ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஹோண்டா நிறுவனம் சிட்டி, அமேஸ் மற்றும் டபிள்யூஆர் வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark

ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில் சிறப்பு பதிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. ஹோண்டா சிட்டி ஆனிவர்சரி எடிசன் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய மாடல் இசட்எக்ஸ் என்ற டாப் வேரியண்ட்டில் கிடைக்கும்.

ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஹோண்டா சிட்டி ஆனிவர்சரி எடிசன் மாடலில் 20ம் ஆண்டு ஆனிவர்சரி சின்னம், பம்பர்களில் அலங்காரம் உள்ளிட்டவை கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. ஹோண்டா கனெக்ட் அப்ளிகேஷனும் ஒரு மாதம் இலவச பயன்படுத்தும் வசதி கொண்டதாக வந்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் ரூ.4,000 முதல் ரூ.4,500 வரை கூடுதல் விலையில் கிடைக்கும்.

ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் ஆனிவர்சரி எடிசன் பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் ரூ.13.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. டீசல் மாடல் ரூ.13.82 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

அதேபோன்று, ஹோண்டா அமேஸ் காரில் பிரைடு என்ற ஸ்பெஷல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் நவீன அம்சங்கள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் மாடல் அமேஸ் காரின் எஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கும்.

ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஹோண்டா அமேஸ் பிரைடு மாடலில் 7.0 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பெஷல் சீட் கவர்கள், முன்புற இருக்கைக்கான ஆர்ம் ரெஸ்ட், ஸ்டீல் வீல் கவர், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஸ்பெஷல் பேட்ஜ் பொருத்தப்பட்டு கிடைக்கிறது.

ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஹோண்டா அமேஸ் காரின் பிரைடு எடிசன் பெட்ரோல் மாடல் ரூ.6.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.7.83 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். சாதாரண மாடலைவிட ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை கூடுதல் விலையில் வந்துள்ளது.

ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி காரில் எட்ஜ் எடிசன் என்ற பெயரில் சிறப்பு பதிப்பு வந்துள்ளது. இந்த மாடல் எஸ் வேரியண்ட்டை அடிப்படையாக வைத்து அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரில் 16 அங்கு கன்மெட்டல் மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பின்புறத்தில் பதிக்கப்பட்டு இருக்கிறது. ஐஆர்விஎம் டிஸ்ப்ளேவுடன் ரியர் பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஒரு மாத இலவச பயன்பாட்டுடன் ஹோண்டா கனெக்ட் அப்ளிகேஷன் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.

ஹோண்டா சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரின் பெட்ரோல் மாடல் ரூ.8.01 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.9.04 லட்சம் விலையிலும் வந்துள்ளது. சாதாரண மாடலைவிட ரூ.21,000 முதல் ரூ.23,000 வரை கூடுதல் விலையில் வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 15, 2018, 10:31 [IST]
English summary
Honda Cars India has announced the introduction of special editions of three of its models in India: Honda City 20th Anniversary Edition, Honda Amaze Pride Edition and Honda WR-V Edge Edition.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+