3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!

ஹோண்டா சிட்டி காரின் SV வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு எட்ஜ் என்ற பெயரில் ஸ்பெஷல் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா டபிள்யூ காரில் எட்ஜ் என்ற ஸ்பெஷல் எடிசனும், பிஆ

By Saravana Rajan

பண்டிகை காலத்தை முன்னிட்டு மூன்று ஹோண்டா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!

ஹோண்டா சிட்டி எட்ஜ் எடிசன்:

ஹோண்டா சிட்டி காரின் SV வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு எட்ஜ் என்ற பெயரில் ஸ்பெஷல் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா மற்றும் அதற்கான திரை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி:

ஹோண்டா டபிள்யூஆர்வி காம்பேக்ட் எஸ்யூவியின் S வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக வந்துள்ளது. இந்த மாடலில் Alive என்ற வாசகத்துடன் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!

இந்த காரில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் இடம்பெற்றிருக்கின்றன. திரை வசதியுடன் ரியர் வியூ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிசன் லோகோவுடன் கூடிய ஸ்பெஷல் சீட் கவர்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளது. புதிய ஸ்டீயரிங் வீல் கவர் மற்றும் ஒரு மாத இலவச சந்தாவுடன் ஹோண்டா கனெக்ட் செயலி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!

ஹோண்டா பிஆர்வி:

ஹோண்டா பிஆர்வி 7 சீட்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஸ்டைல் என்ற பெயரில் வந்துள்ளது. இந்த காரில் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருக்கிறது. புதிய பம்பர் புரொடெக்டர், டெயில்கேட் ஸ்பாய்லர், பாடி சைடு மோல்டிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!

இந்த மூன்று கார்களிலும் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹோண்டா சிட்டி மற்றும் பிஆர்வி கார்களில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!

ஹோண்டா சிட்டி மற்றும் பிஆர்வி கார்களின் பெட்ரோல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. இதில், ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியும் கொடுக்கப்படுகிறது.

3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!

மூன்று கார்களிலுமே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!

ஹோண்டா சிட்டி காரின் எட்ஜ் எடிசன் காரின் பெட்ரோல் மாடல் ரூ.9.75 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.11.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளது. அதேபோன்று, ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.8.02 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.9.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகமாகி இருக்கிறது. ஹோண்டா பிஆர்வி காரின் ஸ்டைல் எடிசன் காரின் பெட்ரோல் மாடல் ரூ.10.44 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.11.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 6, 2018, 17:50 [IST]
English summary
Honda City, WR-V And BR-V special editions launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+