ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நேரடி போட்டியாளரை களமிறக்க உள்ளது ஹோண்டா கார் நிறுவனம். ஹோண்டா சிட்டி காரில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்க

By Saravana Rajan

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நேரடி போட்டியாளரை களமிறக்க உள்ளது ஹோண்டா கார் நிறுவனம். அந்த அசத்தலான கார் மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!!

ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு இருக்கும் வரவேற்பு பல கார் நிறுவனங்களின் கண்களை உறுத்தி வருகிறது. க்ரெட்டா மார்க்கெட்டை குறிவைத்து பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய பல கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில், ஹோண்டா கார் நிறுவனம் தனது எச்ஆர்வி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!!

புதிய ஹோண்டா எச்ஆர்வி கார் மாடல் க்ராஸ்ஓவர் ரக வடிவமைப்பை பெற்றிருக்கிறது. பிரிமியம் க்ராஸ்ஓவர் மாடல் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது. இதனால், இந்த ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு எதிராக தனித்துவமான மாடலாக நிலைநிறுத்தப்படும்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!!

இந்த புதிய ஹோண்டா கார் 5 சீட்டர் மாடலாக இருக்கும். உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும் என்று நம்பலாம். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!!

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பம்பர் அமைப்பு மற்றும் ஹோண்டா லோகோவுடன் வலிமையான க்ரோம் பட்டை அமைப்பு உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும். பக்கவாட்டில் பெரிய அளவிலான அலாய் வீல்கள், பாடி கிளாடிங் சட்டங்கள் எஸ்யூவிக்குரிய மிரட்டலை தருகின்றன.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!!

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 116 பிஎச்பி பவரையும் அளிக்ககும். டீசல் எஞ்சின் 98 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!!

ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே இந்த எஸ்யூவி அசெம்பிள் செய்யப்படும் என்பதால், விலையை மிக சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 18, 2018, 13:36 [IST]
English summary
Honda is all set to launch the new CR-V crossover SUV in the Indian market in October 2018. We had also reported that the new Honda Civic will be introduced in the country in 2019. Now, according to a report from Livemint, Honda will also launch the HR-V sub-compact SUV in India by the end of 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+