ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

By Balasubramanian

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காரானா ஹோண்டா அமேஸ் காரின் விலையை ஹோண்டா நிறுவனம் ரூ 31 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஹோண்டா அமேஸ் கார் அதிக அளவிலான விற்பனையை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

ஹோண்டா அமேஸ் கார் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் புதிய வெர்ஷன் அறிமுகமாகி மார்கெட் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் ஹோண்டா நிறுவனம் மொத்தம் 10,180 கார்களை விற்பனை செய்துள்ளது. இது தான் அந்நிறுவனத்தின் அதிகபட்ச ஒரு மாத விற்பனையாகும்.

ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

கடந்த ஜூன் மாதம் மொத்தம் 9,103 கார்கள் விற்பனையாகியுள்ளன. மே மாதம் 9,879 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காராக ஹோண்டா அமேஸ் கார் மாறியுள்ளது. இந்த கார் ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி காரை ரிபிளேஸ் செய்கிறது.

ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

தற்போது அந்த காருக்கான விலைய அதிகரித்துள்ளது ஹோண்டா நிறுவனம். அதன் படி பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை ரூ 5.59 லட்சம் விற்ற மேனுவல் இ வேரியன்ட் தற்போது ரூ5.80 லட்சம் ஆகவும், ரூ 6.49 லட்சம் விற்ற மேனுவல் எஸ் வேரியன்ட் இனி ரூ 6.60 லட்சமாகவும்.

ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

ரூ7.09 லட்சம் விற்ற வி வேரியன்ட் ரூ 7.20 லட்சமாகவும், ரூ 7.39 லட்சம் விற்ற சிவிடி எஸ் வேரியன்ட் இனி ரூ 7.50 லட்சமாகவும், ரூ 7.57 லட்சம் விற்ற மேனுவல் விஎக்ஸ் வேரியன்ட் ரூ 7.68 லட்சமாகவும், ரூ7.99 லட்சம் விற்ற சிவிடி வி வேரியன்ட் ரூ 8.10 லட்சமாகவும் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளுது.

Sr no. Honda Amaze Petrol Variants Old Prices (ex-Delhi) New Prices (ex-Delhi)
1 E MT ₹ 5,59,900 ₹ 5,80,500
2 S MT ₹ 6,49,900 ₹ 6,60,500
3 V MT ₹ 7,09,900 ₹ 7,20,500
4 S CVT ₹ 7,39,900 ₹ 7,50,500
5 VX MT ₹ 7,57,900 ₹ 7,68,500
6 V CVT ₹ 7,99,900 ₹ 8,10,500
ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

இந்த காரின் டீசல் வேரியன்டை பொருத்தவரை ரூ 6.69 லட்சமாக விற்கப்பட்ட மேனுவல் இ வேரியன்ட் ரூ 6.90 லட்சமாகவும், ரூ 7.59 லட்சமாக விற்ற மேனுவல் எஸ் வேரியன்ட் ரூ 7.70 லட்சமாகவும், ரூ 8.19 லட்சமாக விற்ற மேனுவல் வி வேரியன்ட் ரூ 8.30 லடசமாகவும்.

ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

ரூ 8.39 லட்சமாக விற்பனையான சிவிடி எஸ் வேரியன்ட் ரூ 8.50 லட்சமாகவும், ரூ 8.67 லட்சமாக விற்பனையான மேனுவல் எம்டி வேரியன்ட் ரூ8.78 லட்சமாகவும், ரூ8.99 லட்சமாக விற்பனையான சிவிடி வி வேரியன்ட் ரூ9.10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Sr no. Honda Amaze Diesel Variants Old Prices (ex-Delhi) New Prices (ex-Delhi)
1 E MT ₹ 6,69,900 ₹ 6,90,500
2 S MT ₹ 7,59,900 ₹ 7,70,500
3 V MT ₹ 8,19,900 ₹ 8,30,500
4 S CVT ₹ 8,39,900 ₹ 8,50,500
5 VX MT ₹ 8,67,900 ₹ 8,78,500
6 V CVT ₹ 8,99,900 ₹ 9,10,500
ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

இந்த விலை உயர்வு காரணமாக ஹோண்டா அமேஸ் காரின் விலை அதன் நேரடி போட்டியாளரான மாருதி சுஸூகி டிசையர் காரை விட விலை அதிகமாகியுள்ளது. அந்த காரின் விலை ரூ 5.56 லட்சத்தில் பெட்ரோல் வேரியன்டில் இருந்து ரூ 9.43 லட்சம் வரையிலான டீசல் வேரியன்ட்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

ஹோண்டா அமேஸ் காரை பொருத்தவரை புதிய தலைமுறை அமேஸ் காரில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங்கில் சில பிழைகள் இருப்பதால் 7,290 கார் திருப்ப அழைக்கப்பட்டன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

01. ஒன்றுக்கு மேற்பட்ட வாகனம் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய கட்டளை

02. மொபைல் ஆப் மூலம் பைக் ஓட்டுநர்களை பிடிக்கும் போலீஸ்; டிஜிட்டல் இந்தியா புதிய பரிணாமம்

03. அஜீத் போல் சாலைகளில் சீறிப்பாயலாம்.. 3 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் அட்டகாசமான பைக்குகள்..

04. பைக், கார்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவதில் புதிய சிக்கல்; கோர்ட் உத்தரவால் குழப்பம்

05. பெட்ரோல் வளம் மூலம் அடி வயிற்றில் அடிக்கும் அரபு நாடுகள்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த இந்தியா

Tamil
English summary
Honda Amaze Prices Increased By Up To ₹ 31,000. Read in Tamil
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more