பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் ஆட்டோ ரிக்ஸா ஓட்டி சென்ற போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் ஆட்டோ ரிக்ஸா ஓட்டி சென்ற போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

ஹாலிவுட் திரைப்பட உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் வில் ஸ்மித். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என வில் ஸ்மித்திற்கு பல்வேறு முகங்கள் உள்ளன. ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் வில் ஸ்மித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

அவ்வளவு ஏன்? இந்தியாவிலும் வில் ஸ்மித் பிரபலமான நபர்தான். அவருக்கென இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வில் ஸ்மித்தின் இன்டிபென்டன்ஸ் டே, மென் இன் பிளாக், சூசைட் ஸ்க்வாடு உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வில் ஸ்மித், தலைமைப்பண்பு குறித்த மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் மும்பை வந்திருந்தார். மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு மும்பை நகர வீதிகளில் ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பி விட்டார் வில் ஸ்மித்.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

அப்போது கண்களை கவரும் வகையில் வீதிகளில் வலம் வந்த மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஸாக்களை கண்டு வில் ஸ்மித் வியப்படைந்தார். உடனடியாக ஒரு ஆட்டோ ரிக்ஸாவை எடுத்து கொண்டு ஜாலியாக ஓட்ட தொடங்கி விட்டார் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

மும்பை வீதிகளில் வாகன நெரிசல் மிகவும் அதிகம். அதனை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல் வில் ஸ்மித்துடன் மேலும் சில ஆட்டோ ரிக்ஸா டிரைவர்களும் பாட்ஷா படம் போல் ஊர்வலமாக கிளம்பி விட்டனர். அந்த போட்டோ மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

Yogenshah S என்பவர் வெளியிட்ட வீடியோவின்படி, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற கர்வம் இல்லாமல் சாதாரண மனிதரை போல வில் ஸ்மித் ஆட்டோ ரிக்ஸா ஓட்டி சென்றுள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். வில் ஸ்மித் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய வீடியோவை கீழே காணலாம்.

இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஸாக்கள் மிகவும் பிரபலம். இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு மக்கள் இந்த ஆட்டோ ரிக்ஸாக்களை கண்டு வியப்படைவது என்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், மிகவும் குறுகலான சாலைகளிலும் ஆட்டோ ரிக்ஸா டிரைவர்கள் புகுந்து சென்று வருவது இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு மக்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

இந்தியாவின் பொது போக்குவரத்து அமைப்பானது மேற்கத்திய நாடுகளை போல் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியாக சென்று சேர இந்திய மக்கள் பலர் இன்னமும் ஆட்டோ ரிக்ஸாக்களைதான் நம்பியுள்ளனர்.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

இந்தியாவின் பஜாஜ் நிறுவனம் ஆட்டோ ரிக்ஸா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இங்கிருந்து அண்டை நாடுகளுக்கும் ஆட்டோ ரிக்ஸாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக சிஎன்ஜியில் இயங்கக்கூடிய ஆட்டோ ரிக்ஸாக்களும் தற்போது விற்பனையாகி வருகின்றன.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் ஆட்டோ ரிக்ஸாவை ஓட்டி சென்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான் மும்பையில் ஆட்டோ ரிக்ஸா ஒன்றில் பயணித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ

சல்மான் கான் ஆட்டோ ரிக்ஸாவில் பயணித்தபோது 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வந்தது. ஆனால் அந்த ஆட்டோ ரிக்ஸாவின் டிரைவருக்கு சல்மான் கான் 1,000 ரூபாயை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Tuesday, October 9, 2018, 16:09 [IST]
English summary
Hollywood Superstar Will Smith Driving An Autorickshaw In Mumbai Streets. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+