உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஹாக்ராட் மற்றும் சைமன்ஸ் பி.எல்.எம். ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 3டி பிரிண்ட்டிங் காரை வடிவமைத்துள்ளனர்.

By Balasubramanian

அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஹாக்ராட் மற்றும் சைமன்ஸ் பி.எல்.எம். ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 3டி பிரிண்ட்டிங் காரை வடிவமைத்துள்ளனர்.

உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

லா பேன்டிட்டா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் ஹாக்ராட் நிறுவனத்தில் சைமன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் தொழிற்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வாகன உற்பத்தியில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் டூல்ஸ்கள் இல்லாமல் தயாரிக்க முடியும்.

உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

இந்த கார் தயாரிக்க சைமன்ஸ் நிறுவனத்தின் என்.எக்ஸ் சாப்ட்வேர், புதிய க்ளவுட் பேஸ்டு சாலிட் எட்ஜ் உள்ளிட்ட சாப்ட்வேர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த டிசைன்கள் முழுவதும ஹாக்ராட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலம் இந்த கார் வடிவைமக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

இந்த காருக்கான டிசைனை விர்சுவல் ரியலாலிட்டி முறையிலும், ஐஓடி, மிஷின் லெர்னிங் ஆகிய தொழிற்நுட்பத்தின் படி காருக்கான இன்ஜினியரிங் கட்டமைப்பும், காரை தயாரிக்க 3டி பிரிண்டிங் தொழிற்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

இது குறித்து ஹாக்ராட் நிறுவனத்தின் சி.டி.ஓ., கூறுகையில் : "ஹாக்ராட், சைமன்ஸ் பிஎல்எம் சாப்ட்வேரின் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெருகிறது. எங்களது நோக்கம் என்பது அழகிய பொருளுக்கு உகந்த வடிமைப்பு, வலுவான தொழிற்நுட்பம், அதிக எண்ணிக்கையிலான வடிவமைப்பு தான். ஹாக்ராடை பொருத்தவரை டிசைன் செய்யப்பட்ட பொருளின் தகவல்களை எடுத்து, அதன் மூலம் மிகச்சிறந்த மெக்கட்ரானிக்ஸ் முறையை வடிவமைப்பது தான்.

உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

தொழிற்சாலை ரீதியிலான டிசைகன்களின் பாகங்களை வடிவமைப்பது என்பது கடினமான வேலை தான். எங்கள் இரு நிறுவனங்களில் கூட்டு முயற்சியால் உலகின் சிறந்த டிஜிட்டல் டிசைன், இன்ஜினியரிங்,விஷூவலிஷேசன், தயாரிப்பு மற்றும் சோதனை திறன்களை வளர்த்துள்ளோம்." என கூறினார்.

உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

சைமன்ஸ் பிஎல்எம் சாப்ட்வேர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறுகையில் "ஹாக்ராட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் டிசைன் மிக அற்புதமாக இருக்கிறது. இது அசர வைக்கும் புதிய டிசைன் மற்றும் இன்ஜியரிங் கொண்டு அமைந்துள்ளது. லா பேன்டிட்டாவை நாங்கள் தயாரிப்பு துறையில் ஏற்பட்ட மிக முக்கிய புரட்சிகரமான தயாரிப்பாகவே பார்க்கிறோம்."

உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

இந்த காரின் திறன் எவ்வளவு இதில் உள்ள அம்சங்கள் என்ன, இதன் இயக்கம் எப்படிப்பட்டது? இதற்கான உத்தரவாதம் எப்படியானது? என்ற தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.

உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

நவீன காலத்தின் 3டி பிரிண்டிங் தொழிற்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் கார்களை 3டி பிரிண்டிங் மூலம் உருவாக்குவது என்பது மிக சவாலான காரியம் தான். எனினும் இது சாத்தியப்பட்டால், கார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள செவிடும் பெரும் தொகை குறைந்து காரின் விலைலகள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறையும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
English summary
HACKROD UNVEILS WORLD’S FIRST VIRTUAL REALITY-DESIGNED, AI-ENGINEERED, 3D-PRINTED CAR. Read in Tamil
Story first published: Thursday, April 5, 2018, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X