக்ஸட் டெபாசிட் மற்றும் வீடு பரிசாக காத்திருக்கிறது. இதில், முதற்கட்டமாக 300 ஊழியர்களுக்கு வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டு விட்டன. இதர ஊழியர்களுக்கு வீடுகள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது போன்ற விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏனெனில் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு கடந்த 4 வருடங்களாக ஊழியர்களுக்கு இது போன்ற பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

கடந்த 2016ம் ஆண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது ஊழியர்களுக்கு ரூ.51 கோடி மதிப்பிலான பரிசுகளை சாவ்ஜி தொலாகியா வழங்கினார். அப்போது 1,260 கார்கள் மற்றும் 400 வீடுகள் ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

இதன்பின் கடந்த 2017ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, 1,200 ஊழியர்களுக்கு டட்சன் ரெடி-கோ கார்களை பரிசாக வழங்கினார் சாவ்ஜி தொலாகியா.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

இதுதவிர கடந்த செப்டம்பர் மாதம், 3 ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த கார்களின் சூரத் ஆன் ரோடு விலை தலா 1 கோடி ரூபாய். ஆக மொத்தம் ரூ.3 கோடி செலவழித்து 3 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கி அசத்தினார் சாவ்ஜி தொலாகியா.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

இவர்கள் மூவரும் சாவ்ஜி தொலாகியாவின் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நிறுவனத்துடனான நீண்ட கால உறவை போற்றும் வகையில்தான் அவர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார்களை சாவ்ஜி தொலாகியா பரிசளித்தார்.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

சாவ்ஜி தொலாகியாவின் நிறுவனத்தில் சுமார் 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை இவர்களில் சுமார் 4,000 பேருக்கு, பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு 1,600 ஊழியர்களுக்கு கார், வீடு பரிசு.. இன்ப அதிர்ச்சி அளித்த வைர வியாபாரி..

சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை தேர்வு செய்துதான் சாவ்ஜி தொலாகியாக பரிசுகளை வழங்கி வருகிறார். இதன்மூலம் நாமும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் மற்ற ஊழியர்களுக்கும் ஏற்படும் என்பது சாவ்ஜி தொலாகியாவின் கருத்து. இந்த முதலாளி நல்ல முதலாளிதான்!

Most Read Articles

ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Gujarat Diamond Trader To Give Cars, Flats To 1,600 Employees As Diwali Gift. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X