மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனையில் மஹிந்திரா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி விற்பனையில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.

By Balasubramanian

ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனையில் மஹிந்திரா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி விற்பனையில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு ஹோண்ட அமேஸ் காருக்கு மக்கள் மத்தியில் எழுந்த வரவேற்ப்பால் அதன் விற்பனை அதிகரித்ததே காரணம் எனதெரியவந்துள்ளது.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாத விற்பனையை விட கடந்த ஜூன் மாத விற்பனையில் 37.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அந்நிறுவனம் 17,602 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

ஆனால் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் அந்நிறுவனம் 12,804 வாகனங்களை மட்டுமே இயங்கியது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா அமேஸ் கார் தான். கடந்த மாதம் மட்டும் அந்நிறுவனம் 9103 அமேஸ் கார்களை விற்பனை செய்தது.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தற்போது மஹிந்திரா நிறுவனத்தை விற்பனையில் முந்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 15,942 வாகனங்களை மட்டும் விற்பனை செய்துள்ளன. ஹோண்டா அமேஸின் விற்பனை தான் இதை சாத்தியப்படுத்தியுள்ளதோடு, ஹோண்டா நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் வாகனங்களின் பட்டியலில் அமேஸ் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

இது குறித்து அந்நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் விற்பனைதுறை இயக்குநர் ராஜேஷ் கோயல் கூறுகையில் : "ஹோண்டா அமேஸ் காருக்கு மக்கள் அளித்த அதித வரவேற்பால் கடந்த ஜூன் மாத விற்பனையை அதகிரத்துள்ளோம். இதற்காக வாடிக்கையாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

தற்போது அமேஸ் காரின் தயாரிப்பை அதிகரித்துள்ளோம். அதற்காக தேவை தற்போது மார்கெட்டில் ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு பருவ காலம் சீக்கிரம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் ஆட்டோமொபைல் துறை நல்ல வளர்ச்சியை பெறும்"என கூறினார்.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

ஹோண்டா அமேஸ் கார்கள் தற்போது ரூ 5.6 லட்சத்தில் துவங்கி ரூ 9 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. புதிய மாடல் கார் பழைய கால் காரை விட மார்டனாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் லுக் ஒரு விதத்தில் பேபி சிவிக் கார் போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

புதிய ஹோண்டா அமேஸ் கார் பழைய மாடல் காரை விட சற்று பெரியதாக அமைந்திருக்கிறது. இதனால் பழைய மாடல் காரை விட சிறந்த இட வசதி இந்த காரில் இருக்கும். ஹோண்டா அமேஸ் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் தற்போது விற்பனையாகி வருகிறத. இரண்டு இன்ஜினிலும் சிவிடி ஆட்டோகியர் ஆப்ஷனும் கிடைக்கிறது.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

இந்த பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை பொருத்தவரை புதிய அமேஸ் கார்களில் உள்ள இன்ஜின் பழைய கார்களில் உள்ள அதே இன்ஜின் தான் இதிலும் உள்ளது. ஆனால் ஆட்டோகியர் ஷேரியன்டகளில் இன்ஜின்கள் அதற்காக டியூன் செய்யப்பட்டுள்ளன.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

இந்த கார் 1.5 லிட்டர் ஐடிடெக் டர்போ சார்ஜ் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிவிடி கியர் பாக்ஸில் 80 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் மேனுவல் கியர் பாக்ஸில் 98.6 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முந்தியது ஹோண்டா; அமேஸ் அமோக விற்பனை

பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிவிடி மற்றம் மேனுவல் கியர்பாக்ஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்களிலும் 87 பிஎச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, July 5, 2018, 11:07 [IST]
English summary
Honda beats Mahindra. Amaze sales Amazing. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+