புதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்!!
புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய 10ம் தலைமுறை ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.
புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலக அளவில் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்த கார் மாடல்களில் ஒன்றான ஹோண்டா சிவிக் கார் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 10-ம் தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிவிக் காரின் டிசைன் மிகவும் வசீகரமான அம்சங்களுடன் மாற்றங்கள் கண்டுள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், பியானோ பிளாக் க்ரில் அமைப்பு, க்ரோம் வளையத்துடன் பனி விளக்குகள் அறை ஆகியவை முன்புற வசீகரத்தை அதிகரிக்கின்றன.

புதிய ஹோண்டா சிவிக் காரின் சோல்டன் லைன் முன்புறத்தில் ஹெட்லைட்டிலிருந்து பின்புறத்தில் டெயில் லைட்டுகள் வரை இணைக்கும் விதத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புத்தம் புதிய அலாய் வீல்கள் காரின் கம்பீரத்தை கூட்டுகிறது. டெயில் லைட்டுகள் மிகவும் சிறப்பாக இருப்பதுடன், கூரை மிக வித்தியாசமான முறையில் பின்புற பூட்ரூமுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட்டுகள்,க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், சிவிடி ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், கொலிஷன் வார்னிங் மற்றும் மிட்டிகேஷன் வார்னிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 2.0 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 189 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிவிக் கார் உலக அளவில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான விலையில் இந்த புதிய கார் இந்திய மார்க்கெட்டிற்கு வரும். டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலான்ட்ரா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








