வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. மாசு குறையும்.. இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

டீசல் வாகனங்களின் மாசு உமிழ்வை குறைப்பதுடன், அவற்றின் மைலேஜை அதிகரிக்க செய்யும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை, 57 வயதான மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

டீசல் வாகனங்களின் மாசு உமிழ்வை குறைப்பதுடன், அவற்றின் மைலேஜை அதிகரிக்க செய்யும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை, 57 வயதான மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையானது சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

குறிப்பாக டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் சுற்றுச்சூழலுக்கு மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கணக்கீட்டின்படி, இந்தியாவில் மொத்தம் 22 கோடி டீசல் இன்ஜின் வாகனங்கள் இயங்கி கொண்டிருந்தன.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

இது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரமாகும். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் 22 கோடி டீசல் இன்ஜின் வாகனங்கள் இயங்கி கொண்டிருந்த நிலையில், இன்று அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவேதான் சுற்றுச்சூழல் மிக மோசமானதொரு நிலையில் உள்ளது.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

இந்த சூழலில், டீசல் வாகனங்களின் காரணமாக சுற்றுச்சூழல் மிக மோசமாக மாசுபாடு அடைவதை தடுக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பம் ஒன்றினை, பர்சோத்தம் பிலாலியா என்ற மெக்கானிக்கல் இன்ஜினியர் தற்போது கண்டறிந்துள்ளார்.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

மெக்கானிக்கல் இன்ஜினியரான பர்சோத்தம் பிலாலியாவின் கண்டுபிடிப்பிற்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த பர்சோத்தம் பிலாலியாவுக்கு தற்போது 57 வயது ஆகிறது.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

பர்சோத்தம் பிலாலியா கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்பத்திற்கு, டீசல் வாகன பொல்யூசன் கண்ட்ரோல் சிஸ்டம் (Diesel Vehicle Pollution Control System) என பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

இதுகுறித்து பர்சோத்தம் பிலாலியா கூறுகையில், ''டீசல் வாகனங்கள் தற்போது அதிகப்படியான மாசுவை உமிழ்ந்து வருகின்றன. ஆனால் டீசல் வாகனங்களின் மாசு உமிழ்வை 50 சதவீதம் வரை கட்டுப்படுத்தும் திறன் நான் புதிதாக கண்டறிந்துள்ள தொழில்நுட்பத்திற்கு உள்ளது.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

இதுதவிர எனது கண்டுபிடிப்பு மூலமாக டீசல் வாகனங்களின் மைலேஜ் 35 சதவீதம் வரை அதிகரிக்கும். அதாவது தற்போது ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்கி கொண்டுள்ள டீசல் வாகனங்களில் எனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் 29-30 கிலோ மீட்டராக மைலேஜ் அதிகரிக்கும்.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

பொதுவாக இது போன்ற கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற ஐந்து முதல் 10 வருடங்கள் வரை ஆகும். ஆனால் நான் அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வெறும் ஒரே வருடத்தில் நான் காப்புரிமை பெற்று விட்டேன்.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதற்கு டீசல் வாகனங்கள் மிக முக்கிய காரணமாக உள்ளன. ஆனால் எனது தொழில்நுட்பமானது டீசல் வாகனங்களின் மாசு உமிழ்வை கட்டுப்படுத்துவதுடன், அவற்றின் மைலேஜையும் அதிகரிக்க செய்யும்'' என்றார்.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

பொதுவாக வாகனங்களில் உள்ள டீசல் எரியும்போது கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் ஆகிய 3 மோசமான வாயுக்கள் வெளியாகின்றன. இவைதான் சுற்றுச்சூழலுக்கு மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி வருகின்றன.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

ஆனால் பர்சோத்தம் பிலாலியாவின் தொழில்நுட்பமானது, இந்த 3 மோசமான வாயுக்களின் உமிழ்வை 50 சதவீதம் வரை கட்டுப்படுத்தி விடும். எந்தவொரு 4 ஸ்ட்ரோக் டீசல் இன்ஜின் வாகனத்திலும் பர்சோத்தம் பிலாலியாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

டீசல் இன்ஜின் வாகனங்களின் ஃப்யூயல் சிஸ்டம்ஸ் (Fuel Systems) மற்றும் ஃப்யூயல் பம்ப் (Fuel Pump) ஆகியவற்றின் டிசைனில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாக, அவை வெளியிடும் மோசமான வாயுக்களின் உமிழ்வை 50 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும்.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

அந்த மாற்றங்களை எவ்வாறு செய்வது? என்ற புதிய தொழில்நுட்பத்தைதான் மெக்கானிக்கல் இன்ஜினியரான பர்சோத்தம் பிலாலியா கண்டறிந்துள்ளார். அதற்கு மத்திய அரசும் தற்போது காப்புரிமையும் வழங்கிவிட்டது.

டீசல் வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இன்ஜினியர்

எனவே தன்னிடம் உள்ள வாகனம் ஒன்றில், இந்த புதிய தொழில்நுட்பத்தினை பர்சோத்தம் பிலாலியா புகுத்தியுள்ளார். அந்த வாகனத்தை தற்போது சூரத் நகரில் வைத்து பர்சோத்தம் பிலாலியா பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Monday, October 29, 2018, 12:45 [IST]
English summary
Gujarat Mechanical Engineer’s Innovation Will Help Curb Pollution By Diesel Vehicles. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+