முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

கர்நாடக முதல்வர் குமாரசாமி, அரசு வழங்கிய டொயோட்டா பார்ச்சூனர் காருக்கு பதிலாக, தனது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்யூவி காரை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

By Arun

கர்நாடக முதல்வர் குமாரசாமி, அரசு வழங்கிய டொயோட்டா பார்ச்சூனர் காருக்கு பதிலாக, தனது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்யூவி காரை பயன்படுத்த முடிவு செய்துள்ளார். அந்த கார் குறித்த சில ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

கர்நாடக மாநில முதல் அமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா இருந்து வந்தார். அவர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில், அதிகாரப்பூர்வ காராக டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி-யை பயன்படுத்தினார். இந்த கார் அம்மாநில அரசால், சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

இதனிடையே சமீபத்தில் கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

சித்தராமையாவை போல் குமாரசாமியும், டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காரைதான் தனது அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்மாநில அரசு வழங்கும் காரை பயன்படுத்த போவதில்லை என குமாரசாமி முடிவெடுத்துள்ளார்.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

அதற்கு பதிலாக லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரை பயன்படுத்த குமாரசாமி முடிவு செய்துள்ளார். இது மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய கார் கிடையாது. லக்ஸரி எஸ்யூவி காரான லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக், முதல் அமைச்சர் குமாரசாமியின் சொந்த கார்.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரின் ஆரம்ப விலையே 1.75 கோடி ரூபாய். சாலை வரி, ரிஜிஸ்டரேஷன் இல்லாமலேயே 1.75 கோடி ரூபாய் வருகிறது. குமாரசாமியிடம் உள்ள காரில், 4.4 லிட்டர் வி8 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

முதல் அமைச்சர் குமாரசாமிக்கு, 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் உடலை வருத்தி கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். எனவேதான் லக்ஸரி எஸ்யூவி காரான லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரை பயன்படுத்த குமாரசாமி முடிவெடுத்துள்ளார்.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

குமாரசாமி இந்த காரை தேர்வு செய்ததில், அவரது குடும்பத்தினரின் பங்கும் உள்ளது. இந்த கார்தான் குமாரசாமிக்கு ராசியானது என அவரது குடும்பத்தினர் திடமாக நம்புகின்றனர். எனவே சென்டிமென்ட்டாக ரேஞ்ச் ரோவர் வோக் காரையே பயன்படுத்தும்படி குமாரசாமியிடம் அவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

ஒரு மாநிலத்தின் முதல்வர் தனது சொந்த காரை, அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தி கொள்ள சட்டத்தில் இடம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், குமாரசாமி இதற்கு அனுமதி உண்டு. ஆனால் அந்த காரின் விலைதான் கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

குமாரசாமி பயன்படுத்துவது கருப்பு நிற கார். ஒரு லிட்டருக்கு 12 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும். அந்த காரின் பதிவு எண் KA 42 P 0002. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி, கஸ்தூரி மீடியாஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அந்த கார் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமிக்கு பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என பல்வேறு முகங்கள் உள்ளன. ஏனெனில் தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக சினிமா தொடர்பான பணிகளை குமாரசாமி செய்து கொண்டிருந்தார்.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

குமராசாமியின் காரில், ஸ்பெஷல் ஷாக் அப்ஷர்பர்ஸ் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சௌகரியத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இருக்கைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. எனவே டொயோட்டா பார்ச்சூனர் காரை காட்டிலும் பல மடங்கு சொகுசு கிடைக்கும்.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

ஆனால் எஸ்யூவி செக்மெண்டிற்கு வரும் பலர், வேறு எந்த காரையும் விட டொயோட்டா பார்ச்சூனரைதான் அதிகம் விரும்புகின்றனர். பார்ச்சூனர் காரின் விலை 26.69 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்டான பார்ச்சூனர் 2.8 4x4 AT மாடலின் விலை 32.48 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி).

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

முன்னதாக குமாரசாமி கடந்த 5 ஆண்டுகளாக, ரேஞ்ச் ரோவர் வோக் காரை பயன்படுத்தி வருகிறார். மேற்கண்ட ஆல்டரேஷன்களுடன் சேர்த்து, மற்ற கார்களில் காண முடியாத மேலும் சில ஆல்டரேஷன்களும் குமாரசாமியின் காரில் செய்யப்பட்டுள்ளன.

முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...

இதனிடையே கடந்த காலங்களில், நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியது, தவறாக யு-டர்ன் எடுத்தது என 2 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய புகாரில் அந்த கார் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் 2 முறையும் அபராதம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: TOI

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Saturday, June 23, 2018, 12:30 [IST]
English summary
CM HD Kumaraswamy's customised SUV in the eye of austerity row. Read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+